போடோலாந்து
![]()
போடோலாந்து (Bodoland, போடோ மொழி: बड़ोलेण्ड), இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள சுய ஆட்சிப் பகுதியாகும். இது பூட்டானையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் எல்லைகளாகக் கொண்டு, பிரம்மபுத்திரா நதிக்கருகில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் இப்பகுதியில் மட்டும் வாழும் தனித்த போடோ இனத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது போடோ ஒப்பந்தப்படி இதை போடோலாந்து பிரதேச தன்னாட்சிக் குழு நிர்வகிக்கிறது.[1][2]போடோலாந்து தன்னாடசி பிரதேசத்தில் கோகராசார் மாவட்டம், சிராங் மாவட்டம், பாக்சா மாவட்டம் மற்றும் உதல்குரி மாவட்டம் என 4 மாவட்ட்டங்கள் உள்ளது. அசாமில் இவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதால், தனிமாநில கோரிக்கை எழுந்தது. இப்பகுதி தற்போது தனி நிர்வாகக் குழுவால் இயங்குகிறது. இந்திய அரசின் உத்தரவோ, அசாமின் உத்தரவோ, எந்த அரசாணையாயிருந்தாலும், இந்த நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டால்தான் செயல்பாட்டிலிருக்கும். எந்த ஆணையையும் செயல்படுத்தவோ, நிறுத்தவோ இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தாய்நாட்டிற்கான தேவைபோடோக்களின் முன்னைய வரலாறு பெரிதும் அறியப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக, இவர்கள் நெசவாளர்களாகவும், விவசாயிகளாகவும் அமைதியான சமூகங்களாகவும் வாழ்ந்துவருகின்றனர். உலகின் பல பண்பாடுகளைப் போன்றே போடோக்களும் தேசியவாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அசாமியர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது ஏற்றதாக இல்லை. [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய ஆட்சி]]யின் முன், திமாச கசரி அரசு அசாம் முழுவதையும் ஆட்சி செய்து வந்தது. வரலாற்றின் படி, கசரி அரசின் தலைநகராக திமப்பூர் விளங்கியது. திமாசர்கள் திபெத்திய- பர்மிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பிரித்தானிய அரசினர் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் 300 ஆண்டுகள் இப்பகுதியை ஆண்டனர். பிற இந்தியருடன் ஒப்பிடுகையில் இவர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிந்தங்கியிருந்தனர், அசாமில் எண்ணெயும் இயற்கை வாயும் தயாரிக்கப்பட்டன, விடுதலைக்குமுன், இது பிற இந்தியப் பகுதிகளுடன் தொடர்பற்ற பகுதியாயிருந்தது. இந்திய விடுதலைக்குப் பின் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போடோக்கள் தங்களை பழங்குடியினராக பதிவு செய்தனர். அசாமின் விவசாயப் பழங்குடியினர் குழு1960களின் தொடக்கத்தில் போடோக்களின் அரசியலமைப்பான அசாமிய பழங்குடியினக் குழு, அசாமில் போடோக்களின் நிலம் நிலப்பிரபுக்களினாலும், புதுக் குடியேற்றவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டதை உணர்ந்தனர். மேலும், போடோக்கள் அரௌச் வழங்கும் நிதியைப் பெறுவதற்கான வழியில்லை. நிதிப் பற்றாக்குறையால் போடோக்கள் வாழ் பகுதிகளில் கல்வி எட்டாக்கனியாகவே இருந்தது. அப்போதைய காலங்களில், அசாமின் பிற பகுதிகளுக்கும், போடோக்கள் வாழும் பகுதிகளுக்கும் போதிய போக்குவரத்து வசதி இருக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அசாமில் இருந்து உதயாஞ்சல் என்ற பகுதி பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கோரப்பட்ட இப்பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ப்பகுதிகள் அடங்கும். இதன்மூலம் போடோக்களின் நிலம் போடோக்களுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்படும். ஆனால் இதுவரை தற்போதுவரை இது செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆட்சியாளர்களின் போக்கால், போடோக்களுக்கு அரசியல் செல்வாக்கு இல்லாதிருந்தது. அசாமில் போடோக்களின் பகுதிகள் ஒதுக்கி வைக்கப்பட்டன. பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இதே போன்ற காரணங்களால் தான் அசாமில் இருந்து மேகாலயா உருவானது. 1980களின் இறுதியில் அனைத்து போடோ மாணவர் சங்கம் இதுகுறித்து கவலையடைந்தது. இச்சங்கமும், பழங்குடியினர் அரசியல் கட்சியும் இணைந்து போடோக்களுக்கான தனி மாநில கோரிக்கை வைத்தன. தங்கள் நாட்டில் தங்களுக்கும் சமமான உரிமை வேண்டுமெனக் கூறின. அனைத்து போடோ மாணவர் சங்கம்1987, மார்ச்சு 2 அன்று, அனைத்து போடோ மாணவர் சங்கம் சார்பாக போடோலாந்து கோரிக்கை அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. இச்சங்கம் போடோ மக்கள் செயற்குழு என்ற அரசியலமைப்பை உருவாக்கியது. இக்குழுவின் நோக்கம், “அசாமைப் பிரி எங்களுக்கு 50 - அவர்களுக்கு 50 ”. பின்னர், அசாம் அரசு, போடோ சங்கம் ஆகியன போடோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. [3] இவ்வொப்பந்தத்தால் குழப்பம் ஏற்பட்டு 70,000 மக்கள் இடம்பெயர்ந்தனர், போடோ மாணவர்களின் செயற்பாடுவிடுதலைக்குப் பின்னும், போடோக்கள் கல்வி கற்க போதிய வசதிகள் இருக்கவில்லை. கவுகாத்தி, சில்லாங், திபர்கார் பல்கலைக்கழகங்கள் போடோக்களின் பகுதிகளில் இருந்து தொலைவில் இருந்தன, ஆண்டாண்டு காலமாக, அசாமின் சிறந்த பல்கலைக்கழகங்களில் போடோ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், வேலைவாய்ப்பு இருக்கவில்லை. இதனால், போடோ மாணவர்கள் கொதித்தெழுந்தனர். இவர்களுக்கான பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் இடங்கள் இருந்தாலும், அவை நிரப்பப்படவில்லை. அசாம் அலுவலகங்களில் அசாமிய மொழி பேசும் மக்கள் மட்டும் நியமிக்கப்பட்டனர். போடோக்களுக்கு எளிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க விரும்பினர் போடோ மாணவர்கள். அனைத்து அசாம் மானவர்கள் ஒன்றியம் முறையற்ற குடியேற்றவாதிகளை எதிர்த்துப் போரிடுவது குறைந்த போது, போடோ மாணவர்கள் தனிமாநில கோரிக்கை எழுந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது. போடோ ஒப்பந்தத்தின் பலன் குறைவாக நடைமுறையில் இருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகமையில் வாழ்கின்றனர். சில சாலைகள் சீரமைக்கப்பட்டாலும், பல மேம்பாலங்கள், பிற போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கவில்லை. போடோ பிராந்தியக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. [4] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia