கோக்ரஜார்
கோக்ரஜார் (Kokrajhar) (ˌkɒkrəˈʤɑ:) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த அசாம் மாநிலத்தில் கிழக்கேயும் மற்றும் பிரம்மபுத்திரா ஆறுக்கு வடக்கே உள்ள தன்னாட்சிப் பகுதியான போடோலாந்து பிரதேசத்தில், கௌரங் ஆற்றின் கரையில் அமைந்த நகரம ஆகும். இந்நகரம் கோக்ரஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இந்நகரம் 26°24′N 90°16′E / 26.4°N 90.27°E பாகையில் அமைந்துள்ளது.[1] இது கடல் மட்டத்திலிருந்து 38 மீட்டர் (124 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்![]() இந்நகரத்தின் முக்கிய இன மக்கள் போடோக்கள் ஆவார். மேலும் இந்நகரத்தில் அசாமியர், நேபாளிகள், வங்காளிகள், காரோ மக்கள் மற்றும் சந்தாலிகள் வாழ்கின்றனர். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 10 வார்டுகளும், 7,420 வீடுகளும் கொண்ட கோக்ரஜார் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 34,136 ஆகும். இதில் ஆண்கள் 17,567 மற்றும் பெண்கள் 16,569 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3095 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.96% ஆகவுள்ளது. கோக்ரஜார் நகர மக்கள் தொகையில் இந்துக்கள் 94.83%, இசுலாமியர் 2.95%, கிறித்தவர்கள் 1.14%, பௌத்தர்கள் 0.90% மற்றவர்கள் 0.17% ஆக உள்ளனர்.[2][3] தட்பவெப்பம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia