க. சேகர்
கனகராஜ் சேகர் (Kanakaraj Sekar) என்பார் இந்திய உயிர் தகவலியல் நிபுணர் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) கணக்கீட்டு மற்றும் தரவு அறிவியல் துறையில் பேராசிரியர் ஆவார். உயிரிதரவு அறிவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற சேகர், இந்திய அறிவியல் கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் மற்றும் பயோ கம்ப்யூட்டிங் ஆய்வகத்திற்குத் தலைமை பொறுப்பேற்றுள்ளார். 2004ஆம் ஆண்டில் உயிரியலில் இவரின் பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை இவருக்கு தொழில்சார் மேம்பாட்டுக்கான தேசிய உயிரியல் அறிவியலுக்கான விருதை வழங்கியது. சுயசரிதை![]() தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்த சேகர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் 1982ஆம் ஆண்டில் உயிரி இயற்பியல் மற்றும் படிகவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு, 1984ஆம் ஆண்டில் உயிர் இயற்பியலில் முனைவர் பட்ட படிப்பிற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[1] இவரது முனைவர் பட்ட பிந்தைய ஆராய்ச்சி பணியினை புரத படிகவியலில் 1992 வரை இந்திய அறிவியல் நிறுவனத்திலும், பின்னர் 1995 முதல் ஓகைய்யோ மாநில பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். 1998இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர், இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிதகவலியல் மையத்தில் கட்டமைப்பு உயிரியல் மற்றும் பயோ கம்ப்யூட்டிங் மூத்த விஞ்ஞான அதிகாரியாகச் சேர்ந்தார், அன்றிலிருந்து இன்றுவரை, இவர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த காலகட்டத்தில், இவர் ஒரு முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி (2004-10) மற்றும் கணக்கீட்டு மற்றும் தரவு அறிவியல் (சி.டி.எஸ்) துறையின் இணைப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் 2016 முதல் சி.டி.எஸ் துறை பேராசிரியராகவும்[2] கட்டமைப்பு உயிரியல் மற்றும் பயோ கம்ப்யூட்டிங் ஆய்வகத்திற்குத் தலைவராகவும் உள்ளார்.[3] உயிரிதகவலியலில் சேகரின் ஆராய்ச்சி புரத படிகவியல், படிக மற்றும் இணைய கம்ப்யூட்டிங் துறைகளையும், மதிப்பு கூட்டப்பட்ட அறிவுத் தளங்கள் மற்றும் வழிமுறைகளின் வளர்ச்சியையும் உள்ளடக்கியது.[4] [5] இவரது ஆய்வுகள் பல கட்டுரைகள் மூலம் உலகளாவி ஆய்விதழ்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன[6] [குறிப்பு 1] மற்றும் விஞ்ஞான கட்டுரைகளின் இணையக் களஞ்சியமான கூகிள் ஸ்காலரில் 211 பட்டியலிட்டுள்ளது.[7] [8] [9] சிறப்பு அல்லது முழுமையான உரைகளையும் பல்வேறு கருத்தரங்கங்களில் நிகழ்த்தியுள்ளார். முனைவர் மற்றும் முனைவர் பட்ட பிந்திய ஆய்வு மாணவர்களுக்கும் வழிகாட்டியாகவும் உள்ளார்.[10] இவர் கிரிஸ்டலோகிராஃபி இன்டர்நேஷனல் யூனியன் (ஐ.யூ.சி.ஆர்) உறுப்பினராகவும் உள்ளார். [11] சேகர் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (1984–88) மற்றும் இந்தியப் பல்கலைக்கழக மானிய குழு (1988–89) மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் மூத்த ஆராய்ச்சி (1989–92) ஆகியவற்றின் ஆராய்ச்சி நிதிகளைப் பெற்றுள்ளார்.[12] இந்திய அரசாங்கத்தின் உயிரிதொழில்நுட்பத் துறை இவருக்கு 2004ஆம் ஆண்டில் மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான தொழில் மேம்பாட்டுக்கான தேசிய உயிரியல் அறிவியல் விருதை வழங்கியது.[13] தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல்
மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்மேலும் படிக்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia