கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்2007 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் அதிகாலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பல இடங்களிலும் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பினர்[1]. வெளியேற்றத்துக்காக கூறப்படும் காரணங்கள்கொழும்பில் விடுதிகளில் சாதாரண பொது மக்கள் போல் தங்கியிருந்து, புலிகள் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் காரணமற்ற முறையில் விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்களை அவர்களின் சொந்தப் பிரதேசத்திற்கு அனுப்புவதாக அரசு அறிவித்து தமிழர்களை பலவந்தமாக அனுப்பியபோதில் இதில் பலர் வெளிநாடுகளிற்குச் செல்லவும் திருமணத்திற்காகவும் இதர பல வேலைகளுக்குமாகக் கொழும்பில் வந்துள்ளவர்களேயாவர் என்பது தெளிவாக நிரூபிக்கப்படுள்ளது. தமிழர்களை கொழும்பில் இருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான உத்தரவினை இலங்கையின் தற்போதைய அதிபரின் சகோதரரான கொத்தபாய ராசபக்சவே காரணம் ஆகும்.[2] மனித உரிமை மீறல்கள்
தமிழர்களின் எதிர்ப்பு போராட்டம்இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் எதிர்ப்பு போராட்டம்தமிழர்களை வெளியேற்றத் தடைகொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.[7] இதன் மூலம் கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றவோ, தமிழர்கள் கொழும்பினுள் வருவதைத் தடுக்கவோ முடியாது என்று நீதி மன்று உத்தரவிட்டுள்ளது. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia