க. சுந்தரம்
க. சுந்தரம் (K. Sundaram)(1 சூலை 1949-18 செப்டம்பர் 2024[1]) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1989[2] மற்றும் 1996 தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3] இந்ததொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருகென ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[4] சுந்தரம் கருணாநிதி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2005 சூன் மாதம் தமிழ்நாடு காவல்துறையினரால் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் இவரும், இவருடைய மனைவியும், இரண்டு மைத்துனர்களும் அடங்குவர்.[5] இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 2015ஆம் ஆண்டு இந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia