கேரவன்செராய்கேரவன் செராய் (ஆங்கிலம்: Caravanserai) [1] என்பது சாலையில் பயணிக்கும் பயணிகள் (வணிகர்கள்) ஓய்வெடுக்கும் ஒரு விடுதியாகும். அவர்கள் நாளின் இறுதியில் தங்கி ஓய்வெடுத்து அன்றைய பயணத்திலிருந்து மீளவும் முடியும். ஆசிய, வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கிய வர்த்தக பாதைகளின் வலையமைப்பில் மக்கள் பயணிப்பது, வர்த்தகம், தகவல் தொடர்பு போன்றவற்றை இந்த விடுதிகள் ஆதரித்தது. குறிப்பாக பட்டுப் பாதை. இந்த வகையான சாலையோர விடுதிகள் பட்டுப் பாதையில் மட்டுமல்லாமல், அகாமனியப் பேரரசின் அரசருக்கான சாலையிலும், 2,500 கிலோமீட்டர் நீளமுள்ள (1,600 மைல்) பழங்கால நெடுஞ்சாலை, எரோடோட்டசின் கூற்றுப்படி சர்தீசிலிருந்து சூசா வரை நீண்டுள்ளது: [2] இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தலைநெடுஞ்சாலையில், குறிப்பாக முகலாய டெல்லி மற்றும் வங்காள சுபா பகுதியில் மற்ற குறிப்பிடத்தக்க நகர்ப்புற சாலையோர விடுதிகள் கட்டப்பட்டது. ![]() கேரவன் செராய்![]() இந்த வார்த்தை கேரவன்சரி, கேரவன்சாரே, கேரவன்செரே மற்றும் கேரவன்சரா என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . பாரசீக சொல் کاروانسرای kārvānsarāy என்பது கார்வன் " கேரவன் " ஐ சாரி "அரண்மனை", "மூடப்பட்ட நீதிமன்றங்களுடன் கட்டிடம்" ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு கூட்டுச் சொல்லாகும், இதில் பாரசீக பின்னொட்டு -y சேர்க்கப்பட்டுள்ளது. இங்கே "கேரவன்" என்றால் நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், யாத்ரீகர்கள் அல்லது பிற பயணிகளின் குழு எனப் பொருள்படும். செராய் என்ற சொல் சில நேரங்களில் கேரவன்செரையின் உட்பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது. சாரை என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட பல இடப் பெயர்கள் வளர்ந்தன: முகலாய செராய், சாராய் ஆலம்கீர் மற்றும் டெல்லி சராய் ரோகில்லா ரயில் நிலையம், மற்றும் பல பெரிய இடங்களும் "அரண்மனை" என்பதன் அசல் பொருளை அடிப்படையாகக் கொண்டவை. கான்![]() பாரசீக சாலையோர விடுதிகள் நகரங்களுக்கு வெளியே ஒரு பெரிய சாலை நிலையமாக கட்டப்பட்டது. ஒரு ஊருக்குள் கட்டப்பட்ட ஒரு சத்திரம் சிறியதாக இருக்கும் [3] இது பாரசீக மொழியில் கான் ( خان என்று அறியப்பட்டது ) (மத்திய பாரசீக ஹானிலிருந்து (xān, “வீடு”)). மத்திய கிழக்கில் "கான்" என்ற சொல் சாலையோர சத்திரம் மற்றும் உள்-நகர சத்திரம் ஆகிய இரு அர்த்தங்களையும் உள்ளடக்கியது. துருக்கியில் இந்த சொல் ஹான் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உதுமானிய வெற்றியின் மூலம் வந்த அதே வார்த்தை போசாங்கியிலும் பயன்படுத்தப்பட்டது. [4] அரபு இலக்கியத்தில் கேரவன்செராய்அல்-முகாதாசி அரபு புவியியலாளர் பொ.ச. 985 இல் பாலஸ்தீன மாகாணத்தில் உள்ள விடுதிகள், அல்லது வழிப்போக்கர்களின் தங்குமிடம் பற்றி எழுதினார். அந்த நேரத்தில் சிரியாவின் நிலப்பரப்பின் கீழ் பட்டியலிடப்பட்ட ஒரு மாகாணம் இவ்வாறு கூறுகிறது: "சிரியாவில் வரிகள் பெரிதாக இல்லை." [5] இங்குள்ள குறிப்பு, பொருட்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் வரி வசூலிக்கும் கடமைகள் பற்றிக் குறிப்பிடபட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் மற்றும் அவற்றின் சுமை மிருகங்கள் பொதுவாக இந்த இடங்களில் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தப்படுகின்றன. எகிப்தின் பாத்திமிட் இராச்சியத்திற்கு வருவாய் ஈட்டும்போது, இந்த பொருட்களுக்கான வரி முழுமையாக செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாயிலிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டனர். கட்டிடக்கலைமிகவும் பொதுவாக ஒரு கேரவன்செராய் என்பது ஒரு சதுர அல்லது செவ்வக சுவர் வெளிப்புறம் கொண்ட ஒரு கட்டிடமாகும், ஒட்டகங்கள் போன்ற பெரிய அல்லது கனமான மிருகங்களை உள்ளே நுழைய அனுமதிக்கும் அளவுக்கு ஒற்றை முன்வாயில் அகலமானது. வணிகர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்கள், விலங்குகள் மற்றும் வணிகப் பொருள்களுக்கு இடமளிக்கும் ஒரே மாதியான கடைகள், முன்புறத்தில் ஒரு பெரிய ஜன்னல் கொண்ட பகுதி, முக்கிய இடங்கள் அல்லது அறைகள் இந்த பகுதிக்குள் அமைக்கப்பட்டன. [6] கேரவன்செராய்கள் மனித மற்றும் விலங்குகளின் நுகர்வு, சலவை மற்றும் சடங்குகளுக்கு தண்ணீரை வழங்கியது. சில நேரங்களில் இங்கு அதிகமான குளியல் அறைகளைக் கொண்டிருந்தது. இங்கு விலங்குகளுக்கு தீவனத்தையும் வைத்திருந்தனர். மேலும் பயணிகளுக்கு தேவையான பொருட்களைப் பெறக்கூடிய கடைகளையும் கொண்டிருந்தது. கூடுதலாக, சில கடைகள் வியாபாரிகளிடமிருந்து பொருட்களையும் வாங்கின.. [7] 14 ஆம் நூற்றாண்டில் அசர்பைஜானில் நிறுவப்பட்ட முல்தானி கேரவன்செராய், இப்போது ஒரு உணவகமாக உள்ளது. இது சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் முற்றத்தை சுற்றி பால்கனிகளுடன் மிகவும் பழமையான பாணியைக் கொண்டுள்ளது. [8] மேலும் காண்கஇஸ்லாமியக் கட்டிடக்கலை பாரசீகக் கட்டிடக்கலை பாரசீகப் பூங்கா மற்றும் பாக் குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia