கொரிந்து வளைகுடா
![]() ![]() ![]() கொரிந்து வளைகுடா அல்லது கொரிந்திய வளைகுடா (Gulf of Corinth அல்லது the Corinthian Gulf கிரேக்கம்: Κορινθιακός Kόλπος , Korinthiakόs Kόlpos, Greek pronunciation: [korinθʝaˈkos ˈkolpos] ) என்பது அயோனியன் கடலின் ஆழமான நீர் உள்வாய் ஆகும். இது பெலோபொன்னீசியாவை மேற்கு கிரேக்கத்திலிருந்து பிரிக்கிறது. இது கிழக்கில் கொரிந்தின் பூசந்தியால் சூழப்பட்டுள்ளது, இதில் கொரிந்து கால்வாயும் அடங்கும். மேலும் இதன் மேற்கில் ரியான் ஜலசந்தியால் இது குறுகிய பட்ராஸ் வளைகுடாவாக ( அயோனியன் கடலின் ஒரு பகுதி) விரிவடைகிறது. ரியோ-ஆண்டிரியோ பாலம் 2004 முதல் இதன் குறுகிய பகுதியைக் கடக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வளைகுடாவானது பெரிய நிர்வாகப் பிரிவுகளை (பிராந்திய அலகுகள்) எல்லையாக கொண்டு உள்ளது: வடக்கில் ஏட்டோலியா-அகார்னானியா, போசிஸ், வடகிழக்கில் போயோட்டியா, கிழக்கில் அட்டிகா, தென்கிழக்கு மற்றும் தெற்கில் கொரிந்தியா, தென்மேற்கில் அக்கேயா ஆகிய பிராந்தியங்கள் உள்ளன. இடைக்காலத்தில், இந்த வளைகுடாவானது லெபாண்டோ வளைகுடா ( நவ்ப்பக்டசின் இத்தாலிய வடிவம்) என்று அறியப்பட்டது. கிரேக்க வணிகத் துறைமுகமான பேரேயஸ் மேற்கு மத்தியதரைக் கடல் மற்றும் எர்மிசர் துறைமுகங்களுக்கு இடையேயான கப்பல் பாதைகள் இந்த வளைகுடாவில் செல்கின்றன.[2] புவியியல்அனடோலியன் புவித் தட்டு மேற்கு நோக்கி நகர்வதால் டெக்டோனிக் பிளவு விரிவடைவதால் வளைகுடா உருவானது, மேலும் ஆண்டுக்கு 10 mm (0.39 அங்) ஆக விரிவடைகிறது.[3] சுற்றியுள்ள உரசு முனைகளால் 6.5 ரிக்டர் அளவு வரை நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அவை ஒப்பீட்டளவில் அரிதாகவே நிகழக்கூடியவை. 1995 சூன் 15, 1995 அன்று ஏஜியோன் நகருக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.[4] இயற்கை![]() துடுப்பு திமிங்கலங்கள் [5] அல்லது ஓங்கில்கள் போன்ற கடற்பாலூட்டிகள் எப்போதாவது கொரிந்தியன் வளைகுடாவிற்குள் நுழைவதாக அறியப்படுகிறது.[6] வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாக்கள்
தீவுகள்
பாலங்கள்
நகரங்கள் மற்றும் ஊர்கள்வளைகுடாவிற்கு அடுத்ததாக அமைந்துள்ள முக்கிய ஊர்கள் மற்றும் நகரங்கள், வடமேற்கில் இருந்து கடிகார திசையில் இருந்து, பிராந்திய அலகு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது:
கலக்கும் ஆறுகள்அனைத்து துணை ஆறுகளும் மேற்கிலிருந்து கிழக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. வடக்கு
தெற்கு
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia