செஞ்சி கே. எஸ். மஸ்தான் |
---|
 |
|
சிறுபான்மையினர் நலன், வெளிநாட்டு வாழ் தமிழர் நலன், அகதிகள், வகுப்பு வாரியம் ஆகிய துறைகளின் தமிழக அமைச்சர் |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் 7 மே 2021 |
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் |
---|
பதவியில் 2016–நடப்பு |
முன்னையவர் | அ. கணேஷ்குமார் |
---|
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 31 மே 1955 (1955-05-31) (அகவை 70) |
---|
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
---|
துணைவர் | சைத்தானி பீ மஸ்தான் ( தி. ) |
---|
பிள்ளைகள் | மகள்கள் : மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா. மகன் : கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் |
---|
பெற்றோர் | தந்தை: காஜா பாஷா தாய்: ஜூலேகா பீ |
---|
உறவினர் | கே. எஸ். தஸ்தகீர் (சகோதரன்) |
---|
வாழிடம் | 59, தளபதி இல்லம், தேசூர் பாட்டை, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். 604202. |
---|
கல்வி | 8 ஆம் வகுப்பு |
---|
பணி | |
---|
|
கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) என்ற இயற்பெயர் கொண்ட இவர், செஞ்சி கே. எஸ். மஸ்தான் என்ற பரவலாக அறியப்படும் தமிழக அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில்[1] தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.[5] இந்த அமைச்சுவின் கீழ், சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு வாரியம் போன்றவை ஆளுமையாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.[6][7]
வாழ்க்கை
31 மே 1955-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி என்ற தமிழக நகரில், இவரது தந்தையான காஜா பாஷா என்பவருக்கும், தாயான ஜூலேகா பீ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்[8], செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.[9][10] 1985 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் நாள், சைத்தானி பீ மஸ்தான் என்பவரை மனைவியாக ஏற்றார், இவர்கள் இருவரும் திருமணம் வாழ்வினில், மூன்று மகள்கள். ஒரு மகனையும் பெற்று வாழ்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்
கட்சி பொறுப்புகள்
- 1976-ல் அரசியல் பயணம் துவக்கம்.
- 1978-ல் செஞ்சி பேரூர் கழக செயலாளர்.
- 1980-ல் பொதுக்குழு உறுப்பினர்.
- 1992-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்.
- 1996-ல் மாநில செயற்குழு உறுப்பினர்
- 1999-ல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர்.
- 2014 ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக கட்சியின் செயலாளர்.
அரசு பதவிகள்
- 1986-முதல் 2016 வரை 5 முறை செஞ்சி பேரூராட்சி தலைவர்.
- 1989-ல் செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்.
- 1996 ல் கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்.
- 1996-ல் செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவர்.
- 2016 முதல் 2021 வரை செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
- 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சரவையில், செஞ்சி கே எஸ்.மஸ்தான் திமுக வின் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்