கேவியட் மனுகேவியட் மனு அல்லது முன்னெச்சரிக்கை மனு (Caveat Petition) என்பது தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு ஆகும்.[1] கேவியட் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு முன்னெச்சரிக்கை என்று பொருள்.[2][3] முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே, வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். நீதிமன்றத்தில் ஒருவர் ஒரு விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மைப் பாதிக்கும் எனக் கருதும் ஒருவர், தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பு கூறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர். இங்கு ஒருவர் என்பது தனியொரு நபராகவும் இருக்கலாம் அல்லது நிறுவனமாகவும் இருக்கலாம். கேவியட் மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்றுத்தான் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என்பதால், மனு பதிந்தவரின் உரிமை காக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அனைத்திந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும், தங்களது (தமிழ்நாடு அரசு) கருத்தைக் கேட்காமல், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி, 26 மே 2016 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவை தாக்கல் செய்தது.[4][5] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia