சக்ரதாரி
சக்ரதாரி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, புஷ்பவல்லி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். டி. பார்த்தசாரதி இசையமைக்க பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியன் ஆகியோர் பாடல்களை இயற்றினர்.[1] குயவராகப் பிறந்து வைணவ பக்தராகி, பாண்டுரங்கனின் பாதநிழலை அடைந்த பக்த கோரா கும்பரின் கதையைத் திரைப்படமாக ஜெமினி நிறுவனத்தினர் தயாரித்திருந்தனர்.[2] கதைமகாராட்டிர மாநிலம் பண்டரிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோரா என்னும் குயவர் வாழ்கிறார். அவர் பாண்டுரங்கனின் தீவிர பக்தர். பொருள் ஈட்டுவதில் அவர்வமற்று அவர் ஆர்வமற்று இருப்பது அவரது மனைவி துளசியை கவலையடையச் செய்கிறது. வெங்கட் கோராவின் அண்ணன் ஒரு வசதியான மனிதராக உள்ளார். அவரது மனைவி சோனாவுக்கு கோராவையும் அவரது குடும்பத்தினரையும் வெறுக்கிறாள். ஒரு நாள் கோரா பானை செய்வதற்கு தேவையான களிமண்ணைக் கால்களால் மிதித்து கலக்கிக் கொண்டிருந்தபோது, அவருடைய குழந்தை ஹரி விளையாடிக் கொண்டே அங்கே தவழ்ந்து வருகிறான். பக்தி பரவசத்தில் இருந்த கோரா தன் குழந்தை சேற்றின் மீது வந்ததைக் கவனிக்காமல் சேற்றில் மிதித்து குழந்தையைக் கொன்றுவிடுகிறார். பாண்டுரங்கன் மீதான பக்திப் பரவசத்தில் கோரா தன் குழந்தையை மிதித்துக் கொன்றதை துளசி அறிகிறாள். தன் குழந்தை இறந்ததற்கு பாண்டுரங்கனே காரணம் என்று அந்தக் கோபத்தில் உலக்கை கொண்டு பாண்டுரங்கனின் சிலையை உடைக்க முயல்கிறாள். அதைக்கண்டு சீற்றமடைந்த கோரா விட்டலனை அழித்தால் உன்னைக் கொல்வேன் என்று அவளை கோடரியால் வெட்ட முயற்சிக்கிறார். அதைக்கண்டு பயந்த துளசி இனி வாழ்நாள் முழுவதும் என்னைத் தொடக் கூடது என்று சொல்கிறாள். அந்த சபதத்தை கோரா ஏற்கிறார். தன் கணவர் தன்னைத் தொடுவதில்லை என்பதால், துளசி தன் தங்கை சாந்தாவை தன் கணவர் கோராவுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். அவள் மூலமாக ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அவரின் தந்தை துளசியைப் போல சாந்தாவையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கோராவிடம் வாக்கு வாங்குகிறார். துளசியை தொடமாட்டேன் என்று கோரா சபதம் செய்திருப்பதால் அவர் சாந்தாவையும் தொட மறுக்கிறார். சகோதரிகள் ஒரு இரவில் கோராவை மயக்குகவதற்காக அவரின் கையை இழுக்கின்றனர். இதனால் கோரா அதிர்ச்சியடைந்து, சபதத்தை மீறியதற்காக அவரது கைகளை வெட்டிக்கொள்கிறார். பானை வனைய வழியில்லாததால் வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. அதனால் பாண்டுரங்க பகவானும் அவரது துணைவி ருக்மணியும் இணையர் உருவில் வந்து கோராவின் வீட்டில் தங்கி உதவுகிறனர். அவர்களின் தெய்வீக சக்திகளால், குடும்பத்தில் மகிழ்ச்சி மீட்டெடுக்கப்படுகிறது. கோரா இழந்த தன் கைகளைத் திரும்பப் பெறுகிறார், குழந்தை ஹரி மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான். முழு குடும்பமும் பாண்டுரங்க பகவானின் பக்தர்களாக மாறுகிறது.[3] நடிப்பு
தயாரிப்புஇந்தக் கதை மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும், தமிழில் இரண்டு முறையும் படமாக்கப்பட்டுள்ளது.[3] பாடல்கள்பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியன் ஆகியோரின் பாடல்களுக்கு வி. நாகையா, டி. வி. ரத்தினம், எம். கல்பகம் ஆகியோர் பாடியுள்ளனர். எம். டி. பார்த்தசாரதி இசையமைத்திருந்தார்.[2] எம். டி. பார்த்தசாரதி
வரவேற்புஇப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2008 இல், "உள்ளத்தை நிரப்பும் இசை, சிறந்த படப்பிடிப்பு, நாகய்யாவின் நடிப்புக்காக இப்படம் நினைவுகூரப்பட்டது" என்றார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia