கேசவ் மகராச்
கேசவ் மகராச் (Keshav Maharaj, பிறப்பு: 7 பெப்ரவரி 1990) ஒரு தென்னாப்பிரிக்கத் தொழில்-முறைத் துடுப்பாட்ட வீரர். இவர் தென்னாப்பிரிக்கத் தேசிய அணியில் தேர்வு, பன்னாட்டு ஒருநாள், பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தற்போது வரையிடப்பட்ட நிறைவுப் போட்டிகளில் துணைத்தலைவராக விளையாடுகிறார். இவர் ஓர் இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளரும், கீழ்-மட்ட மட்டையாட்ட வீரரும் ஆவார். இவத் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை உள்ளூர் குவாசூளு-நட்டால் அணிய்க்காக 2006 இல் விளையாடினார். 2016 நவம்பரில் தென்னாப்பிரிகாவுக்காக தேர்வுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.[1][2] 2021 செப்டம்பரில், முதல் தடவையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியின் தலைவராக இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.[3] அதே காலப்பகுதியில் இலங்கைக்கு எதிரான இ20ப போட்டியிலும் தலைமைப் பொறுப்பில் விளையாடினார்.[4] வாழ்க்கைக் குறிப்புகேசவ் மகராச் டர்பன் நகரில் ஆத்மானந்த் மகராச், காஞ்சனமாலா ஆகியோருக்கு 1990 பெப்ரவரி 7 இல் பிறந்தார். கேசவின் பெற்றோரின் பெற்றோர் இந்தியாவில் உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]] பிறந்து 1874 இல் தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள்.[5] தந்தை ஆத்மானந்த் குவசூலு-நத்தால் துடுப்பாட்ட அணியில் இலக்குக் காப்பாளராக விளையாடினார்.[5] கேசவ் மகராச் ஒரு கதக் நாட்டியக் கலைஞரான லெரிசா முனுசாமி என்பவரை 2022 ஏப்ரலில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia