கோவிந்த மாணிக்கியா
கோவிந்த மாணிக்கியா (Govinda Manikya) (இ. 1676) 1660 முதல் 1661 வரையிலும், மீண்டும் 1667 முதல் 1676 வரையிலும் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்ச அரசனாவார். ஒரு திறமையான மற்றும் வெற்றிகரமான ஆட்சியாளராகக் கருதப்பட்டாலும், இவரது ஆட்சி தற்காலிகமாக அகற்றப்பட்டு, இவரது இளைய சகோதரனால் அபகரிக்கப்பட்டதன் மூலம் சிலகாலமே ஆட்சி புரிந்துள்ளார். வாழ்க்கைமன்னன் கல்யாண் மாணிக்கியாவின் மூத்த மகனான, கோவிந்தன் தனது தந்தை 1660 இல் இறந்த பிறகு அரியணை ஏறினார். இருப்பினும், பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் இவரது சகோதரர் சத்ர மாணிக்கியாவால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இவரது சகோதரார் முகலாயப் பேரரசின் உதவியுடன் அரியணையைக் கைப்பற்றி கோவிந்தை நாடுகடத்தினார். [4] கோவிந்தா சிட்டகாங் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றார். திரிபுராவின் வரலாற்றைக் கூறும் ராஜ்மாலாவின் கூற்றுப்படி, முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் இதேபோல் நாடு கடத்தப்பட்ட சகோதரரான ஷா ஷுஜாவுடன் இவர் நட்பை வளர்த்துக் கொண்டார். இருப்பினும், இரண்டு இளவரசர்களுக்கு இடையிலான சந்திப்பு சாத்தியமற்றது என்று காலவரிசை தரவு சுட்டிக்காட்டுகிறது. [5] கோவிந்தா பின்னர் அரக்கானில் தஞ்சமடைந்தார். அதன் ஆட்சியாளர் 1667 இல் திரிபுராவை மீட்க இவருக்கு உதவினார். இந்தக் கட்டத்தில் கோவிந்தா சத்ராவைக் கொன்றாரா அல்லது அவர் ஏற்கனவே இறந்துவிட்டாரா என்பது பற்றிய கணக்குகள் முரண்படுகின்றன. [6] ஆட்சிக்கு வந்த பின்னர் இவர் முகலாயர்களை சமாதானப்படுத்த, ஆண்டுதோறும் ஐந்து யானைகளை அனுப்ப ஒப்புக்கொண்டார். [6] கோவிந்தா பொதுவாகப் முகலாயப் பேரரசுடன் நல்லுறவைப் பேணி வந்தார், திரிபுரா ஒரு நடைமுறை சுதந்திர நிலையை அனுபவிக்க முடிந்தது. [7] இவர் ஒரு திறமையான நிர்வாகியாகவும், கலை மற்றும் கற்றலின் புரவலராகவும் பார்க்கப்படுகிறார். [6] இவரது ஆட்சியின் போது, ராஜ்மாலாவின் மூன்றாவது பகுதி முடிக்கப்பட்டது. நாரத புராணம் வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. கோவிந்தா 1676 இல் இறந்தார். பின்னர் இவரது மகன் ராம மாணிக்யா ஆட்சி செய்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இரவீந்திரநாத் தாகூரின், விஷர்ஜன் மற்றும் ராஜர்ஷி போன்ற நாடகங்களில் இவர் சித்தரிக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia