கே. அப்பாவு பிள்ளை
கே. அப்பாவு பிள்ளை (K. Appavu Pillai, ஏப்ரல் 15, 1911 - அக்டோபர் 1,1973 ) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஓசூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] கே. அப்பாவு பிள்ளை பிரபலமாக கே. ஏ. பி (K.A.P) என்று அழைக்கப்படுவார். அப்பாவு பிள்ளை 30 ஆண்டுகள் தொடர்ந்து ஓசூர் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் தனது உயர்நிலைக் கல்வியை ஒசூரிலுள்ள சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட நகராண்மைக் கழகப் பள்ளியில் பயின்றார். இவரது இளம் வயதிலேயே இவரது தந்தை ஒசூரில் பரவிய பிளேக் நோயால் இறந்தார் . அதன் பின்பு தமது சகோதரியால் வளர்க்கப்பட்டார். 1945 ஆம் ஆண்டு கே. அப்பாவுப்பிள்ளை அவர்களுக்கும் பொன்னம்மாள் அவர்களுக்கும் ஓசூரில் திருமணம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்புஅரசியலில் ஈடுபாடுகொண்ட இவர் இவர் 1932 - ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். 1943ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட்டு, ஓசூர் பஞ்சாயத்து போர்டு தவைராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து 30 ஆண்டுகள் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஓசூர் பஞ்சாயத்து போர்டு தலைவராகப் தனது இறுதி காலம்வரை ( 01 . 10 . 1972) வரை பணியாற்றினார். வகித்த பதவிகள்
இறப்புகே . அப்பாவு பிள்ளை 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் 1973 அக்டோபர் முதல் நாளன்று அன்று ஓசூரில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார். கௌரவங்கள்ஒசூர் பேரூராட்சியாக இருந்த காலத்தில் 1980களின் புதியதாக ஒசூரில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்துக்கு கே. அப்பாவு பிள்ளை அவர்களின் பெயர் வைக்கப்பட்டது. இந்த பழைய பேருந்து நிலையம் அகற்றபட்டு 6. 80 கோடி செலவில் புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டு 2007 ஆகத்து 31 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 10.5 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டு 2010 சூலை 18 அன்று மு. க. ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்துக்கும் ஒசூர் கே. அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஒசூர் பேரூராட்சி அலுவலக (பழைய நகராட்சி அலுவலகம்) வளாகத்தில் அப்பாவு பிள்ளைக்கு சிலை நிறுவப்பட்டது. மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia