மாசி பெரியசாமி

மாசி பெரியசாமி என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவரை நாட்டார் தெய்வங்களான கருப்பு, முனி போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் முன்னோடியாக கூறுகின்றனர். இவருக்கு கொல்லிமலையில் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கொல்லிமலையில் மாசி என்ற பாறையில் அமைந்துள்ளது. இது கொல்லிமலையின் உச்சிப்பகுதியென்பதால் வாகனங்கள் பூஞ்சோலை என்ற இடம்வரை மட்டுமே செல்கின்றன. அதன் பிறகு மலையில் ஏறிச் செல்ல வேண்டும். இந்த கோயிலின் பதிவுகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு கோயில்களாக உள்ளன.

வேறு பெயர்கள்

பெரிசாமியை பெரியண்ணசாமி என்றும் அழைக்கின்றனர். காவல் தெய்வங்கள் அனைத்திற்கும் இந்த பெரியசாமியே மூர்த்தவர் என்றும், இவருக்கு காவல் தெய்வங்களான கருப்பு மற்றும் முனி ஆகியவற்றின் பெயர்களையும் இவருக்கு உரியது என்கின்றனர்.

  • மாசி பெரியண்ணன்
  • ஆல்முனி
  • கருப்பசாமி
  • முனி
  • பனையடி கருப்பு
  • சங்கிலி கருப்பு

தொன்மம்

வைரசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் உள்ள மாசி பெரியசாமி சிலை

காசி சிவபெருமானாகிய காசிவிஸ்வநாதர், தென்னகத்திற்கு வந்தார். அவரைத் தேடி அன்ன காமாட்சியம்மனும் தென்னகத்திற்கு வந்தார். காமாட்சியம்மனுக்குத் துணையாக அவருடைய அண்ணனாகிய பெருமாளும் வந்தார். அவர் வைரசெட்டி பாளையத்திற்கு வந்து வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சியம்மனை தங்கிக்கொள்ளும்படி சொல்லிவிட்டு சிவபெருமானைத் தேடி கொல்லிமலையில் ஏறினார். அவருடைய மகிமையால் அவரைத்தாங்காது மற்ற குன்றுகள் ஆடின. அவர் மாசிக்குன்றில் நின்றபோது ஆடாமல் தாங்கிக்கொண்டது. அதனால் இங்கேயே அவர் தங்கிவிட்டார்.

அங்கு ஆடு மேய்ப்பவர்களிடம் கொடை விழா எடுக்கவும், பூசை செய்யவும் மாசி பெரியசாமி கேட்டுக் கொண்டதால் அவர்கள் மாசி மாதம் அன்று விழாவாக எடுத்து கொடை கொடுத்தனர்.

ஆய்வு

மாசி பெரியசாமி வேங்கையை தன்னுடைய வேலால் குத்தியவாறு காட்சிதருகிறார். அவரை ஆடு மேய்ப்பவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இதனை வைத்து சைவ வைணவ தொன்மத்தினை தவிர்த்துப் பார்த்தால் பழங்காலத்தில் ஆட்டினைக் கொல்ல வந்த புலியைக் குத்தி கொன்று இறந்துபட்ட வீரராக இவரைக் கருதலாம். புலிகுத்தி பட்டான் என்று பரவலாக வழிபடப்படுகின்ற புலியை எதிர்த்து கொன்று தானும் இறந்த வீரர்களுக்கு இவ்வாறு வீரநடுக்கற்கலை வைத்து வழிபடுகின்ற வழக்கத்தினை அறியலாம்.

உருவ அமைப்பு

மாசி பெரியசாமி வலது கையில் உள்ள வேலால் வேங்கையொன்றினைக் குத்தி, வலது காலால் மிதிக்கிறார். இடது கையில் கதையாயுதத்தினை நிலத்தில் படுமாறு வைத்துள்ளார். முறுக்கிய மீசையுடன் கோபமான கண்களுடனும் காட்சிதருகிறார். சோழியவெள்ளாளர்கள் வழிபடும் மாசி பெரியசாமி இவ்வாறான தோற்றத்துடன் உள்ளார். அதனால் ஆல் எனப்படும் கல்லாத்துக்கோம்பை ஆல்முனி பெரியண்ணசாமி கோயிலிலும், வைரசெட்டிப்பாளையம் அன்ன காமாட்சியம்மன் கோயிலிலும் இவ்வாறான தோற்றத்துடன் உள்ளார். புலிகுத்தி பட்டான் நடுகல்லில் இவ்வாறு புலியை குத்தியபடி இருக்கும் சிற்பம் வடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நாடார்கள் வழிபடும் குருக்கத்தி மாசி பெரியசாமி கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்தவாரும், முத்தரையர் வழிபடும் கல்லாத்துக்கோம்பை பெரியண்ணசாமி கோயிலில் வேங்கையின் மீது அமர்ந்தவாரும் உள்ளார். ஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவிலில் மாசி பெரியசாமிக்கு இவ்வாறான உருவத் தோற்றம் எதுவும் இல்லை. இங்கு ஒளி வடிவில் மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது.

பெரியசாமி கோயில்கள்

வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் மாசி பெரியசாமி வேங்கையை வேலால் குத்தும் சுதைச் சிற்பம். இருபுறமும் இரு முனிவர்களும், இரு வேங்கைகளும் உள்ளன.

ஆதாரங்கள்

  1. "Masi periyanna swamy Temple : Masi periyanna swamy Temple Details - Masi periyanna swamy- Omandur - Tamilnadu Temple - மாசி பெரியண்ணசுவாமி".
  2. "பெரம்பலூர் மாசி பெரியண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்".

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya