கெத்சமனி31°46′46″N 35°14′25″E / 31.779402°N 35.240197°E ![]() கெத்சமனி அல்லது கெத்சமனே (Gethsemane; கிரேக்கம்: Γεθσημανή, எபிரேயம்: גת שמנים, Classical Syriac: ܓܕܣܡܢ, பொருள்" "எண்ணெய் ஆலை") எருசலேமிலுள்ள ஒலிவ மலை அடியில் காணப்படும் ஒரு தோட்டமாகும். இங்கு இயேசு கிறிஸ்து வேண்டுதல் செய்ததாலும் இயேசுவின் சாவுக்கு முன் இயேசுவின் சீடர்கள் நித்திரை செய்ததாலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெயர்கெத்சமனி (Γεθσημανή) என்பது மத்தேயு நற்செய்தியிலும்[1] மாற்கு நற்செய்தியிலும்[2] கிரேக்க மொழியிலும் காணப்படுகிறது. இப்பெயர் அரமேயம் (ܓܕܣܡܢ, Gaḏ-Šmānê; கட் ஸ்மானே) மூலம், "எண்ணெய் ஆலை" என்ற பொருளில் இருந்து வந்தது.[3] மத்தேயு (26:36), மாற்கு (14:32) இடம் அல்லது பண்ணை (χωρἰον; 18:1) எனக் குறிப்பிடுகின்றன.யோவான் நற்செய்தி இயேசு தோட்டத்திற்கு (κῆπος) அவருடைய சீடர்களோடு சென்றார் எனக் குறிப்பிடுகிறது.[4] உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia