கேலோபெர்டிக்சு
சிவப்பு சுண்டங்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
துணைக்குடும்பம்:
பெர்டிசினே
பேரினம்:
கேலோபெர்டிக்சு
மாதிரி இனம்
டெட்டிராவ் இசுபேடிசெசு (சிவப்பு சுண்டங்கோழி )ஜெமிலின், 1789
சிற்றினம்
உரையினைக் காண்க
கேலோபெர்டிக்சு (Galloperdix ) என்பது பெசண்ட் குடும்பமான பாசியானிடேவில் உள்ள மூன்று சிற்றினங்களைக் கொண்ட பறவைகளின் பேரினமாகும் . இந்த தரைவாழ் பறவைகள் இந்தியத் துணைக் கண்டத்தில் , சிவப்பு சுண்டங்கோழி மற்றும் வண்ணந்தீட்டிய சுண்டங்கோழிகளுடன் இந்தியாவில் உள்ள காடுகள் மற்றும் புதர்க்காடுகளில் காணப்படுகின்றன. மேலும் இலங்கைச் சுண்டங்கோழி இலங்கையின் காடுகளில் உள்ளன. ஆப்பிரிக்காவில் பரவலாகக் காணப்படும் டெர்னிசுடிசு பேரினத்தின் உறுப்பினர்களுடன் "சுண்டங்கோழி" என்ற பொதுவான பெயரை இவை பகிர்ந்து கொள்கின்றன.[ 1]
முட்டை, வைசுபேடன் அருங்காட்சியக சேகரிப்பில்
வகைப்பாட்டியல்
கேலோபெர்டிக்சு பேரினமானது 1845ஆம் ஆண்டில் ஆங்கில விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் ப்ளைத் என்பவரால் சிவப்பு சுண்டங்கோழி என்ற ஒற்றை சிற்றினத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இது மாதிரி இனமாகும் .[ 2] பேரினப் பெயர் இலத்தீன் வார்த்தையான கேலசு "பண்ணைச் சேவல்" என்பதற்கான பெர்டிக்சுடன் "பார்ட்ரிட்ஜ்" என்று பொருள்படும்.
கேலோபெர்டிக்சு பேரினமானது பாலிபிளெக்ட்ரான் பேரினத்தின் சகோதர குழுவாகும். இவை ஒன்றாக ஹேமடார்டிக்சின் சகோதர இனக்குழுவினை உருவாக்குகின்றன.[ 3] [ 4]
சிற்றினங்கள்
கேலோபெர்டிக்சு பேரினமானது மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது. அவை:[ 1]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 Gill, Frank ; Donsker, David; Rasmussen, Pamela , eds. (July 2021). "Pheasants, partridges, francolins" . IOC World Bird List Version 11.2 . International Ornithologists' Union. Retrieved 25 November 2021 .
↑ Edward Blyth (1845). "On the Leiotrichane Birds of the Subhemalayas by B.H. Hodgson, Esq.: with some additions and annotations, — a Synopsis of the Indian Pari, — and of the Indian Fringillidae, By E. Blyth" . Journal of the Asiatic Society of Bengal 13, Part 2 (156): 933-944 [936 note]. https://www.biodiversitylibrary.org/page/40126029 . Although the title page is dated 1844, the article was not published until 1845.
↑ Sun, K; Meiklejohn, K. A; Faircloth, B. C; Glenn, T. C; Braun, E. L; Kimball, R. T (2014). "The evolution of peafowl and other taxa with ocelli (eyespots): A phylogenomic approach" . Proceedings of the Royal Society B: Biological Sciences 281 (1790): 20140823. doi :10.1098/rspb.2014.0823 . http://www.faircloth-lab.org/assets/pdf/keping-et-al-2014-prsb.pdf .
↑ Kimball, R.T.; Hosner, P.A.; Braun, E.L. (2021). "A phylogenomic supermatrix of Galliformes (Landfowl) reveals biased branch lengths". Molecular Phylogenetics and Evolution 158 : 107091. doi :10.1016/j.ympev.2021.107091 .