சகாரா கீழமை ஆபிரிக்கா![]() வெளிர் பச்சை: இருப்பினும், ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளியியல் துறை சூடானை வடக்கு ஆபிரிக்காவின் அங்கமாக வகைப்படுத்துகிறது.[1] ![]() ![]() சகாரா-கீழமை ஆபிரிக்கா (Sub-Saharan Africa) , புவியியலின்படி, சகாராவிற்கு தெற்கிலமைந்த ஆபிரிக்க கண்டப் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் அவையின் வரையறையின்படி, சகாராவிற்கு தெற்கே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்துள்ள அனைத்து ஆபிரிக்க நாடுகளுமாகும்.[2] இதற்கு எதிராக வடக்கு ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளும் அரபு உலகின் உள்ளங்கமான அரபு நாடுகள் கூட்டமைப்பு உறுப்பினர்களாகும். சோமாலியா, சீபூத்தீ, கொமொரோசு, மூரித்தானியா புவியியலின்படி சகாரா-கீழமை ஆபிரிக்காவில் இருப்பினும் அவை அரபு நாடுகள் மற்றும் அரபு உலகின் அங்கங்களாகும்.[3] சகாராவிற்கும் வெப்ப மண்டல சவான்னாக்களுக்கும் இடையேயான இடைநிலை மண்டலமாக சகேல் உள்ளது. வெப்பமண்டல ஆபிரிக்காவின் சவான்னாக் காடுகள் மேலும் தள்ளி உள்ளன. 3500 பொதுயுகம் முன்பிலிருந்தே ,[4][5] சகாரா பகுதிகளும் சகாரா கீழமை பகுதிகளும் பிரிந்திருந்தன; கடும் வானிலையுடனான குறைந்த மக்கள் வசித்த சகாரா ஓர் இயற்கையான தடுப்பாக இருந்தது. இந்த தடுப்பினூடே சூடானிய நைல் மட்டுமே பாய்ந்தது. அதுவும் கூட நைலின் ஆற்றுப்புரைகளால் தடுக்கப்பட்டது. சகாரா நீரேற்று கோட்பாடு எவ்வாறு தாவரவினங்களும் விலங்கினங்களும் ( மனிதர்கள் உட்பட) ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கிற்கும் அதன் வெளியிலும் குடிபெயர்ந்தனர் என்பதை விளக்குகின்றது. ஆபிரிக்க மழைசார் காலங்கள் ஈரமான சகாராவுடன் தொடர்புடையன. அக்காலத்தில் பெரிய ஏரிகளும் மிகுந்த ஆறுகளும் இருந்துள்ளன.[6] சகாரா கீழமை ஆபிரிக்கா என்ற சொற்பயன்பாடு மிகவும் விமரிசிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு பகுதிகளை புவியியல்படி மட்டுமே குறிப்பிடுகின்றது. தவிரவும் கீழமை என்பது கீழ்நிலையான என்ற தோற்றத்தை வெளிப்படுத்துன்றது. இது ஐரோப்பிய நோக்கில் வரையறுக்கப்பட்டுள்ளதாக விமரிசிக்கப்பட்டுள்ளது.[7][8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia