கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்
தான்தோன்றீச்சரம் (தான்தோன்றீஸ்வரம்) இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். [2] இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இது ஒன்று. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் "புல்லுண்ட கல் நந்தி" இக்கோவிலின் பெருமைகளில் ஒன்றாக விளங்குகின்றது. வெள்ளையர்களால் ஈழத்தில் சைவ சமயகோவில்கள் உடைத்துத் தரமட்டமாக்கப்பட்ட போது இவ் கோவிலையும் விட்டு வைக்க விரும்பாத வெள்ளையர்கள் கோவிலை உடைக்க வந்தார்கள். குருக்களுடன் வெள்ளையர்களுக்கு இடம்பெற்ற விவாதத்தில் இந்த கல் நந்தி புல்லுண்ணும் என்ற குருக்களின் கூற்றை நிரூபிக்க ஆலயத்தின் கல் நந்தி எழுந்து காலால் மண்ணை எற்றி தனுப்போட்டு கொடுக்கப்பட்ட புல்லை உண்டு வெள்ளையர்களை மெய்மறக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடவைத்த வரலாற்றுப்பெருமை இவ் ஆலயத்துக்கு உண்டு. மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia