கை. பத்மநாபன் நாயர்
கை. பத்மநாபன் நாயர் (K. Padmanabhan Nair) (1919-1990) ஒரு இந்திய திரைப்பட இயக்குனராகவும், மலையாளத் திரைப்படங்களில் திரைக்கதை எழுத்தாளருமாவார்.[1][2][3] ஏறக்குறைய 20 திரைப்படங்களுக்கு உரையாடல், கதை திரைக்கதை எழுதியுள்ளார். 1960களில் 5 மலையாளத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[4] இவர் 1990இல் இறந்தார்.[5][6] தனிப்பட்ட வாழ்க்கை1919ஆம் ஆண்டில் பையனூர் கைத்தறி இராமன் நம்பியார், குட்டியம்மா ஆகியோருக்கு பிறந்தார். இவர் 1944 முதல் அனைத்திந்திய வானொலியில்]] பணியாற்றினார். தச்சோலி ஒத்தேனன், குஞ்சாலிமரக்கார் ஆகிய கதைகளுக்கு கேரள மாநில விருதுகளைப் பெற்றார். மலையாளத் திரைப்பட பின்னணிப் பாடகியான சாந்தா பி. நாயரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாடகி இலதா ராசு என்ற மகள் உள்ளார். பின்னணிப் பாடகர் ஜே. எம். இராசு இவரது மருமகனாவார். இவரது பேரன் ஆலாப் இராசுவும் பின்னணி பாடகராவார்.[7] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia