கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில்

கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில்

கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக் குன்றில் அமைந்துள்ள நாட்டார் தெய்வமான மாசி பெரியசாமி கோயிலாகும். இக்கோயிலில் சிறிய குடிசையில் மாசி பெரியசாமி கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. எதிரே ஒரு கம்பமும், உயரமான கல்விளக்குத் தூணும் அமைந்துள்ளது. மாசி பெரியசாமி கோயிலின் வலது புறத்தில் மாசி கருப்புசாமி கோயிலும் அதனருகே குதிரை வாகனமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெரியசாமியை கொல்லிமலையின் அடிவாரத்தில் மலையாளிகள் மட்டும் வழிபட்டு வந்ததாக ஓமாந்தூர் தல புராணம் கூறுகிறது.[1]

கோயிலுக்கு வெளியே வேல்களில் கோழி குத்துதல் எனும் சடங்கிற்காக பல கோழிகள் உயிரோடு குத்தி வைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் கொல்லிமலையில் அரப்பள்ளீசுவரர் கோயிலுக்கும் மேலாக உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல சரியான மலைப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே இக்கோயிலுக்கு செல்வதற்கு மழைக்குக் கீழிருக்கும் பாதையில் ஏறிச் செல்கின்றனர்.

ஆதாரங்கள்

  1. அருள்மிகு மாசிப்பெரியசாமி திருக்கோயில்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya