கைலி மினாக்
கைலி ஆன் மினாக், ஓ.பி.ஈ (1968 ஆம் ஆண்டு மே 28 அன்று பிறந்தவர்) ஒரு ஆஸ்திரேயலிய பாப் பாடகி, பாடலாசிரியை மற்றும் நடிகை ஆவார். ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக தன் வாழ்க்கைத் தொழிலை ஆரம்பித்த அவர் தொலைக்காட்சி நெடுந்தொடராகிய நெய்பர்ஸில் நடித்து புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் 1987 ஆம் ஆண்டு ஒலிப்பதிவு கலைஞராக தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடைய முதல் தனிப்பாடலாகிய “லோகொமோஷன்”, ஆஸ்திரேலிய தனிப்பாடல் வரிசைகளில் ஏழு வாரங்கள் முதலிடம் வகித்தது. அந்த பத்தாண்டுகளின் மிகவும் அதிகமாக விற்பனையான தனிப்பாடலானது. இதன் மூலம் பாடலாசிரியர்களும் தயாரிப்பாளர்களுமான ஸ்டாக், அய்ட்கென் மற்றும் வாட்டர்மான் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் கிட்டியது. அவருடைய முதல் பாடல் தொகுப்பான கைலி (1988) மற்றும் தனிப்பாடலான “ஐ ஷுட் பீ சோ லக்கி” ஆகிய இரண்டும் யுனைடட் கிங்க்டமில் முதலிடம் எட்டியது. மேலும் அடுத்த இரண்டு வருடங்களில், அவருடைய முதல் பதின்மூன்று பாடல்கள் பிரித்தானிய தனிப்பாடல் வரிசையில் முதல் பத்து இடங்களை எட்டின. அவருடைய முதல் படமான த டெலின்க்வெண்ட்ஸ் (1989) எதிர்மறையான விமர்சனங்கள் மத்தியிலும் ஆஸ்திரேலியாவிலும் யூகேவிலும் பெருத்த வசூல் அளித்தது. “அடுத்த வீட்டு பெண்” என்ற ஒரு பாணியில் முதலில் கொண்டுவரப்பட்டாலும், மினாக் தன்னுடைய இசையிலும் பொதுமக்கள் அபிப்ராயத்திலும் சற்று முதிர்ச்சியடைந்த தோற்றத்தை வெளிக்கொணற முயற்சித்தார். அவருடைய தனிப்பாடல்கள் நன்றாக வரவேற்கப்பட்டன. ஆனால் நான்கு பாடல்தொகுப்பகளுக்குப் பின் அவருடைய ஒலிப்பதிவு விற்பனைகள் சரியத் துவங்கியபோது, அவர் 1992 ஆம் ஆண்டில் ஸ்டாக், அய்ட்கென் மற்றும் வாட்டர்மான் அவர்களை விட்டு தனிநபராக தன் பணியைத் துவங்கினார். அவருடைய அடுத்த தனிப்பாடலான, “கன்ஃபைட் இன் மி”, ஆஸ்திரேலியாவில் முதலிடம் எட்டியது. மேலும் 1994 ஆம் ஆண்டில் பல ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் வரவேற்கப்பட்டது. மேலும் நிக் கேவ் உடன் பாடிய டூயட் (இருவர் பாடும் பாடல்) “வேர் த வைல்ட் ரோஸஸ் கிரோ” அவருடைய கலை நம்பகதன்மைக்கு கூடுதல் மதிப்பளித்தது. பல இசை நயங்கள் மற்றும் கலைஞர்களிடமிருந்து உத்வேகத்தைப் பெற்ற மினாக் தன்னுடைய அடுத்த பாடல்தொகுப்பான இம்பாசிபில் பிரின்ஸஸில் (1997) பாடலெழுதுவதில் அதிக படைப்பாற்றல் சுதந்திரத்தை பயன்படுத்தினார். அது யூகேவில் பலத்த மறு ஆய்வுகளையோ விற்பனைகளையோ வரவேற்காவிட்டாலும், ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற்றது.
சில விமர்சகர்களால் முக்கியமாக அவருடைய ஆரம்ப காலங்களில் அவர் புறக்கணிக்கப்பட்டாலும், அவர் உலகமுழுவதும் விற்றிருக்கிறார். மேலும் பன்முறை ஏ.ஆர்.ஐ.ஏ மற்றும் பிரிட் விருதுகள் மற்றும் ஒரு கிராமி விருது உட்பட பல குறிப்பிடத்தக்க விருதுகளையும் கைவசப்படுத்தியிருக்கிறார். அவர் பல வெற்றிகரமான இசை சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அவருடைய மேடை நிகழ்ச்சிகளுக்காக “வருடத்தின் சிறந்த ஆஸ்திரேலிய பொழுதுபோக்கு கலைஞர்”க்கான மோ விருதையும் பெற்றுள்ளார். “இசைக்கு அவர் ஆற்றிய சேவைக்காக” அவருக்கு ஓ.பி.ஈ மற்றும் 2008 ஆம் ஆண்டில் Ordre des Arts et des Lettres சும் வழங்கப்பட்டது. மடோனாவை தவிர்த்து 1980, 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இசை வரிசையில் முதலிடம் வகிக்கும் தனிப்பாடல்களை வழங்கிய ஒரே பெண் கலைஞர் கைலி ஆவார். வாழ்க்கையும் பணியும்1968–86: ஆரம்ப வாழ்க்கை மற்றும் பணி துவக்கங்கள்கைலி ஆன் மினாக் 1968 ஆம் ஆண்டு மெல்பர்ன், ஆஸ்திரேலியாவில் ரொனால்ட் சார்லஸ் மினாக் மற்றும் கேரல் ஆன் (இயற்பெயர் ஜோன்ஸ்) ஆகியோருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார்.[1] இவர் தந்தை ஐரிஷ் வம்சாவழியில் வந்தவர், தாய் மேஸ்டெக் வேல்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு நடனக் கலைஞர் ஆவார்.[2] அவருடைய சகோதரி டானீயும் ஒரு பாப் பாடகி ஆவார்,[1] அவருடைய சகோதரன் பிரெண்டன் ஆஸ்திரேலியாவில் ஒரு செய்தி வாசிப்பாளர் ஆவார்.[3] மினாக் குழந்தைகள் சர்ரே ஹில்ஸ், மெல்பர்னில் வளர்க்கப்பட்டு கேம்பர்வெல் உயர்நிலை பள்ளியில் கல்விக் கற்பிக்கப்பட்டனர்.[4] மினாக் சகோதரிகள் குழந்தைப் பருவத்தில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில் தங்கள் பணியைத் துவங்கினர்.[1] 12 வயதிலிருந்து கைலி த சலைவன்ஸ் மற்றும் ஸ்கைவேஸ் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றி, 1985 ஆம் ஆண்டு த ஹெண்டர்ஸன் கிட்ஸில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.[5] இசையில் ஒரு வாழ்க்கைத் தொழிலை ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டு அவர் வாராந்தர இசை நிகழ்ச்சியான யங்க் டேலண்ட் டைமின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு காட்சி ஒளிநாடாவை செய்தனுப்பினார்.[6] அதில் டானீ முன்னிலையில் வைக்கப்பட்டார்.[7] கைலி அந்த நிகழ்ச்சியில் 1985 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியை அளித்தார். ஆனால் அவர் நடிக்க அழைக்கப்படவில்லை. 1986 ஆம் ஆண்டு நெய்பர்ஸ் என்ற நெடுந்தொடரில் சித்தரிக்கப்படும்வரை டானீயின் வெற்றிகள் கைலியின் நடிப்பு சாதனைகளை விஞ்சியிருந்தன.[1][4] நெய்பர்ஸில் கைலி ஒரு கேரேஜ் மெகானிக்காக மாறிய ஒரு பள்ளி சிறுமியான சார்லீன் ராபின்சனின் கதாபாத்திரத்தில் நடித்தார். நெய்பர்ஸ் யூகேவில் பிரபலமாகி கதையில் அவருடைய பாத்திரத்திற்கும் ஜேசன் டோனவான் நடித்த பாத்திரத்திற்கும் காதல் உருவாகி 1987 ஆம் ஆண்டில் திருமணக் காட்சியில் முடிந்தது. அன்றைய தினம் 2 கோடி பிரித்தானிய பார்வையாளர்கள் அந்த தொடரை பார்த்தார்கள்.[8] ஒரே நிகழ்ச்சியில் நான்கு லோகி விருதுகளும், நாட்டின் “மிகவும் பிரபலமான தொலைக்காட்சி கலைஞராக” மக்கள் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு “கோல்ட் லோகி” விருதும் பெற்று ஆஸ்திரேலியாவில் அவருடைய பிரபலம் வெளிச்சத்திற்கு வந்தது.[9] 1987–92: ஸ்டாக், அய்ட்கென் மற்றும் வாட்டர்மான் மற்றும் கைலிஒரு ஃபிட்ஸ்ராய் கால்பந்து கிளப் ஆதரவு இசைநிகழ்ச்சியில் இதர நெய்பர்ஸ் கதாபாத்திரங்களோடு பாடும்போது, மினாக் நடிகர் ஜான் வாட்டர்ஸுடன் டூயட்டாக “ஐ காட் யு பேப்” என்ற பாடலை வழங்கினார். இதைத் தொடர்ந்து “த லோகொமோஷன்" என்ற பாடலை இரசிகர் விருப்பத்திற்கிணங்க பாடினார். இதையடுத்து அவர் 1987 ஆம் ஆண்டில் மஷ்ரூம் ரிகார்ட்ஸுடன் ஒரு ஒலிப்பதிவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.[10] அவருடைய முதல் தனிப்பாடலான “த லோகொமோஷன்” ஆஸ்திரேலிய இசை வரிசையில் ஏழு வாரங்கள் முதலிடம் வகித்தது. இது 200,000 பிரதிகள் விற்கப்பட்டது.[6] 1980 ஆம் ஆண்டுகளில் மிகவும் அதிகமாக விற்கப்பட்ட தனிப்பாடலானது.[11] மிகவும் அதிகமாக விற்பனையான தனிப்பாடலுக்காக ஆண்டின் ஏ.ஆர்.ஐ.ஏ விருதை மினாக் பெற்றார்.[12] இதன் வெற்றியால் மினாக் மஷ்ரூம் ரிகார்ட்ஸின் செயலர் கேரி ஆஷ்லியுடன் ஸ்டாக், அய்ட்கென் மற்றும் வாட்டர்மான்னுடன் பணிபுரிய இங்கிலாந்திற்கு சென்றார். அவர்கள் மினாகைக் குறித்து அவ்வளவாக அறியாமல், அவர் வருகிறாரென்றே மறந்துவிட்டு, அவர் ஸ்டூடியோவிற்கு வெளியே காத்திருந்தபோது “ஐ ஷுட் பி சோ லக்கி” என்ற பாடலை எழுதினார்கள்.[13] அந்தப் பாடல் யூகே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபின்லாண்ட், ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ஹாங் காங்கில் முதலிடம் பிடித்து, உலகின் பல பாகங்களில் வெற்றிப்பாடலானது.[14] மினாக் ஆண்டின் மிக அதிகமாக விற்பனையான பாடலுக்காக தொடர்ந்து இரண்டாவது முறை ஏ.ஆர்.ஐ.ஏ விருது பெற்று, “சிறப்பு சாதனை விருதையும்” பெற்றார்.[15] அவருடைய முதல் பாடல்தொகுப்பான கைலி, நடனம் சம்பந்தப்பட்ட பாப் இசைகளைக் கொண்டு பிரித்தானிய பாடல்தொகுப்பு வரிசைகளில் ஒரு வருடத்திற்கு மேலாக இருந்து, பல வாரங்கள் முதலிடத்திலிருந்தது.[16] இந்த பாடல்தொகுப்பு ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில் அதிகமாக விற்கவில்லை, ஆனால், “த லோகொ-மோஷன்” என்ற தனிப்பாடல் யூ.எஸ் பில்போர்ட் ஹாட் 100 வரிசையில் மூன்றாவது இடத்தையும்,[17] கனடாவின் தனிப்பாடல்கள் வரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. அமெரிக்காவில் மட்டும் வெளியான “இட்ஸ் நோ சீக்ரட்” 1989 ஆம் ஆண்டின் துவக்கத்தில் 37வது இடத்தை எட்டிப்பிடித்தது.[17] “டர்ன் ட் இண்டு லவ்” ஜப்பானில் மட்டும் வெளியாகி முதலிடத்தை பிடித்தது. ஜூலை 1988 ஆம் ஆண்டு “காட் டு பி செர்ட்டென்” ஆஸ்திரேலிய இசை வரிசைகளில் மினாகின் தொடர்ச்சியாக மூன்றாவது முதலிடம் வகிக்கும் தனிப்பாடலானது.[18] அந்த வருடத்தின் பிற்பகுதியில் அவர் தன்னுடைய இசைப் பணியில் தொடர நெய்பர்ஸ் தொடரை கைவிட்டார். ஜேசன் டோனவன், “அவரை பார்வையாளர்கள் திரையில் பார்க்கும்போது உள்ளூர் மெக்கானிக்கான சார்லீனாக பார்க்காமல், கைலி என்ற பாப் நட்சத்திரமாகவே பார்த்தார்கள்” என்று விமர்சித்தார்."[1] “எஸ்பெஷலி ஃபார் யு” என்று அவர் டோனவானுடன் பாடிய டூயட் 1989 ஆம் ஆண்டின் துவக்கத்தில் யூகேவில் ஏறக்குறைய 10 இலட்சம் பிரதிகள் விற்றது. ஆனால் விமர்சகர் கெவின் கில்லியன் அந்த டூயட் ஒரு “ஆடம்பரமான கொடூரம்” என்றெழுதினார்… அதோடு ஒப்பிடும்போட்து டையானா ரோஸ், லையனல் ரிச்சி பாடிய "எண்ட்லஸ் லவ்” மாஹ்லர் போன்று ஒலிக்கின்றதென்றார்".[19] வருடங்கள் செல்ல செல்ல, அவர் சில நேரங்களில் அவரை இகழ்பவர்கள் மூலமாக “த சிங்கிங்க் பட்ஜி” என்று குறிப்பிடப்பட்டார்.[20] என்றாலும் ஆல்மியூசிக்கிற்கு கிறிஸ் ட்ரூ கைலி பாடல்தொகுப்பைக் குறித்து கருத்து வழுங்கும்போது மினாகின் தோற்றம் அவருடைய இசையின் கட்டுப்பாட்டுகளையும் தாண்டி, “அவருடைய நளினம் இந்தச் சாரமற்ற பாடல்களையும் கேட்கத்தக்கவைகளாக ஆக்குகின்றன” என்றார்.[21] அவருடைய பின் - தொடரும் பாடல்தொகுப்பான எஞ்சாய் யுவர்ஸெல்ஃப் (1989) யுனைடட் கிங்க்டம், ஐரோப்பா, நியுசிலாந்து, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று, பிரித்தானிய முதலிடம் வகித்த “ஹாண்ட் ஆன் யுவர் ஹார்ட்” உட்பட பல வெற்றிக்கரமான தனிப்பாடல்களைக் கொண்டிருந்தது.[16] ஆனால் அது வட அமெரிக்கா முழுவதும் தோல்வியடைந்து, மினாக் அவருடைய அமெரிக்க ஒலிப்பதிவு நிறுவனமான ஜிஃப்ஃபன் ரிக்கார்ட்ஸிடம் தன்னுடைய பணியிழந்தார். அவர் தன்னுடைய முதல் இசைப்பயணமான எஞ்சாய் யுவர்செல்ஃப் சுற்றுப்பயணத்தை யுனைட்ட கிங்க்டம், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களுக்கு மேற்கொண்டார். மெல்பர்னில் ஹெரால்ட் சன் அவரைக் குறித்து எழுதும்போது, “எல்லா பகட்டுகளையும் விட்டு விட்டு உண்மையை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த குழந்தை இப்போது நட்சத்திரமாகிவிட்டது."[22] டிசம்பர் 1989 ஆம் ஆண்டு, மினாக் “டூ தெ நோ இட்ஸ் கிறிஸ்மஸ்” என்ற பாடலின் மறு உருவாக்குதலில் இடம்பெற்றார்.[23] அவருடைய முதல் படமான த டெலின்க்வெண்ட்ஸ் லண்டனில் முதன்முதலில் திரையிடப்பட்டது. அது விமர்சகர்கள் மூலமாக மிகவும் கேவலமாக வரவேற்கப்பட்டது.[23] டெய்லி மிரர் அவருடைய நடிப்பைக் குறித்து எழுதும்போது, “அவருடைய நடிப்புத் திறன் ஆறின கஞ்சியைப் போலிருந்ததென்று” குறிப்பிட்டது.[24] ஆனால் படம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானது; யூகேவில் £200,000க்கு மேலாக வசூலித்தது.[25] ஆஸ்திரேலியாவில் 1989 ஆம் ஆண்டு நான்காவது அதிகமாக வசூலித்த உள்ளூர் படமாகவும் 1990 ஆம் ஆண்டில் மிகவும் அதிகமாக வசூலித்த உள்ளூர் படமாகவும் விளங்கியது.[26] ரிதம் ஆஃப் லவ் (1990) சற்று நளினமான, பெரியவர்கள் பாணியிலான நடன இசையை வழங்கி தன்னுடைய தயாரிப்புக் குழு மற்றும் “அடுத்த வீட்டுப் பெண்மணி” என்ற அபிப்பிராயங்களுக்கு எதிராக போராடும் முதல் அடையாளங்களை வெளியே காட்டியது.[27] சற்று முதிர்ந்த இரசிகர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட நிர்ணயித்து, மினாக் தன்னுடைய இசை ஒளிவெளியீடுகளில் (வீடியோக்களில்) அதிக அதிகாரத்தைக் கொண்டு, தன்னை பாலியல்ரீதியில் முதிர்ச்சியடைந்த ஒரு பெரியவராக “பெட்டர் த டெவில் யு நோ” முதற்கொண்டு காண்பித்தார்.[28] மைக்கெல் ஹ்ட்சென்ஸ் உடனான அவருடைய தொடர்பும் கூட அவருடைய முந்தைய பாணியிலிருந்து விலகினதற்கு காரணமாக இருந்தது; அவருடைய பொழுதுபோக்கு “கைலியை கெடுப்பதாகும்” என்று ஹட்சென்ஸ் கூறியதாக சொல்லப்படுகிறது. ஐ.என்.எக்ஸ்.எஸ் பாடலாகிய ஸ்யூஸைட்-ப்ளாண்ட் கைலியின் தாக்கத்தினால் வந்ததென்றும் கூறினார்.[29] ரிதம் ஆஃப் லவ்விலிருந்த தனிப்பாடல்கள் ஐரொப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் நன்றாக விற்று பிரித்தானிய நைட்கிளப்புகளில் மிகவும் பிரபலமாயிருந்தன. பீட்டர் வாட்டர்மான் பிற்பாடு கூறும்போது, “பெட்டர் த டெவில் யு நோ” கைலியினுடைய வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக விளங்கியதாகவும், அந்தப் பாடல் அவரை “மிகவும் கவர்ச்சியுள்ளவராகவும், திரையில் மிகுந்த மினுக்குள்ள நடனக் கலைஞராகவும் காட்டியது. அந்த நேரத்தில் நடனத்தில் அவரை மிஞ்ச எவரும் அப்போது இல்லை” என்றார்.[1] “ஷாக்ட்” மினாகுடைய பதிமூன்றாவது பிரித்தானிய முதல் 10 வரிசையிலிருந்த தனிப்பாடலாகும்.[16] 1990 ஆம் ஆண்டு மே மாதம் த பீட்டில்ஸுடைய “ஹெல்ப்!” என்ற பாடலை மினாக் தன்னுடைய இசைக்குழுவின் ஒருங்கிணைப்பில் வழங்கினார். லிவர்பூலின் மெர்ஸி நதியின் ஓரத்தில் ஜான் லெனான்: த டிரிப்யூட் கான்ஸெர்ட்டில் 25000 பேருக்கு முன் வழங்கினார். யோகோ அனொ மற்றும் சான் லெனான் மினாக் த ஜான் லெனான் ஃபண்டிற்கு ஆதரவளித்ததற்காக நன்றி கூறினார்கள். அவருடைய மேடை நிகழ்ச்சியைக் குறித்து ஊடகங்கள் (மீடியா) சாதகமாக விமர்சித்தன. த சன், “நெடுந்தொடர் நட்சத்திரம் ஸ்கௌசர்ஸை பிரமிக்க செய்தார் - கைலிக்கு பாராட்டு தகுந்தது” என்று எழுதினது.[30] அவருடைய நான்காவது பாடல் தொகுப்பான, லெட்ஸ் கெட் டு இட் (1991), பிரித்தானிய பாடல்தொகுப்பு வரிசையில் 15வது இடத்தை எட்டியது. முதல் 10 இடத்தை நழுவவிட்ட அவருடைய முதல் பாடல்தொகுப்பு இதுவாகும்;[16] அவருடைய பதினான்காவது தனிப்பாடலான “வர்ட் இஸ் அவுட்” முதல் 10 தனிப்பாடல்கள் வரிசையை நழுவவிட்ட முதல் தனிப்பாடலாகும்.[16] என்றாலும் இதைத் தொடர்ந்த மற்ற பாடல்கள் “இஃப் யு வேர் வித் மி நௌ” மற்றும் “கிவ் மி ஜஸ்ட் எ லிட்டில் மோர் டைம்” நான்காவது மற்றும் இரண்டாவது இடத்தை முறையே பிடித்தது.[16] மினாக் தன்னுடைய ஒப்பந்தத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அதை புதுப்பிக்க விரும்பவில்லை.[1] ஸ்டாக், அய்ட்கென் மற்றும் வாட்டர்மான் மூலமாக நான் நெறிக்கப்பட்டேன் என்று கூறி, “ஆரம்பத்தில் அவர்கள் கைகளில் நான் ஒரு பொம்மையாகவே இருந்தேன். என்னுடைய ஒலிப்பதிவு நிறுவனம் மூலமாக எனக்கு கவண் போடப்பட்டது. என்னால் வலது இடது பக்கம் பார்க்கமுடியவில்லை” என்றார்.[31] 1992 ஆம் ஆண்டில் ஒரு கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் பாடல்தொகுப்பு வெளியிடப்பட்டது. அது யூகேவில் முதலிடத்தையும்[16] ஆஸ்திரேலியாவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது[32]. தனிப்பாடல்கள் “வாட் கைண்ட் ஆஃப் ஃபூல் (ஹேர்ட் ஆல் தட் பிஃபோர்)” மற்றும் கூல் அண்ட் த கேங்குடைய “செலப்ரேஷனுடைய” இவர் தனிவடிவம் இரண்டும் யூகே முதல் 20 வரிசையை எட்டின.[16] 1993–98: டீகன்ஸ்டிரக்ஷன், கைலி மினாக் மற்றும் இம்பாசிபில் பிரின்ஸெஸ்டீகன்ஸ்டிரக்ஷன் ரிகார்ட்ஸுடன் மினாக் கையொப்பமிட்டது இசையுலகத்தில் அவருடைய பயணத்தின் ஒரு புதிய சகாப்தமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்பெயரில் வெளியான கைலி மினாக் (1994) இருவேறு கருத்துக்களிடையில் வெளியானது. அது ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் நன்றாக விற்றது, அங்கு “கன்ஃபைட் இன் மி” என்ற தனிப்பாடல் நான்கு வாரங்கள் முதலிடத்தில் செலவழித்தது.[33] பார்பரெல்லாவாக நடித்த ஜேன் ஃபோண்டாவினால் உத்வேகம் பெற்று, “புட் யுவர்செல்ஃப் இன் மை பிளேஸ்” என்ற தன்னுடைய அடுத்த தனிப்பாடலுக்காக அவர் வீடியோவில் ஒன்றன் பின் ஒன்றாக ஆடையுரித்தார்.[34] இந்த தனிப்பாடலும் அவருடைய அடுத்த, “வேர் இஸ் த ஃபீலிங்க்?” என்ற பாடலும் பிரித்தானிய முதல் 20 வரிசையை எட்டியது.[16] பாடல்தொகுப்பு அதிகப்பட்சமாக நான்காவது இடத்தை எட்டி,[16] இறுதியில் 250,000 பிரதிகள் விற்றது.[35] இந்தக் காலகட்டத்தில் அவர் தன்னுடைய பாத்திரமாகவே, த விகார் ஆஃப் டிப்ளி என்ற நகைச்சுவை தொடரின் ஒரு தொடரில் நட்புக்காகத் தோன்றினார். இயக்குநர் ஸ்டீவன் ஈ. டி சூசா ஆஸ்திரேலியாவின் ஹூ மேகசினின் அட்டைப் படத்தில் “உலகின் மிக அழகான 30 பேர்கள்’க்காக மினாகின் படத்தைப் பார்த்து வியந்துப் போனார். இதன் விளைவாக அவர் ஜான் - கிளௌட் வேன் டாம்முடன் ஸ்ட்ரீட் ஃபைட்டர் (1994) என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.[36] இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்று, அமெரிக்காவில் $70 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது,[36] ஆனால் மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. த வாஷிங்க்டன் போஸ்ட்டுடைய ரிச்சர்ட் ஹாரிங்க்டன் மினாக் “ஆங்கிலம் பேசும் உலகத்தின் இருப்பதிலேயே மோசமான நடிகை” என்றார்.[37] அவர் பாலி ஷோர் மற்றும் ஸ்டீஃபன் பால்ட்வின்னுடன் பையொ-டோம் (1996) என்ற படத்தில் நடித்தார், ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. மூவி மேகசின் இண்டர்நேஷனல் இந்த படத்தை, “திரையுலகத்தின் மிகப்பெரிய வீண்” என்று நிராகரித்துவிட்டது.[36] மினாக் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி ஹேரைட் டு ஹெல் (1995) என்ற ஒரு குறும்படத்தில் தோன்றினார். அதற்குப் பின்பு யூகேவிற்கு சென்று டையனா அண்ட் மி (1997) என்ற படத்தில் தன்னுடைய பாத்திரத்தையே ஒரு சிறிய வேடத்தில் படம்பிடித்தார்.[38]
“பெட்டர் த டெவில் யு நோ” என்ற பாடலை கேட்டதிலிருந்து ஆஸ்திரேலிய கலைஞரான நிக் கேவ் மினாகுடன் பணிபுரிவதில் ஆர்வங்கொண்டார். “பாப் இசையிலேயே மிகவும் வக்கிரமும் கலங்கடிக்கக்கூடிய வரிகள் அந்த பாடலில் இருந்ததாகவும்” “அந்த பாடலை கைலி மினாக் பாடும்போது அவரில் இருக்கும் ஒருவகை களங்கமின்மை அந்த பயங்கரமான வரிகளுக்கு கூடுதல் மெருகேற்றி தன் வசம் இழுக்கிறது” என்றார்.[39] “வேர் த வைல்ட் ரோஸஸ் க்ரோ” (1995) என்ற பாடலில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தார்கள். இந்த ஆழ்ந்த பாடலில் ஒரு கொலையாளி (கேவ்) மற்றும் கொலையுண்டவருடைய (மினாக்) கோணங்களிலிருந்து ஒரு கொலை சித்தரிக்கப்பட்டது. இந்த பாட்டிற்கான வீடியோ ஜான் எவரட் மில்லாய்ஸுடைய ஒஃபீலியா (1851-1852) என்ற ஓவியத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் கொலை செய்யப்பட்ட பெண்ணாக மினாக், ஒரு குளத்தில் மிதந்துக்கொண்டிருப்பதாகவும், ஒரு பாம்பு அவருடைய உடலுக்கு மேலே நீந்தி செல்வதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தனிப்பாடல் ஐரோப்பாவில் பெருத்த வரவேற்படைந்து பல நாடுகளில் முதல் 10 பாடல்களில் வரிசையில் இடம்பெற்றது. மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அது தனிப்பாடல்கள் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.[40] மேலும் “வருடத்தின் சிறந்த பாடல்” மற்றும் “மிகச்சிறந்த பாப் வெளியீடு” என்று ஏ.ஆர்.ஐ.ஏ விருதுகளையும் தட்டிச் சென்றது.[41] கேவ் உடன் பல பாடல் நிகழ்ச்சிகளில் தோன்றியதைத் தொடர்ந்து மினாக், ‘ஐ ஷுட் பீ சோ லக்கி” என்ற பாடலுடைய வரிகளை லண்டனின் ராயல் ஆல்பர்ட் ஹாலில் “பொயட்ரி ஜாமில்” கவிதையாக மொழிந்தார். பிற்பாடு அந்த அனுபவம் “மிகவும் மனமகிழ்ச்சி அளித்த” ஒன்று என்று கூறினார்.[42] தன்னை கலை மூலமாக வெளிப்படுத்துவதில் கேவ் தனக்கு நம்பிக்கையூட்டியதாக கூறினார், “நான் யார் என்ற வட்டத்தை விட்டு மிகவும் தூரம் செல்லாமலும், அதே நேரத்தில், அதிக தூரம் சென்று, பல வித்தியாசமான காரியங்களை முயற்சிக்கவும், என்னுடைய தனித்தன்மையை ஒருபோதும் இழந்துவிடாமலுமிருக்க அவர் எனக்கு கற்றுத் தந்தார். என்னுடைய உட்கருவை வெளியாக்கி அதே நேரத்தில் என்னுடைய இசையின் நம்பகத்தன்மையை காத்துக்கொள்வதே என்னுடைய மிகப் பெரிய சவாலாக இருந்ததென்று” அவர் கூறினார்.[43] 1997 வாக்கில் மினாக் ஃப்ரெஞ்ச் புகைப்படக் கலைஞரான ஸ்டிஃபான் செட்னாயுடன் ஒரு உறவில் இருந்தார். இவர் கைலியுடைய படைப்பாற்றலை வளர்க்க உத்வேகமளித்தார்.[44] இருவருக்கும் ஜப்பானிய கலாச்சாரத்தின் மீது இருந்த பரஸ்பர ஈர்ப்பின் விளைவாக, அவர்கள் இம்பாசிபில் பிரின்செஸ் என்ற ஆல்பத்திற்கு “கெய்ஷா மற்றும் மங்கா சூப்பர்ஹீரோயின்” ஆகியவற்றின் சேர்மத்தின் அடிப்படையில் புகைப்படங்களை உருவாக்கினார்கள். டோவா டெய் என்பவருடன் சேர்ந்து “ஜெர்மன் போல்ட் இடாலிக்” என்ற வீடியோவும் இதன் விளைவாகவே உருவானது.[45] ஷெர்லி மான்ஸன் மற்றும் கார்பேஜ், பியார்க், டிரிக்கி, யூ2 மற்றும் பிஸ்ஸிக்காட்டோ ஃபைவ் மற்றும் டோவா டெய் போன்ற ஜப்பானிய பாப் இசைக் கலைஞர்களின் கலையிலிருந்தும் மினாக் தன் இசைக்கான உத்வேகத்தைப் பெற்றார்.[46] இம்பாசிபில் பிரின்சஸில் மேனிக் ஸ்டிரீட் ப்ரீச்சர்ஸுடைய இசைக்கலைஞர்களாகிய ஜேம்ஸ் டீன் ப்ராட்ஃபீல்ட் மற்றும் ஷான் மோர் ஆகியோருடன் சேர்ந்த இசைப்பணிகள் வெளியாகியிருந்தன. இது பெரும்பாலும் ஒரு நடன பாடல்கள் தொகுப்பாயிருந்தது. ஆனால் அதன் முதல் பாடலான “சம் கைண்ட் ஆஃப் ப்ளிஸ்” சற்று வேறுபட்டிருந்தது. அவர் ஒரு இண்டீ கலைஞராக விரும்புகிறாரென்று கருத்துகள் பரவின. ம்யூசிக் வீக்கிற்கு அவர் கூறியதாவது, “இது ஒரு இண்டீ-கிட்டார் பாடல்தொகுப்பு கிடையாது என்று நான் மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. நான் கிட்டாருடன் சேர்ந்த ராக் இசையில் செல்லவில்லை” என்று அவர் கூறினார்."[47] அவருடைய ஆரம்ப வாழ்க்கையின் அபிப்ராயங்களை விட்டுவிலக அவர் முயற்சி செய்யத்தான் செய்தார் என்று ஒப்புக்கொண்டு, “வேதனைதரும் விமர்சன்ங்களை மறந்துவிட்டு”, “கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டு, அணைத்துக்கொண்டு, அதை பயன்படுத்திக்கொள்ளப்போவதாக” மினாக் கூறினார்.[42] “டிட் இட் அகேய்ன்” என்ற வீடியோ அவருடைய முந்தைய அவதாரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தது. இது அவருடைய சுயசரிதையாகிய, லா லா லா வில் காணப்படுகிறது, “நடன கைலி, அழகு கைலி, கவர்ச்சி கைலி, இண்டீ கைலி ஆகிய அனைத்தும் ஒன்றையொன்று விஞ்சும்படி விடாபிடியாக அடம்பிடித்தன” என்று குறிப்பிட்டிருந்தார்.[48] பில்போர்ட் இந்த பாடல் தொகுப்பு, “பிரம்மிப்பூட்டக்கூடியது” என்று கூறி, “தொலைநோக்கும் சக்தியும் கொண்ட ஒரு பெரிய ஒலிப்பதிப்பு நிறுவனம், ஐக்கிய அமெரிக்காவில் வெளியிட இதுவே ஒரு அரும்பெரும் வர்த்தக வாய்ப்பு” என்று கருத்து வழங்கியது. உண்ணிப்பாக கவனித்தால் இம்பாசிபில் பிரின்செஸுக்கும் மடோனாவுடைய மிகவும் பரவலாக வெற்றியடைந்திருந்த, ரே ஆஃப் லைட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருப்பதை கண்டறிய முடியும்.[43] யூகேவில், ம்யூசிக் வீக் இதற்கு எதிர்மாறான விமர்சனத்தை அளித்து, “கைலியின் குரல் ஒரு உக்கிரக் குணத்தையடைகிறது… ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்வதாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டது.[49] வேல்ஸ் நாட்டு இளவரசியான டையானாவின் இறப்பிற்குப் பின் யூகேவில் கைலி மினாக் என்று மறுபெயரிடப்பட்ட இந்தப் பாடல்தொகுப்பு அவருடைய வாழ்க்கையின் மிகவும் குறைவாக விற்பனையான பாடல்தொகுப்பானது. அந்த வருடத்தின் இறுதியில், வர்ஜின் ரேடியோ ஒரு பிரகடனத்தில், “கைலியின் ஒலிப்பதிவுகளை மேம்படுத்த நாங்கள் ஒன்று செய்திருக்கிறோம் - அவைகளை நிறுத்திவிட்டோம்” என்றது.[4] ஸ்மாஷ் ஹிட்ஸ் நடத்திய ஒரு வாக்கெடுப்பில் அவர், “மிகவும் மோசமாக ஆடையணிபவர், மிகவும் மோசமான பாடகர் மற்றும் சிலந்திகளுக்கடுத்து - மிகவும் அவலட்சனமானவர்” என்று கூறப்பட்டார்.[4] ஆஸ்திரேலியாவில், இம்பாசிபில் பிரின்செஸ் பாடல்தொகுப்பு வரிசையில் 35 வாரங்கள் செலவழித்து, அதிகபடியாக நான்காம் இடத்தை எட்டியது. இது 1988 ஆம் ஆண்டில் கைலிக்கு பின்பு அவருடைய மிகவும் வெற்றிகரமான பாடல்தொகுப்பானது.[50] இரசிகர் கோரிக்கைகளுக்கிணங்க அவருடைய இண்டிமெட் அண்ட் லைவ் சுற்றுப்பயணம் நீடிக்கப்பட்டது.[51] விக்டோரியன் ப்ரெமியராக, ஜெஃப் கென்னெட், அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு விருந்தை மெல்பர்னில் ஏற்பாடு செய்திருந்தார்.[52] அவர் மேடை நிகழ்ச்சிகள் வாயிலாகத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தன்னுடைய உயர் அந்தஸ்தை தக்க வைத்திருந்தார். அவைகளில் பின்வருவன அடங்கும்: 1998 ஆம் ஆண்டில் சிட்னியில் கே மற்றும் லெஸ்பியன் மார்டி கிரா,[51] 1999 ஆம் ஆண்டில் மெல்பர்னுடைய கிரௌன் கேஸினோ[53] மற்றும் சிட்னியின் பாக்ஸ் ஸ்டூடியோவின் திறப்பு விழாக்கள், இதில் அவர் மெர்லின் மேன்றோவின் “டையமண்ட்ஸ் ஆர் எ கர்ல்ஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்ற பாடலை வழங்கினார்.[54] மேலும் கிழக்கு திமோர், டிலியில் ஒரு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகளின் அமைதி-காப்பு படைகளுடன் பாடல்களை வழங்கினார்.[54] இந்த காலத்தின் போது அவர் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட மாலி ரிங்க்வால்டின் படமாகிய, கட் (2000) என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் இடம்பிடித்தார். 1999–2005: லைட் இயர்ஸ், ஃபீவர் மற்றும் பாடி லாங்குவேஜ்மினாக் மற்றும் டீகண்ஸ்ட்ரக்ஷன் பதிப்பாளர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர். அவர் பெட் ஷாப் பாய்ஸ் உடன் அவர்களது நைட் லைஃப் பாடல் தொகுப்பில் ஜோடியாக ஒரு நிகழ்ச்சி நடத்தினார் மற்றும் ஷேக்ஸ்ஃபியரின் த டெம்பஸ்டில் நடித்துக்கொண்டு பார்படோஸில் பல மாதங்கள் இருந்தார்.[55] ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி வந்தவுடன், அவர் சேம்பிள் பீபிள் என்ற படத்தில் தோன்றினார் மற்றும் ரஸல் மோரிஸின் “த ரியல் திங்” என்ற படத்தின் ஒலிச்சுவடின் அட்டை பதிவுக்காக பதிவு செய்தார்.[55] அவர் ஏப்ரல் 1999 இல் பார்லஃபோன் பதிவாளர்களோடு கையெழுத்திட்டார்.[56] அவரது ஆடுதலுக்கேற்ற பாடல்கள் கொண்ட லைட் இயர்ஸ் (2000) என்ற தொகுப்பானது டிஸ்கோ இசையின் தாக்கத்தில் உருவானது. ஆடல்-பாப் இசையை “மேலும் அதிகப்படுத்தப்பட்ட வடிவமாக” வழங்கி அதை "சந்தோஷமானதாக" கொடுக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம் என மினோக் கூறினார்.[56] அது மிக வலிமையான விமர்சனங்களை கிளப்பியது மற்றும் ஆசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய இடங்களில் வெற்றியை பெற்றது, யூகேவில் ஒரு மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றது.[57] தனிப்பாடலான “ஸ்பின்னிங் அரௌண்ட்” பத்து வருடங்களில் அவரது முதல் பிரித்தானிய முதல் தரத்தை எட்டியது மற்றும் அதனுடனான படத்தில் மினாக் வெளிப்படையாகத் தெரியும் தங்க நிறத்திலான கவர்ச்சியான காலுறை அணிந்து தோன்றினார். இது “சொந்த பாணி”யாக கருதப்படத் தொடங்கியது.[58][59] அவரது இரண்டாவது தனிப்பாடலான, “ஆண் எ நைட் லைக் திஸ்” ஆஸ்திரேலியாவில் முதல் இடத்தையும்,[60] யூகேவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.[16] “கிட்ஸ்” என்ற ராபி வில்லியம்ஸ் உடனான ஜோடிப் பாடல், வில்லியம்ஸின் தொகுப்பான சிங் வென் யூ ஆர் வின்னிங் என்பதிலும் சேர்க்கப்பட்டது மற்றும் யூகேவில் அது இரண்டாம் இடத்தைப் பிடித்தது.[16] 2000 ஆம் ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்ஸ் 2000-த்தின் நிறைவு விழாவில் மினாக் ஏ.பி.பி.ஏவின் “டேன்சிங்க் குயின்” மற்றும் அவரது தனிப்பாடலான “ஆண் எ நைட் லைக் திஸ்” ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினார்.[61] அவர் பின்னர் ஒரு கச்சேரி சுற்றுப்பயணத்தை தொடங்கினார், ஆன் எ நைட் லைக் திஸ் என்ற இந்தச் சுற்றுலா, ஆஸ்திரேலியா மற்றும் யுனைடட் கிங்டமில் அரங்கம் நிறைந்த ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. விகடம் மற்றும் நாடகம் ஆகியவை கொண்டிருந்த மடோனாவின் 'த கேர்லி ஷோ' என்ற 1993 ஆம் ஆண்டு உலக சுற்றுப்பயணம் மினாகுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிராட்வே நிகழ்ச்சிகளான 42வது ஸ்டிரீட், ஆங்கர்ஸ் அவே, சவுத் பசிஃபிக், 'த ஃப்ரெட் ஆஸ்டேர்' போன்ற படங்கள் மற்றும் 1930 ஆம் ஆண்டுகளின் ஜிண்ஜர் ரோஜர்ஸ் இசை நிகழ்ச்சிகள், பெடெ மிட்லரின் நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி வில்லியம் பேகரும் குறிப்பிடுகிறார்.[62] அவரது புதிய முயற்சிகளுக்காகவும், தனது பெரிய வெற்றி பெற்ற பாடல்களின் மறு விளக்கங்களுக்காகவும் மினாக் பெரிதும் பாராட்டப்பட்டார். இதனால் “ஐ ஷுட் பி சோ லக்கி” என்ற பாடல் முதன்மை பாடலாகவும் “பெட்டர் த டெவில் யு நோ” 1940களின் மிகப் பெரிய பாடலானது. அவர் “வருடத்தின் சிறந்த செயல்திறனாளர்” என்ற ஆஸ்திரேலிய நேரடி பொழுதுபோக்குக்கான “மோ விருதை” அவர் பெற்றார்.[63] இந்தச் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து சியாடில் போஸ்ட்-இண்டலிஜன்சர் பத்திரிக்கையாளர் அவரிடம் அவரது மிகப் பெரிய பலம் எது எனக் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் – “நான் அனைத்தையும் செய்யக் கூடியவள். நான் செய்வதில் இருந்து ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க நேர்ந்தால், அதில் நான் திறமைசாலியாக இருக்கமாட்டேன். ஆனால் அவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்தால், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்”.[64] இவர் "த க்ரீன் ஃபேரியாக" மவுளின் ரோஜில்! (2001) தோன்றினார்.[65] இது ஃபீவர் வெளியிடப்படுவதற்கு முன், டிஸ்கோ அம்சங்களுடன் 1980 ஆம் ஆண்டுகளின் எலக்ட்ரோபாப் மற்றும் சிண்த்பாப் ஆகியவை இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பாக இருந்தது. ஃபீவர் ஆஸ்திரேலியா, யூகே மற்றும் ஐரோப்பா முழுவதும் முதல் இடத்தை பிடித்தது. இறுதியாக உலகளாவிய விற்பனையாக எட்டு மில்லியனுக்கும் மேலாக விற்றது.[66] அதன் முதன்மை தனிப்பாடலான “காண்ட் கெட் யூ அவுட் ஆஃப் மை ஹெட்” அவரது தொழிலின் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. 40 நாடுகளில் இது முதல் இடத்தைப் பிடித்தது.[67] அவர் நான்கு ஏ.ஆர்.ஐ.ஏ விருதுகளை வாங்கினார். இதில் “மிகச் சிறந்த இணையற்ற சாதனையாளர்” விருதும் அடங்கும்.[68] மேலும், இரண்டு பிரிட் விருதுகளான “சிறந்த சர்வதேச பெண் தனிக்கலைஞர்” மற்றும் “சிறந்த சர்வதேச பாடல் தொகுப்பு” ஆகியவற்றையும் பெற்றார்.[69] "காண்ட் கெட் யூ அவுட் ஆஃப் மை ஹெட்” மிகச் சுலபமாக சிறந்தது மற்றும் புதிய நூற்றாண்டில் எங்கும் வியாபித்திருக்கும் ஒரு ஆடலுக்கான அம்சங்கள் நிறைந்த பாடல்” என ரோலிங்க் ஸ்டோன் குறிப்பிடுகிறது.[70] மேலும், அமெரிக்கர் வானொலியில் அதிகப்படியாக ஒலிபரப்பப்பட்ட பிறகு, கேபிடல் ரெகார்ட்ஸ் அதையும், ஃபீவர் பாடல் தொகுப்பையும், 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியிட்டது.[71] ஃபீவர், பில்போர்டு 200|பில்போர்டு 200 பாடல் தொகுப்பு வரிசையில் நுழைந்த போதே மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[72] “காண்ட் கெட் யு அவுட் ஆஃப் மை ஹெட்” சிறந்த 100 பாடல்களில் ஏழாம் இடத்தைப் பிடித்தது.[17] அதைத் தொடர்ந்த தனிபபாடல்களான “இன் யுவர் ஐஸ்”, "லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்" மற்றும் “கம் இண்டு மை வேர்ல்டு” ஆகியவை உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மினாக் பிரத்யேகமான வட அமெரிக்க சந்தையில், குறிப்பாக மகிழ்மன்றங்களில் அவரது புகழ் பரவத் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டில் “லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்” என்பதற்காக “சிறந்த ஆடல் பதிவு” என்பதற்கான கிராமி விருது பரிந்துரைப்பு கிடைத்தது.[73] அதைத் தொடர்ந்த வருடத்தில் “கம் இன் டு மை வேர்ல்டு”க்காக அதே விருதை வாங்கினார்.[74] ஃபீவர் தொகுப்புக்கான இசை படங்கள் பல அறிவியல் கற்பனை படங்களின் தாக்கத்தில் உருவானது – குறிப்பாக ஸ்டேன்லி க்யுப்ரிக்கின் படங்கள் மற்றும் அந்த இசையின் எலக்ட்ரோபாப் அம்சங்களை க்ராஃப்ட்வர்க் முறை நடனக் கலைஞர்களைக் கொண்டு ஒலிஅமைப்பு மிகைப்படுத்தப்பட்டது என மினாகின் பாணி வடிவமைப்பாளர் மற்றும் ஆக்க இயக்குநர் வில்லியம் பேகர் விளக்கினார். கைலியின் ஃபீவர் சுற்றுப்பயணத்தின் வடிவமைப்பாளரான ஆலன் மெக்டோனால்டு, இந்த அம்சங்களை மினாகின் முந்தைய அவதாரங்களில் இருந்து ஊக்கம் பெற்று மேடை நிகழ்ச்சியில் கொண்டு வந்தார்.[75] நிகழ்ச்சி தொடங்கும் போது மினாக் வேற்று கிரக சாத்தான் போலத் தோன்றினார், இதை அவர் “தனது ட்ரான்ஸ் உடன் தோன்றும் மெட்ரோபோலிஸ் ராணி” என்று வர்ணித்தார். இதைத் தொடர்ந்து க்யூப்ரிக்கின் எ க்ளாக்வர்க் ஆரஞ்சு என்பதன் தாக்கம் நிறைந்த காட்சிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து மினாகின் தொழில் வாழ்க்கையில் அவரது பல வடிவங்கள் ஆகியவை இடம்பெற்றன.[75] தான் நினைத்தது போல கடைசியாக தன்னால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது என மினாக் கூறுனார். அவர் எப்போதுமே “தனது இதயத்தில் ஒரு கலைப்பெண்ணாக” இருந்திருப்பதாகக் கூறினார்.[75] 2002 ஆம் ஆண்டில் அவர் இயங்குபடமான த மேஜிக் ரவுண்டபௌட்டில் பணிபுரிந்தார். இது 2005 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலும்,[76] 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது; இதில் அவர் இரு முக்கிய கதாபாத்திரமான, ஃபுளோரன்ஸிற்காகக் குரல் கொடுத்தார். 2002 ஆம் ஆண்டில் கிராமி விருதுகள் விழாவில் சந்தித்ததில் இருந்து மினாக், ஃப்ரெஞ்சு நடிகர் ஓலிவர் மார்டினஸோடு, ஒரு உறவுமுறையை தொடங்கினார்.[77] அவரது அடுத்த தொகுப்பான, பாடி லேங்குவேஜ் (2003) ஒரு அழைப்பிதழ்-மட்டும் கச்சேரியைத் தொடர்ந்து, ஹேமர்ஸ்மித் அப்போலோ லண்டனில் மணி காண்ட் பை என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பிரிக்கிட் பார்டோட்டின் வடிவங்களில் இருந்து ஓரளவு தாக்கத்தோடு, மினாக் மற்றும் பேகர் வடிவமைத்த புதிய பாணி முதல் முறையாக வெளியிடப்பட்டது. பார்டோர்ட் பற்றி மினாகின் கருத்து: "பி.பி பார்டோட் ஒரு கவர்ச்சிப்புயல் என நான் நினைக்கிறேன். மிகவும் சிறந்த கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக இவர் திகழ்கிறார். அந்த நேரத்திலேயே அவர் மாற்றத்தை விரும்புபவராக இருந்தார். அதனால் கோகெட் மற்றும் ராக் அண்ட் ரோல் ஆகியவைகளின் சரியான கலவையான அந்த காலத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்."[78] இந்தத் தொகுப்பில் டிஸ்கோ பாணி குறைக்கப்பட்டது மற்றும் ஸ்க்ரிடி போலிடி, த ஹ்யூமன் லீக், ஆடம் அண்ட் த ஆண்ட்ஸ் மற்றும் ப்ரின்ஸ் ஆகிய 1980 ஆம் ஆண்டின் கலைஞர்களால் தான் ஈர்க்கப் பட்டதாகவும், அவர்களது பாணியில் ஹிப் ஹாப்பின் அம்சங்களை கலந்து கொடுத்ததாகவும் மினாக் கூறினார்.[79] இது பல நல்ல நேர்மறையான கருத்தாய்வுகளைப் பெற்றது. பில்போர்டு பத்திரிக்கை “நல்ல பாடல்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கண்டு பிடிக்கும் யுத்தி”யைப் பற்றி எழுதியது.[80] ஆல்மியூசிக் விவரித்ததாவது: “மிகச் சரியான பாப் சாதனை.... ஒரு ஆடல்-பாப் தேவதை மிக சரியான வழியைத் தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக சம்மந்தமானதை மட்டும் தேர்ந்தெடுக்காமல் எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்தியதால் பாடி லேங்குவேஜ் போன்ற பாடல் தொகுப்பு கிடைத்தது”.[81] முதல் தனிப்பாடலான, “ஸ்லோ” யூகே மற்றும் ஆஸ்திரேலியாவில் முதல் தரப் பாடலாக வெற்றி பெற்றாலும், ஃபீவரின் ,[66][71] வெற்றியைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி பாடி லேங்குவேஜின் விற்பனை இருக்கவில்லை.[82] அமெரிக்காவின் பாடல் தரப்பட்டியலில் முதல் இடத்தைப் பெற்ற பின்னர்,[83] “ஸ்லோ” சிறந்த ஆடல் பதிப்பு என்ற வகையில் கிராமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.[73] பாடி லேங்குவேஜ் அமெரிக்காவில் முதல் வார விற்பனையாக 43,000 த்தை எட்டியது. ஆனால் இரண்டாவது வாரத்தில் அது அதிகப்படியாகக் குறைந்தது.[84] த வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை மினாகை “அமெரிக்க சந்தையை தொடர்ந்து கைபற்ற முடியாத ஒரு சர்வதேச சிறந்த கலைஞர்” என விவரித்தது.[84] அமெரிக்காவில் தனது இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள தேவைப்படும் நேரத்தை செலவழிக்கத் தான் விரும்பவில்லை என்றும் அதற்கு பதிலாக உலகத்தின் மற்ற பகுதிகளில் தனக்குக் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளலாம் என தனது அமெரிக்க பதிப்பு நிறுவனத்திடம் கூறியதாக மினாக் கூறினார்.[84] அவரது இந்த மனப்பான்மையை பில்போர்டின் பகுப்பாய்வாளர் ஜெஃப் மேஃபீல்டு “ஒரு வர்த்தக முடிவு… நான் அவரது காசாளராக இருந்திருந்தால் அவரது இந்த முடிவை குறைகூற மாட்டேன் என்று இந்த முடிவை அங்கீகரித்தார்."[84] அமெரிக்காவில் தனக்குக் கிடைத்த குறைவான வெற்றி பற்றி வருத்தப்பட்டதே இல்லை, ஆனால் இதனால் தன்னுடைய தொழில் முழுமை அடையவில்லை என நான் நினைப்பதாக பலர் கருதுவது தான் வேதனை அளிக்கிறது என்று பின்னாளில் மினாக் கூறினார்.[85] கேத் அண்ட் கிம் என்ற நகைச்சுவைத் தொடரில் மினாக் ஒரு கௌரவ வேடத்தில் தோன்றினார். இதில் அவர் நெய்பர்ஸ் என்ற தொடரில் அவர் நடித்த சார்லின் என்ற தனது முந்தைய கதாபாத்திரத்தம் ஒரு திருமண காட்சியில் வருவது போல நடித்தார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய ஒலிபரப்பு குழுமத்தின் அந்த ஆண்டின் அதிக தரத்தைப் பெற்ற நிகழ்ச்சியாக அமைந்தது.[86] அவர் நவம்பர் 2004 இல் தனது இரண்டாவது மிகப்பெரிய வெற்றித் தொகுப்பை வெளியிட்டார். இதற்கு அல்டிமேட் கைலி என்று பெயரிட்டு, அதே பெயருடைய பாடல் படங்கள் உள்ள டி.வி.டி தொகுப்பையும் வெளியிட்டார். இந்த தொகுப்பில், ஜேக் ஷியர்ஸ் மற்றும் சிசர் சிஸ்டர்ஸின் பேபிடாடி ஆகியோருடன் இணைந்து எழுதிய தனிப்பாடலான “ஐ பிலீவ் இன் யூ” மற்றும் “கிவிங்க் யூ அப்” ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது. “ஐ பிலீவ் இன் யூ” அமெரிக்க ஹாட் டான்ஸ் க்ளப் ப்ளேவில் மூன்றாம் இடத்திற்குச் சென்றது.[83] இந்தப் பாடல் “சிறந்த ஆடல் பதிப்பு” என்ற வரிசையில் பரிந்துரைக்கப்பட்ட வகையில் மினாக் தொடர்ந்து நான்காவது ஆண்டாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கைலி: பொருட்காட்சி மெல்போர்னில் தொடங்கப்பட்டது. இந்த இலவச பொருட்காட்சியில் தனது மொத்த தொழில் வாழ்வில் இது வரை மினாக் உபயோகித்த பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இது ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு 300,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது.[87] பின்னர் பிப்ரவரி 2007 இல், லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டது.[88] மினாக் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கி ஷோகேர்ல்: த கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் டூர், ஐரோப்பாவில் நிகழ்ச்சி நடத்திவிட்டு மெல்போர்ன் சென்றார். அங்கு அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.[89] 2005–06: மார்பக புற்றுநோய்மினாக்கிற்கு மார்பகப் புற்று நோய் இருப்பது 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவரது ஷோகேர்ல் – பெரிய வெற்றிகள் என்ற சுற்றுப் பயணத்தில் மீதமுள்ள நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. மற்றும் கிளாஸ்டன்பரி விழாவில் இருந்தும் விலகிக் கொண்டார்.[90] அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் மெல்போர்னில் சிகிச்சை பெற்றது குறுகிய காலத்திற்கு ஆனால் அதிகமான ஊடகங்களால் பின் தொடரப்பட்டது. முக்கியமாக ஆஸ்திரேலியாவில் அதிகமாகவே இருந்தது. அங்கு பிரதமர் ஜான் ஹாவர்டு மினாகுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.[91] மினாகின் மெல்போர்ன் வீட்டிற்கு முன், ஊடகப் பணியாளர்கள் மற்றும் விசிறிகள் கூடத் தொடங்கியபோது, விக்டோரிய ப்ரிமியர் ஸ்டீவ் பாரக்ஸ், மினாகின் குடும்ப உரிமைகளுக்கு பாதிப்பு விளைவிப்பது ஆஸ்திரேலிய சட்டங்களுக்கு புரம்பானது அது சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என சர்வதேச ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.[92] இந்த அறிக்கை ஊடகங்களில் மிகப்பெரிய அளவிற்கு விமர்சிக்கப்பட்டது, குறிப்பாக பாப்பராசி குறித்த விமர்சனங்கள் மிகவும் அதிகமாக இருந்தது.[93][94] மினாக் மால்வேர்ன் என்ற இடத்தில் காப்ரினி மருத்துவமனையில் 21 மே 2005 இல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் மற்றும் அதனை தொடர்ந்து வேதிச்சிகிச்சையும் தொடங்கினார்.[91] 2005 ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனது முதல் பொது நிகழ்வில் தோன்றினார். மெல்போர்னில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான புற்று நோய் வார்டை பார்வையிட்டார். அவர் ஃபிரான்ஸ் நாட்டிற்குத் திரும்பி பாரிஸ் அருகே உள்ள விலிஜுஃப் என்ற இடத்தில் உள்ள இண்ஸ்டிட்யூட்-குஸ்டாவே-ரௌஸியில் தனது வேதிச்சிகிச்சையை முடித்தார்.[95] டிசம்பர் 2005ல், ஷோகேர்ள் சுற்றுப்பயணத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்ட "ஓவர் த ரையின்போ" தனிப்பாடலின் டிஜிடல் வடிவத்தை மினாக் வெளியிட்டார். அவர் உடல்நிலை தேறி வரும்போது எழுதிய குழந்தைகளுக்கான புத்தகமான, த ஷோகேர்ள் பிரின்சஸ் அக்டோபர் 2006 இல் வெளியிடப்பட்டது. அவரது வாசனை திரவியமான “டார்லிங்க்” நவம்பரில் வெளியிடப்பட்டது.[96] கச்சேரி சுற்றுப்பயணத்திற்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி வந்தபோது தனது நோயைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்டார். வேதிச்சிகிச்சை பெறுவது “ஒரு நியூக்லியர் அணுகுண்டை அனுபவிப்பது போல இருந்தது” எனக் கூறினார்.[96] 2008 ஆம் ஆண்டில், த ஈலன் டிஜெனரஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றபோது, முதலில் தனது புற்று நோய் தவறாகக் கண்டறியப்பட்டது எனக் கூறினார். “யாரோ ஒருவர் ஒரு வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு பெரிய மருத்துவ உபகரணங்களை உபயோகித்தால், அவர் சரியாகத் தான் சொல்லியிருப்பார் என்று அர்த்தமில்லை” என அவர் விமர்சித்தார்.[97] ஆனால் அதற்கு பிறகு, மருத்துவர்கள் மேல் அவருக்கு உள்ள மரியாதையைக் குறித்து அவர் பேசினார்.[98] வெளிப்படையாக தனது புற்று நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதித்ததற்காக மினாக் பாராட்டப்பட்டார்; மே 2008 இல், ஃபிரன்சு நாட்டின் கலாசார அமைச்சர் க்ரிஸ்டின் ஆல்பனல், “டாக்டர்கள், தற்போது பல இளம் பெண்கள் தொடர்ச்சியாக சோதனைக்கு வருவதில் “கைலி தாக்கம்” என்ற ஒன்று இருக்கின்றது என மருத்துவர்கள் கூறும் அளவிற்கு சென்றுவிட்டது” எனக் கூறினார்.[99] 2006–09: ஷோகேர்ள்: த ஹோம் கமிங்க் சுற்றுப்பயணம், எக்ஸ், கைலிஎக்ஸ்2008 மற்றும் ஃபார் யூ, ஃபார் மீ சுற்றுப்பயணம்![]() நவம்பர் 2006 இல் மினாக் தனது ஷோகேர்ள்: த ஹோம் கமிங்க் சுற்றுப்பயணம் நிகழ்ச்சிகளின் மறு தொடக்கமாக, சிட்னியில் நிகழ்ச்சி நடத்தினார். அவர் அந்த கச்சேரிக்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறினார். ப்ரோஸ்டேட் புற்றுநோய் வாய்ப்பட்டு வாழும் தனது தந்தைக்கு “எஸ்பெஷலி ஃபார் யூ” என்ற பாடலை சமர்ப்பிப்பதற்கு முன் அவர் அழுதார்.[100] அவரது ஆடல் வழக்கம் அவரது மருத்துவ நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டது மற்றும் அவரது பலத்தை சேமிக்கும் வகையில் ஆடை மாற்றங்கள் மெதுவாக நடப்பது போலவும், இடைவேளைகள் அதிகமாக எடுக்குமாறும் செய்யப்பட்டது.[101] மினாக் மிகுந்த உற்சாகத்துடன் நிகழ்ச்சியை நடத்தினார் என்று சிட்னி மார்னிங்க் ஹெரால்டு அறிக்கை வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியை “அதி ஆடம்பரமான” என்றும் “வெற்றிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது” என்றும் வர்ணித்தது.[100] அதைத் தொடர்ந்த இரவில், யூ2வின் வெர்டிகோ சுற்றுப்பயணம் என்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்த போனோ மினாகுடன் “கிட்ஸ்” என்ற ஜோடிப் பாடலுக்காக ஒன்று சேர்ந்தார். ஆனால் யூ2வின் நிகழ்ச்சியில் மினாக் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது அவரது அதிகப்படியான அசதி காரணமாக கைவிடப்பட்டது.[102] ஆஸ்திரேலியா முழுவதும் மினாகின் நிகழ்ச்சிகள் நல்ல நேர்மறையான கருத்துகளைப் பெற்றது. தனது குடும்பத்தாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிறகு, அவரது நிகழ்ச்சியின் ஐரோப்பிய பகுதியை தொடங்கும் வகையில் வெம்ப்லி அரீனாவில் அரங்கம் நிறைந்த 6 நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு பின்னர், மேலும் 6 நிகழ்ச்சிகளை மான்சஸ்டர் நகரில் நடத்தினார். ஃபிப்ரவரி 2007 இல், மினாக் மற்றும் ஓலிவர் மார்டினஸ் தங்கள் உறவை முடித்துக் கொண்டதாகவும் ஆனால் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று அறிவித்தனர். “மார்டினசின் நேர்மையற்ற நிலை குறித்த ஊடகங்களின் தவறான குற்றச்சாட்டினால் சோகமடைந்து விட்டார்” என்று அறிக்கைகள் வெளிவந்தன.[77] அவர் மார்டினசுக்கு ஆதரவாகப் பேசினார். தனது மார்பக புற்று நோய் சிகிச்சையின் போது அவர் அளித்த ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார். “அவர் எப்போதும் இருந்தார், நடைமுறை காரியங்களுக்கு உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தார். அவர் மிக அற்புதமானவர். என்னுடன் இருப்பதற்காக தனது வேலைகளை தள்ளி வைத்து, திட்டங்களை நிறுத்தி வைத்தார். நான் பார்த்ததிலேயே அதிக மரியாதைக்குரிய நபர் அவர் தான்” என்று மினாக் விமர்சித்தார்.[77] மினாக், தனது பத்தாவது பதிப்பக தொகுப்பான எக்ஸ் மற்றும் அதிகமாக விவாதத்திற்கு உள்ளான “கம்பேக்”[103] ஆகியவற்றை நவம்பர் 2007 இல் வெளியிட்டார். எலக்ட்ரோ-பாணியில் அமைந்த இந்த தொகுப்பில், கை சேம்பர்ஸ், கேதி டெனிஸ், பிளட்ஷி அண்ட் ஆவந்த் மற்றும் கேல்வின் ஹாரிஸ் ஆகியோரது பங்குகளும் இருந்தது.[103] முதல் தனிப்பாடலான “2 ஹார்ட்ஸ்” உட்பட, எக்ஸ் க்கான நவீன பாணிக்காக மினாக் மற்றும் வில்லியம் பேகர் காபூகி நாடக மேடை மற்றும் பூம்பாக்ஸ் உள்ளிட்ட லண்டனின் ஆடல் அரங்கங்களில் இருந்து உருவான அழகியல் பொருட்களின் கலவையை வடிவமைத்தனர்.[104] மினாகின் மார்பக புற்று நோய் அனுபங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த தொகுப்பின் நோக்கம் மிக அற்பமானதாக இருப்பதாக இந்த தொகுப்பு பல விமர்சனங்களுக்கு உள்ளானது; இதில் உள்ள சில பாடல்களின் தனிப்பட்ட தன்மையை விளக்கி அவர் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது “என்னுடைய முடிவு என்னவென்றால் நான் என் தனிப்பட்ட தன்மையைக் கொண்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டிருந்தால் நான் “இம்பாசிபுள் பிரின்சஸ் 2” என பார்க்கப்பட்டிருப்பேன் மற்றும் இதே போல தான் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருப்பேன்”.[103] ரோலிங் ஸ்டோன்ஸின் திறனாய்வாளர் மினாகை “பாப் தேவதைகள் கொண்டாட்டத்தை திட்டமிடுபவர்களில் தலையாயவர்” என்று விவரிக்கிறார்.[105] அவரது மார்பகப் புற்று நோய் பற்றி கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக அந்த அனுபவம் அவரது இசையை கவனிக்கக் கூடிய வகையில் அழுத்தமாக ஆக்கவில்லை”.[105] மினாக் பின்னாளில் “திரும்பிப் பார்க்கும் போது கண்டிப்பாக தொகுப்பை இன்னும் சிறப்பாக ஆக்கி இருக்க முடியும், அதை வெளிப்படையாகக் கூற முடியும். எங்களுக்கு இருந்த நேரத்தைப் பொறுத்தவரை இது தான் சாத்தியம். அதை மிகவும் ரசித்து சந்தோஷமாக செய்தேன்.” என்று கூறினார்."[106] எக்ஸ் மற்றும் “2 ஹார்ட்ஸ்” ஆஸ்திரேலியாவில் தனிப்பாடல்[107] மற்றும் தொகுப்பு[108] பட்டியல்களில் முதல் இடத்தில் நுழைந்தது. யூகேவில் எக்ஸ் முதலில் மிக சுமாராகவே விற்பனையானது.[103] ஆனால் அதன் வர்த்தக நிலை படிப்படியாக முன்னேறியது.[109] மினாக் “சர்வதேச பெண் தனிப்பாடகர்” என்ற பிரிட் விருதையும் பெற்றார்.[110] எக்ஸ் ஏப்ரல் 2008 இல் அமெரிக்காவில் வெளியானது மற்றும் சிறந்த 100 தொகுப்புகள் பட்டியலில் 100க்கு மேல் உள்ள இடத்தில் தான் நுழைந்தது, பின்னர் சில இடங்கள் முன்னேறியது.[72] மினாக் அமெரிக்க சந்தையை “குறிப்பிடத்தக்க வகையில் கடினமானது.... வானொலியில் பல வகைகள் உள்ளது. இதில் எங்கு நான் பொருந்துவேன் என தீர்மானிப்பது கடினமாக உள்ளது."[111] எக்ஸ் 2009 கிராமி விருதுகளில் சிறந்த மின்னணு/ஆடல் தொகுப்பு என்ற பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்டது.[112] இது மினாகின் ஐந்தாவது கிராமி விருது பரிந்துரையாகும். டிசம்பர் 2007 இல், மினாக், நார்வேயில் நடந்த நோபெல் அமைதிப் பரிசு கச்சேரியில் கலந்து கொண்டார்.[113] பின்னர், யூகே திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான த எக்ஸ் ஃபேக்டரில் வெற்றி பெற்றவரும், டானி மினாகை குருவாகக் கொண்டவருமான லியான் ஜாக்சன் உடன் அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் நிகழ்ச்சி நடத்தினார்.[114] மே 2008 முதல், எக்ஸ் தொகுப்பை பிரபலப்படுத்த கைலிஎக்ஸ்2008 என்ற ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். இதுவரை அதிக தயாரிப்பு செலவு செய்யப்பட்ட சுற்றுப்பயணமாக இது அமைந்தது. மொத்த செலவு £10 மில்லியன்.[72][115] ஒத்திகைகளை அவர் “கண்டிப்பானது” என்றும் பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டது என வர்ணித்தாலும்,[106] சுற்றுப்பயணம் பொதுவாக நல்லமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விற்பனையும் ஆனது.[109] 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டில் தனது ஷோகேர்ள் ஹோம்கமிங்க் சுற்றுப்பயணத்தை தொடங்கியபோது மினாக் வொயிட் டைமண்ட் என்ற ஆவணப் படத்தில் தோன்றினார்.[116] அவர் த கைலி ஷோவில் தோன்றினார். இதில் மிக அதிகமாக நவீன பாணியில் அமைக்கப்பட்ட பாடல்களை மினாக் வழங்கினார், இத்துடன் மேத்யூ ஹோன், டானி மினாக், ஜேசன் டோனோவன் மற்றும் சைமன் கோவல் ஆகியோருடனான நகைச்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.[117] அவர் 2007 ஆம் ஆண்டின் டாக்டர் ஹூ என்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியில், “வாயேஜ் ஆஃப் த டைமண்ட்” என்பதில், ஆஸ்ட்ரிட் பெர்த், என்ற டைடானிக் சிறப்பு கப்பலில் பணிபுரியும் பணிப்பெண்ணாகத் தோன்றினார். அது 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை 1979 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தவர்களின் எண்ணிக்கையில் அது வரை அதிகமானதான 13.31 மில்லியன் மக்கள் பார்த்தனர்.[118] இசைக்கு செய்த சேவைக்கான ஓ.பி.ஈக்காக, ராணி எலிசபத் II இன் 2008 புது வருட விருதுப் பட்டியலில் மினாக் இடம் பெற இருப்பதாக டிசம்பர் 2007 இறுதியில் அறிவிக்கப்பட்டது.[119] “நான் பெருமைப்படும் அளவிற்கு வியப்பும் அடைகிறேன். என்னுடைய தத்தெடுத்த வீடான யூகே என்னை இந்த வகையில் பெருமைப் படுத்தியது எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது” என மினாக் கூறினார்.[120] 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேல்ஸ் இளவரசரிடமிருந்து ஓ.பி.ஈயை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.[121] மே 2008 இல், ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய கலாச்சார விருதான ஆர்டர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்ட்ர்ஸ் என்பது மினாக்கிற்கு வழங்கப்பட்டது. கலாச்சார அமைச்சர் கிரிஸ்டின் ஆல்பனல் மினாகை “எதைத் தொட்டாலும் பொன்னாக மாற்றக்கூடிய சர்வதேச இசையின் மைடாஸ்” என்று வர்ணித்தார் மற்றும் பொதுப்படையாக தனது மார்பகப் புற்று நோய் குறித்து பேசியதற்காக மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார்.[99] ஜூலையில், ஒரு சிறிய செய்தித்தாள் இவரை இங்கிலாந்தின் “அதிகமாக விரும்பப்படும் பிரபலமானவர்” என அறிவித்தது. அந்த பத்திரிக்கை “மார்பகப் புற்று நோயோடு தைரியமாகப் போராடி அனைவரது இதயத்தையும் வென்று விட்டார்” என குறிப்பிட்டிருந்தது.[122] மேலும், 2008 பிரிட் விருதுகளில் “சிறந்த சர்வதேச பெண் தனிப்பாடல் கலைஞர்” என்ற விருதையும் பெற்றார்.[123] ![]() செப்டம்பர் 2008 இன் கடைசியில் மினாக் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடுகளில் தனது நிகழ்ச்சியை நடத்தினார். துபாயில் உள்ள பிரத்யேக உணவு மற்றும் பொழுதுபோக்கு இடமான அட்லாண்டிஸ், த பாம் என்பதன் தொடக்க விழாவில் முதன்மையான ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.[124] நவம்பர் முதல் அவர் தனது கைலிஎக்ஸ்2008 சுற்றுப்பயணத்தை தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களுக்குக் கொண்டு சென்று தொடர்ந்தார்.[125] இந்த சுற்றுப்பயணம் சுமார் 21 நாடுகளுக்கு சென்றது மற்றும் $70,000,000 மதிப்புள்ள நுழைவுச் சீட்டுகள் விற்று பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.[126] அவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று 2009 பிரிட் விருதுகளை ஜேம்ஸ் கார்டன் மற்றும் மேத்யூ ஹான் ஆகியோருடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.[127] செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2009 இல் தனது முதல் வட அமெரிக்க சுற்றுப் பயணமாக ஃபார் யூ ஃபார் மீ சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதில் அமெரிக்கா மற்றும் கானடாவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.[126] அவர் ஒரு பாலிவுட் படமான புளூ என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்காகவும் தோன்றினார்.[85] தனது 11வது பதிப்பக தொகுப்பிற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் அது ஆடல் மற்றும் பாப் இசை கொண்ட தொகுப்பாக இருக்கும் என்றும் உறுதி செய்தார்.[85] 2009 ஆம் ஆண்டு 13 செப்டம்பரில், லண்டனில் உள்ள ஹைட் பார்க்கில் ஏ.பி.பி.ஏ நினைவு கச்சேரியான “இசைக்கு நன்றி… ஏ.பி.பி.ஏவின் இசையின் கொண்டாட்டம்” என்பதில் பென்னி ஆண்டர்சன் உடன் இணைந்து “வெண் ஆல் இஸ் செட் அண்ட் டன்” மற்றும் “சூப்பர் ட்ரூப்பர்” ஆகிய பாடல்களை அரங்கேற்றினார். இதுவே 2009 ஆம் ஆண்டில் லண்டனில் அவர் நடத்திய ஒரே நிகழ்ச்சியாகும்.[128] டிசம்பர் 14, 2009 அன்று கைலி லைவ் இன் நியூ யார்க் என்று பெயரிடப்பட்ட பதிவிறக்கம் மட்டும் செய்யக்கூடிய ஒரு கச்சேரி தொகுப்பை வெளியிட்டார். இந்த தொகுப்பு நியூயார்க்கின் ஹேமர்ஸ்டின் பால்ரூமில் பதிவு செய்யப்பட்டது மற்றும் இதில் 25 நேரடி பதிப்பு பாடல்கள் இடம் பெற்றிருந்தது.[129] 2010-தற்போது வரை: புது பாடல் தொகுப்புமினாக் தனது 11வது பதிப்பக தொகுப்புக்காக பணிப்புரிந்து வருவதாகவும், இந்த தொகுப்பு ஆடல் மற்றும் பாப் இசை கொண்டதாக இருக்கும் என்றும் அவர் உறுதி செய்தார்.[85] பிஃப்கோ, நெரினா பேலட் மற்றும் ஆண்டி சாடர்லி, செனோமேனியா, கால்வின் ஹாரிஸ், ஜேக் ஷியர்ஸ் மற்றும் சிசர் சிஸ்டர்ஸின் பேபிடேடி, கிரெக் கர்ஸ்டின், ஸ்டுவர்டு பிரைஸ் மற்றும் லேடி காகாவுடன் பணிபுரிந்ததற்காக அறியப்படும் ரெட் ஒன், லிட்டில் பூட்ஸ் மற்றும் சுகாபேப்ஸ் ஆகியோர் இதுவரை மினாகுடன் பணிபுரிய உறுதி செய்யப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களில் சிலராவர். இந்த பதிப்புகளில் இது வரை கேட்கப்பட்ட ஒரே பாடல் நெரினா பேலட் மற்றும் ஆண்டி சாட்டர்லி ஆகியோர் எழுதிய “பெட்டர் தேன் டுடே” என்ற பாடலாகும். இதனை மினாக் தனது 2009 ஆம் ஆண்டின் “ஃபார் யூ, ஃபார் மீ சுற்றுப்பயணத்தில்” பாடினார். மினாக் “இந்த பாடல் தனது அடுத்த தொகுப்பில் இடம் பெறும்” என்று தெரிவித்தார்.[130] Billboard.com.[131] என்பதன் படி இந்த தொகுப்பு ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்படும். தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் சுமாரான விமர்சனங்களைத் தொடர்ந்து, இந்த முறை யுனைடட் ஸ்டேட்ஸ் தான் முதல் முன்னுரிமையாக இருக்கும். “நான் ஒரு தேவதையை எதிர்பார்த்திருந்தேன், பல காலமாக இதையே அவர் செய்து கொண்டிருப்பதால் அப்படி தான் இருப்பார் என நினைத்தேன்”. “அவருடன் பணி புரிவது சந்தோஷமானதாகவும் சுலபமானதாகவும் இருந்தது. நாங்கள் 3 பாடல்களை இரண்டு நாட்களில் செய்தோம்... (மற்றும்) எல்.ஏவில் மேலும் பல பாடல்கள் செய்ய உள்ளோம் என ரெட் ஒன் மினாக் பற்றி குறிப்பிட்டார்."[132] புகழ் மற்றும் பிரபல அந்தஸ்து
Rufus Wainwright, ஒரு பதிப்பக கலைஞராக மினாகை கருத அவரின் உழைப்பை தடுக்கும் வகையில் அவர் “தனது கடன்களை தரவில்லை” என்ற எண்ணம் அமைந்தது. நெய்பர்ஸ் தொடரில் அவர் பங்குபெற்றபோது கிடைத்த புகழை அதிகமாகப் பயன்படுத்தி ஒரு உருவாக்கப்பட்ட பாப் கலைஞராகவே இருந்தார் என்றும் கருதப்பட்டது.[31] மினாக் இந்த எண்ணத்தை ஒப்புக்கொள்ளும் வகையில், “ஒரு பதிப்பு நிறுவனத்தின் அங்கமாக நீங்கள் இருந்தால், உங்களை உருவாக்கப்பட்ட கலைஞர் என்று கூறுவது ஓரளவு சரிதான். நீங்கள் ஒரு பொருளாகவும் பொருளை விற்கக்கூடியவராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் திறமையானவர் அல்ல அல்லது நீங்கள் எந்தவித வித்தியாசமான அல்லது நீங்கள் எதை செய்யப்போகிறீர்கள் அல்லது செய்ய விருப்பப்படவில்லை, எங்கு செல்லப் போகிறீர்கள் போன்ற வர்த்தக முடிவுகளை எடுக்க முடியாது என்பது இதன் அர்த்தம் அல்ல.[79] 1993 ஆம் ஆண்டில், பாஸ் ல்யூர்மேன் மினாகை, மர்லின் மன்றோவுடன் பணி புரிந்ததற்காக அறியப்பட்ட புகைப்படக் கலைஞர் பெர்ட் ஸ்டேர்னுக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்டேர்ன் அவரை லாஸ் ஏண்ஜலஸில் வைத்து புகைப்படங்கள் எடுத்தார். அவரை மன்றோவுடன் ஒப்பிட்டி, மினாகிடமும் அவரைப் போன்றே பாதிப்பு அடையும் தன்மை மற்றும் காமக்கிளர்ச்சி ஆகியவற்றின் சரியான கலவை இருப்பதாகக் கூறினார்.[134] அவர் தனது தொழில் வாழ்க்கையில், அவருக்கென புதிய “பாணியை” உருவாக்க முனையும் புகைப்படக் கலைஞர்களையே தேர்ந்தெடுத்தார். இதன் காரணமாக உருவான அவரது புகைப்படங்கள் பல வகையான பத்திரிக்கைகளில் வெளியானது. நவீன பத்திரிக்கையான த பேஸ் தொடங்கி பாரம்பரியமான மதிநுட்பமிக்க வோக் மற்றும் வேனிடி ஃபேர்" போன்றவற்றில் வெளியாகி, பல தரப்பட்ட குழுவான மக்களுக்கு மினாகின் முகம் மற்றும் பெயர் தெரியும்படி செய்தது. வெறும் பதிவுகளை விற்பதிலேயே கவனம் செலுத்தும் மற்ற பாப் கலைஞர்களுக்கு மாறாக ஐரோப்பாவின் பிரதான பாப் கலாசாரத்தில் அவர் வெற்றியோடு நுழைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று பாணி வடிவமைப்பாளர் வில்லியம் பேகர் கூறினார்.[135] ![]() 2000 ஆம் ஆண்டு, மினாக் மறுபடியும் பிரபலமானபோது, அவரது விமர்சகர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் அவர் இந்த தொழிலில் இருந்ததனால், அவர் இசையில் ஒரு நம்பத்தக்க இடத்தை அடைந்துவிட்டதாகக் கருதப்பட்டார்.[136] “ஒரு காலத்தில், பிரிட்னி, கிரிஸ்டினா, ஜெசிகா அல்லது மாண்டி போன்றவர்களைப் பற்றி யாரும் அறியாதபோது, ஆஸ்திரேலிய பாடகி கைலி மினாக் அனைத்து பட்டியல்களிலும் பாப் இசையின் இளவரசியாக இருந்தார்” என அதே வருடத்தில் பிர்மிங்கம் போஸ்ட் குறிப்பிட்டது. 1988 ஆம் ஆண்டில் அவரது முதல் தனிப்பாடலான, ஐ ஷுட் பி சோ லக்கி, 5 வாரங்கள் முதல் இடத்தில் இருந்தது. இதன் மூலம் தொடர்ந்து 13 முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் படியான பாடல்களைக் கொடுத்து யூகே பட்டியல்களில் மிக அதிக வெற்றி பெற்ற பாடகியாக கருதப்பட்டார்"[137] ஒரு முழுமையான “அடுத்த வீட்டுப் பெண்” போன்ற கருத்தில் இருந்து ஒரு கவரக்கூடிய மற்றும் பதப்பட்ட கலைஞராக மாறியிருப்பது மேலும் பல விசிறிகளை அவருக்குப் பெற்றுத் தந்தது.[136] அவரது ‘ஸ்பின்னிங்க் அரௌண்ட்” என்ற படம் பல ஊடக வெளிப்பாடுகளுக்குக் காரணமானது. அவரை ‘கவர்ச்சி கைலி” என குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்த பல படங்களில் கவர்ச்சி என்பது அதிகமாகக் காணப்பட்டது.[136] அவரது இந்த கவர்ச்சி அடையாளத்தை வில்லியம் பேகர் “இருமுனைக்கூறு வாள்” என வர்ணித்தார். அவர் மேலும் கூறுகையில், “அவரது கவர்ச்சி அடையாளத்தை அவரது இசையை மிகைப்படுத்தி பாடல் தொகுப்புகளை விற்க பயன்படுத்தினோம். ஆனால் அதுவே அவர் உண்மையாக யார் என்பதை மறைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது: ஒரு பாப் பாடகி”.[138] 20 வருடங்கள் கலைஞராக இருந்தபின், மினாக் ஒரு புது பாணி “உருவாக்குபவர்” மற்றும் “தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் புது பாணிகளை உருவாக்கும் பிரபலம்” என்று விவரிக்கப்பட்டார்.[139] அவர் பல வெற்றிகரமான சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டதற்காகவும், உலகளவில் 60 மில்லியனுக்கு மேல் விற்பனை செய்ததற்காகவும் பாராட்டப்படுகிறார்.[140][141] மினாக், ஓரினச் சேர்க்கையாளர்களிடையே பிரபலமாகக் கருதப்படுகிறார். “நான் பாரம்பரியமாக ஒரினச் சேர்க்கையாளரின் பிரபலம் அல்ல. எனது வாழ்வில் எந்த சோகமும் இல்லை, சோகமான உடைகள் மட்டுமே இருந்திருக்கின்றன. “ஓரினச் சேர்க்கையாளர்கள் தன்னோடு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்கிறார்கள்... அவர்கள் என்னை ஒரு வகையில் தத்தெடுத்திருக்கிறார்கள்” என்ற கருத்து மூலம் இதனை ஊக்கப்படுத்தினார்.[79] சிட்னியில் உள்ள ஒரு மனமகிழ்மன்றத்திலும் பின்னர் மெல்போர்னிலும் ஒரே போல ஆடல் அழகிகள் தனது பாடலுக்கு நடனமாடியதைக் கண்ட பிறகு, தனது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பார்வையாளர்கள் பற்றி தனக்கு 1988 ஆம் ஆண்டு தெரியவந்தது என்று மினாக் விவரித்தார். இது போன்ற “பாராட்டும் கூட்டம்” இருப்பதை எண்ணி அவர் “மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும்”, உலக அளவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் நிறைந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்த இது தனக்கு ஊக்கமளித்ததாகவும் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் 1994 சிட்னி கே மற்றும் லெஸ்பியன் மார்டி கிராஸில் தலைமை நிகழ்ச்சியும் நடத்தினார்.[142] மினாக் மடோனாவால் ஈர்க்கப்பட்டு அவரது தொழில் வாழ்வு முழுவதும் மடோனாவோடு ஒப்பிடப்பட்டார், அவரது படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் இதற்கு முன் மடோனா தயாரித்தவையோடு நேரடியாக ஒப்பிடப்பட்டன. அவரது முன்னாள் தயாரிப்பாளர் பீட் வாடர்மென் அவரது வெற்றியின் முதல் நிலைகளை நினைவு கூறும் போது, “அவள் புதிய இளவரசி அல்லது மடோனாவாக ஆவதை தனது இலக்காகக் கொண்டிருந்தார்… எனக்கு வியப்பாக இருந்தது என்னவெனில் மடோனாவை விட நான்கு மடங்கு அதிகமாக விற்றபோதிலும், அவரைப் போலவே மினாக் இருக்க விரும்பினார்” என்று கூறுகிறார்.[4] மடோனாவின் பிளாண்ட் ஆம்பிஷன் உலக சுற்றுப்பயணத்தைப் போலவே மினாகின் 1991 ஆம் ஆண்டு ரிதம் ஆஃப் லவ் சுற்றுப்பயணம் இருந்ததாக பல எதிர்மறையான கருத்துகள் கூறப்பட்டது மட்டுமன்றி அவர் மடோனா போல இருக்க விரும்புபவர் என்ற முத்திரையும் ஏற்பட்டது.[143] த டெலிகிராஃபின் கேதி மெக்காபே மினாக் மற்றும் மடோனா இருவரும் ஒரே போன்ற இசை மற்றும் பாணியை பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.[133] மேலும், “அவர்கள் இருவரும் ஒன்று சேரும் பாப்-கலாசார அளவீடு ஆச்சரியமானது. மினாகின் சில நிகழ்ச்சிகள் பலரை மூச்சுத் திணற வைக்கும், மடோனாவின் நிகழ்ச்சிகள் உலகில் வேறு எந்த கலைஞரை விடவும் அதிக மத மற்றும் அரசியல் விவாதங்களைத் தூண்டும்... சுருக்கமாகக் கூறினால், மடோனா ஒரு இருளின் வலிமை; கைலி வெளிச்சத்தின் வலிமை”.[133] ரோலிங்க் ஸ்டோன் கூறுகையில், அமெரிக்காவைத் தவிர உலகில் அனைத்து இடங்களிலும், மினாக் “மடோனாவுக்கு எதிரான ஒரே பிரபலம்” எனக் விமர்சிக்கிறார். மேலும், “மடோனாவைப் போல மினாக் மாசற்ற பாடகி அல்ல, ஆனால் புத்திசாலித்தனமான புது போக்குகளை உருவாக்குபவர்” என்றும் கூறுகிறார்.[70] மடோனாவைப் பற்றி மினாக் கூறுகையில், “பாப் மற்றும் புது பாணிகளில் அவரது தாக்கம் உலகளவில் மிகப் பெரியது, அவர் உருவாக்கிய புது போக்குகள் எனக்குள் மட்டும் தாக்கம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கில்லை. நான் மடோனாவை பார்த்து பிரமிக்கிறேன். ஆனால் செய்ய வேண்டிய அனைத்தையும் அவர் செய்து விட்டதால் தொடக்க காலத்தில் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது...” எனக் கூறுகிறார்.[143] மேலும் பல தருணங்களில் கைலி “மடோனா பாப் இசையின் ராணி, நான் இளவரசி. இதில் நான் சந்தோஷப்படுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.[133] ஜனவரி 2007 இல், லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மினாகின் நான்காவது மெழுகு சிலையை திறந்து வைத்தது; ராணி எலிசபெத் II இன் மாதிரி சிலைகள் மட்டும் தான் இதை விட அதிகமாக செய்யப்பட்டுள்ளது.[144] அதே வாரத்தில் வெம்பிலி அரீனாவின் “ஸ்கொயர் ஆஃப் ஃபேமில்” அவரது வெண்கலத்தில் வார்த்தெடுத்த உருவம் சேர்க்கப்பட்டது.[144] நவம்பர் 2007 இல், மெல்பர்ன் டாக்லாண்ட்ஸில் நிரந்தர காட்சியாக மினாகின் வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது.[145] வயதாவதை தாமதமாக்க தான் போடாக்ஸ் ஊசிகளை உபயோகிப்பதாக 2009 ஆம் ஆண்டில் மினாக் ஒப்புக் கொண்டார். முந்தைய காலங்களை விட அழகுப் பொருட்களை உபயோகிப்பது பற்றிய தவறான எண்ணங்கள் தற்போது குறைந்துள்ளது மற்றும் இதனை “சாதகமாக பயன்படுத்திக்” கொள்வது பற்றி பெண்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும் விமர்சிக்கிறார்.[146] இசைசரிதம்
திரைப்படப் பட்டியல்மேலும் காண்க
குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்குறிப்புகள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia