கூழாங்கல் (திரைப்படம்)
கூழாங்கல் (Pebbles) 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். அறிமுக இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கிய முதல் திரைப்படம்.[1] திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் தயாரிப்பாரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் இத்திரைப்படத்தைத் தங்களது ரவுடி பிக்சர்சு நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.[2] இத்திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவாளர்களாக ஜெயா. பார்த்திபன், விக்னேஷ் குமுளையும், படத்தொகுப்பாளராக கணேஷ் சிவாவும் பணியாற்றியுள்ளனர். தயாரிப்புஇயக்குநர் வினோத்ராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடித்தளமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதையை அவர் உருவாக்கியுள்ளார்.[3] இக்கதைக்கான பின்களத்திற்காக வெகுநாள் தேடிப் பின்னர் இறுதியாக மதுரைக்கருகே, மேலூர் மவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி என்ற ஊரைத் தேர்வு செய்தார். இத்திரைப்படம் 30 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் இடம்பெறும் மலை ஆயிரமாண்டுகள் பழமையானது. 2021 ஆம் ஆண்டு, பிப்பிரவரி நான்காம் நாளன்று நெதர்லாந்தில் நடைபெற்ற 50 ஆவது இராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.[4] அதே ஆண்டின் ஏப்ரல் 28 முதல் மே 8 வரை நடைபெற்ற புது இயக்குநர் மற்றும் புதுத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இத்திரைப்படம் முறையாகத் தேர்வானது.[5] மேலும் தென்கொரியத் திரைப்படவிழாவிலும் தேர்வானது.[6] அந்த ஆண்டின் மே 20 முதல் 27 வரை நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்சின் இந்தியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[7] மே மாதம் 29 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற குயிவ் பன்னாட்டுத் திரைப்படவிழா: மோலோடிசுட்டிலும் திரையிடப்பட்டது.[8] 2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்தியத் திரைப்படங்களுள் கூழாங்கல்லும் ஒன்றாகும்.[9] பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia