கொல்லம் மாவட்டம்
கொல்லம் மாவட்டம், இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கொல்லம். கேரள மாநிலத்திலுள்ள இயற்கை அழகுகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியுள்ள இந்த மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டு விளங்குகிறது. ஒரு முக்கியமான துறைமுகம், சமவெளிகள், மலைகள், ஏரிகள், குடாக்கள், காடுகள், வேளாண்மை நிலங்கள், ஆறுகள் என இயற்கையும் செயற்கையுமான பல சிறப்பு அம்சங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டம் பண்டைக்காலத்தில் ரோமருடனும், போனீசியருடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. மாவட்டத்தின் ஏறத்தாழ 30% பகுதி அசுத்தாமுடி ஏரியாகும். 18.02% நகராக்கம் பெற்ற இம்மாவட்டம், சட்டம் ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் என்பவை தொடர்பில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக "இந்தியா டுடே" சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது. ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தை கொல்லம், கருநாகப்பள்ளி, குன்னத்தூர், பத்தனாபுரம், கொட்டாரக்கரை என ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] இது 13 மண்டலங்களையும், 69 ஊராட்சிகளையும் கொண்டது. கேரள சட்டமன்றத்திற்காக பத்து சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அவை:[2]
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia