கே. பாலகிருஷ்ணன்
கேசவன் பாலகிருஷ்ணன் (Kesavan Balakrishnan) (1924 ஆகத்து 12 – 1984 சூலை 16) ஒரு அரசியல்வாதியும், எழுத்தாளரும், ஆசிரியரும் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைதிருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான சி. கேசவன் மற்றும் திருமதி வசந்தி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் வாழ்க்கைகேரளாவில் புரட்சிகர சோசலிசக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக பாலகிருஷ்ணன் இருந்தார். திருவனந்தபுரம் இரண்டாவது தொகுதியிலிருந்து 1954இல் திருவிதாங்கூர்-கொச்சி மாநில சட்டமன்றத்திற்கு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1971 இல் மக்களவையில் அம்பலப்புழா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் இவர், சிறந்த அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் "தாமரபத்ரம்" என்ற விருதைப் பெற்றார். தற்போதைய கேரள மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் பரவலாக பிரபலமாக இருந்த கௌமூடி வார இதழின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இவர் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். வாராவாரம் வெளிவந்த ஒரு தனித்துவமான அம்சம், 'பத்ராதிபரோடு சோதிக்குகா' (ஆசிரியரைக் கேளுங்கள்), இதில் வாசகர்கள் ஆசிரியரிடம் வானத்தின் கீழ் எதையும் பற்றியும் கேட்கலாம் (ஆனால் ஒரு வினாடி வினா அமர்வு அல்ல) என்பது பரவலாக பிரபலமானது. புத்தகங்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia