கோபால்பூர் துறைமுகம்
கோபால்பூர் துறைமுகம் (Gopalpur port) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் கோபால்பூரில் அமைந்துள்ள ஓர் ஆழ்கடல் துறைமுகமாகும். துறைமுகம் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கோபால்பூர் துறைமுகம் ஒடிசாவின் கடல் வர்த்தகத்தையும், தொழில் மற்றும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது.[1][2] ஒடிசா அரசு 2019 ஆம் ஆண்டு சூன் மாதத்திற்குள் கோபால்பூர் துறைமுகத்திற்கான முதல் கட்ட கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது.[3] துறைமுகம்கோபால்பூர் துறைமுகம் இயற்கையானதாகும். இதன் ஆழம் 18.5 மீட்டர். 100,000 நிலைச் சுமை டன்களுக்கும் அதிகமான சரக்குப் பொருள்களை துறைமுகம் கையாள முடியும். இந்த துறைமுகத்தில் 3 கப்பல் நிறுத்துமிடங்கள் உள்ளன. போக்குவரத்துகொல்கத்தா-சென்னை ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் கோபால்பூர் துறைமுகம் இணைக்கப்பட்டுள்ளது. 6 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 217 ஆல் இத்துறைமுகம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை எண் 5 ஆல் அடையாளப்படுத்தப்படும் கொல்கத்தா-சென்னை பாதைக்கும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 7 மற்றும் 17 ஆகிய சாலைகளுக்கும் அருகில் அமைந்துள்ளது. இதனால் கோபால்பூருடன் நல்ல போக்குவரத்து இணைப்புகள் கிடைக்கின்றன. கோபால்பூர் துறைமுகம் பரதீப் துறைமுகத்திலிருந்து 160 கி.மீ. தொலைவிலும் விசாகப்பட்டினத்திலிருந்து 260 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia