கௌசிகி சக்ரவர்த்தி
கௌசிகி சக்ரவர்த்தி ( Kaushiki Chakraborty) (பிறப்பு : 1980 அக்டோபர் 24) இவர் ஓர் இந்துஸ்தானிப் பாடகர் ஆவர். இவர் அஜய் சக்ரவர்த்தியின் மகள் ஆவார். சங்கீத் ஆராய்ச்சி அகாதமியில் வளர்ந்த இவர், பாட்டியாலா கரானாவின் நிபுணர்களில் ஒருவர்.[1][2] இவரது பாடும் திறமை காயல் மற்றும் தும்ரிகளை உள்ளடக்கியது. பிந்தையது 'குறைவான பாரம்பரியம்' அல்லது 'மெல்லிய பாரம்பரியம்' பாணிகள் ஆகும். ஆசியா / பசிபிக் பிரிவில் உலக இசைக்கான 2005 பிபிசி வானொலி 3 விருதுகள் போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுறார். மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச விழாக்கள் மற்றும் மாநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது கணவர் பார்த்தசாரதி தேசிகனுடன் இணைந்து அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் [3] ஆரம்ப கால வாழ்க்கைகௌசிகி 1980இல் இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் சந்தனா சக்ரவர்த்தி மற்றும் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகர் பண்டிட். அஜய் சக்ரவர்த்தி ஆகியோரின் மகளாவார். இரண்டு வயதிலிருந்தே இசையில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். 1980களின் பிற்பகுதியிலிருந்து தனது இசை நிகழ்ச்சிகளின் உலக சுற்றுப்பயணங்களில் தனது தந்தையுடன் மேற்கொண்டார். மேலும் தனது முதல் பாடலான தாரானாவை 7 வயதில் கொல்கத்தா படகுச் சங்கத்தில் பாடியுள்ளார்.[4] பத்தாவது வயதில், தனது தந்தையின் குருவாக இருந்த ஞானன் பிரகாஷ் கோஷின் அகாதமியில் இந்துஸ்தானிய இசையை கற்கத் தொடங்கினார். பின்னர் ஐ.டி.சி இசை ஆராய்ச்சி அகாதமியில் சேர்ந்து, 2004இல் பட்டம் பெற்றார்.[5][6] மேலும், இவரது தந்தையால் வளர்க்கப்பட்டார். அகாதமியின் இயக்குநர் விஜய் கிச்லு, காயலை பாடுவதில் நன்றாக வளர்த்தார். கொல்கத்தாவில் உள்ள சுருதிநந்தன் இசைப் பள்ளியில் தனது தந்தையின் கீழ் பயிற்சி பெற்றார். இவர் காயல் மற்றும் தும்ரி ஆகியவற்றை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர் மட்டுமல்ல, 2002 முதல் பாலமுரளி கிருட்டிணாவிடமிருந்து தென்னிந்திய செம்மொழி இசையையும் கற்றுக்கொண்டார். கொல்கத்தாவின் பாதா பவன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 2002ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணைந்த இளங்கலை மகளிர் கல்லூரியான ஜோகமய தேவி கல்லூரியில் தத்துவத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுப் பட்டம் பெற்றார். கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[7][8] விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்இவர், பல விருதுகளைப் பெற்ற்ள்ளார். இவர் 1995 ஆம் ஆண்டில் ஜாது பட்டா விருதைப் பெற்றார். 1998ஆம் ஆண்டில் புதுதில்லியில் 27 வது ஆண்டு ஐடிசி சங்கீத மாநாட்டில் தனது தொடக்கப் பாடலுக்குப் பிறகு பாராட்டப்பட்டார். மேலும் 2000ஆம் ஆண்டில் சிறந்த இளைஞர் விருதினைப் பெற்றார். தனக்கு 25 வயதாக இருந்தபோது இசையில் சிறந்து விளங்கியதற்காக பிபிசி விருதை (2005) பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்றபோது, "இந்திய குரல் இசையில் பிரகாசமான வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவராக" இவர் பாராட்டப்பட்டார்.[1][6][7] பிபிசி இவரது இசை பயணத்தை உள்ளடக்கிய ஒரு குறும்படத்தையும் உருவாக்கியது - இது இவரது இசையுடன் தொடர்புடைய நபர்களையும் இடங்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்துஸ்தானி குரல் இசைக்காக,[9] சங்கீத நாடக அகாதமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் புரஸ்கார் விருதைப் பெற்றார்.[5] தனிப்பட்ட வாழ்க்கைகௌசிகி 2004ஆம் ஆண்டில் இந்துஸ்தானி இசையில் தொழில்முறை பாடகரான பார்த்தசாரதி தேசிகன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரிஷித் என்ற மகன் உள்ளார்.[10] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia