கொழும்புத் திட்டம்கொழும்புத் திட்டம் (Colombo Plan) என்பது ஆசியா-பசிபிக் பகுதிகளில் உள்ள உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவ்வவ் நாட்டு அரசுகளின் கூட்டுறவினால் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். ஜனவரி 1950 இல் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களிப் பரிந்துரைக்க ஒரு ஆலோசனை சபை இம்மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஆறாண்டுகளில் முடிவடையும் திட்டமாகவே இவ்வமைப்பூ உருவாக்கப்பட்டாலும் பின்னர் பல தடவைகள் நீடிக்கப்பட்டு 1980 முதல் ஒரு நிரந்தர அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் கொழும்பில் உள்ளது. ஆரம்பத்தில் 7 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட இவ்வமைப்பில் தற்போது 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதையை உறுப்பு நாடுகள்![]()
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia