சக் நோரிஸ்
கார்லோஸ் ரே சக் நோரிஸ் (பிறப்பு: மார்ச் 10,1940) ஓர் அமெரிக்கத் தற்காப்புக் கலைஞரும் நடிகரும் ஆவார். அவர் டாங் சூ டோ, பிரேசிலிய ஜியு ஜிட்சு மற்றும் ஜூடோ ஆகிய தற்காப்புக் கலைகளில் கருப்புப்பட்டை வென்றவர் ஆவார்.[1] அமெரிக்க வான்படையில் பணியாற்றிய பிறகு, நோரிஸ் தற்காப்புக் கலைகளில் பல முதன்மை வெற்றிகளைப் பெற்றார். பின்னர் தனது சொந்த தற்காப்புக்கலைக் கோட்பாடான சுன் குக் டோவை நிறுவினார். சிறிது காலத்திற்குப் பிறகு, ஹாலிவுட்டில், பல பிரபலங்களுக்கு தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளித்தார். முதலில் தி ரெக்கிங் க்ரூ (1968) என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நோரிசு தோன்றினார். நண்பரும் சக தற்காப்புக் கலைஞருமான புரூஸ் லீ, தி வே ஆப் தி டிராகன் (1972) என்ற படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடிக்க நோரிசை அழைத்தார். நோரிசு தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தபோது, நண்பரும் மாணவருமான ஸ்டீவ் மெக்குயின் நடிப்பைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார். பிரேக்கர்! பிரேக்கர்! (1977) என்ற அதிரடித் திரைப்படத்தில் நோரிஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.(1977) இது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அவரது இரண்டாவது படமான குட் கைஸ் வேர் பிளாக் (1978) என்ற படமும் ஒரு வெற்றிப் படமாகஅமைந்தது. விரைவில் அவர் ஒரு பிரபலமான அதிரடி திரைப்பட நட்சத்திரமாக ஆனார். நோரிஸ், ஏ போர்ஸ் ஆப் ஒன் (1979), தி ஆக்டாகன் (1980) மற்றும் ஏன் ஐ பார் எ ஐ (1981) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இது நோரிஸை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. அவர் கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்த சைலண்ட் ரேஜ் (1982), எம். ஜி. எம் நிறுவனம் தயாரித்த போர்சுடு வெஞ்சன்ஸ் (1982) மற்றும் ஓரியன் நிறுவனத்துடன் லோன் வுல்ப் மெக்குவாட் (1983) போன்ற படங்களை உருவாக்கினார். இது கேனான் பிலிம்ஸ் நிறுவனத்துடன் நோரிஸை பல திரைப்பட ஒப்பந்தங்களில் கையெழுத்திட வழிவகுத்தது, இது மிஸ்ஸிங் இன் ஆக்சனில் தொடங்கி (1984) மிகவும் வெற்றிகரமாக ஒரு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இதன் பின்னர் நோரிசு அதிரடி படங்களில் கேனன் பிலிம்சுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார், 1980 களில் அந்நிறுவனத்தின் முன்னணி நட்சத்திரமாக ஆனார். கேனனுடன் இணைந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் இன்வேசன் யு. எஸ். ஏ (1985), தி டெல்டா போர்சு (1986), பயர்வால்கர் (1986) ஆகியவையும் அடங்கும். கேனான் நிறுவனப் படங்களைத் தவிர, நோரிசு கோட் ஆப் சைலன்ஸ் (1985) என்ற திரைப்படத்தையும் தயாரித்தார். இது அவரது சிறந்த படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்டது. 1990 களில்,கொலம்பிய ஒலிபரப்பு நிறுவனத்தின் நீண்ட காலத் தொலைக்காட்சி தொடரான வாக்கர்; டெக்சாஸ் ரேஞ்சர் என்ற தொடரில் முதன்மை வேடத்தில் நடித்தார். 1993 முதல் 2001 வரை இத்தொடர் வெளியானது. 2006 வரை, நோரிசு அதிரடி திரைப்படங்களில் தொடர்ந்து முன்னணி வேடங்களில் நடித்தார். தி எக்ஸ்பெண்டபிள்சு 2 (2012). என்ற ஒரு பெரிய திரைப்பட வெளியீட்டில் அவர் இறுதியாகத் தோன்றினார். அவரது திரைப்படம், தொலைக்காட்சி, ஆகியவை தவிர வாழ்க்கை முழுவதும், நோரிசு தனது வழக்கமான முயற்சிகளிலிருந்து மாறுபட்டு பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கினார். தற்காப்புக் கலைகள், உடற்பயிற்சி, தத்துவம், அரசியல், கிறிஸ்துவம், மேற்கத்திய புனைகதை மற்றும் வாழ்க்கை வரலாறுகள் குறித்து நூல்களை எழுதிய அவர் நியூயார்க் டைம்சு இதழின் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர்களில் ஒருவராவார். நோரிசு பல தயாரிப்புகளை ஆதரிக்கும் பல விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். குறிப்பாக டோட்டல் ஜிம் எனப்படும் வீட்டு உடற்பயிற்சி நிறுவனத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தார். 2005 ஆம் ஆண்டில், சக் நோரிஸ் உண்மைகள் என்ற நகைச்சுவையான, பெரும்பாலும் கற்பனையான வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மிகையாகக் காட்சிப்படுத்தும் ஆவணப்படம் மூலம் நோரிசு இணையத்தில் புதிய புகழைக் கண்டார். இந்த நிகழ்வின் விளைவாக ஆறு நூல்கள் எழுதப்பட்டன. இளமை வாழ்க்கை.நோரிசு மார்ச் 10,1940 அன்று ஓக்லகோமாவின் ரியானில் பிறந்தார். இவரது தாயார் வில்மா, தந்தை ரே டீ நோரிஸ் ஆவார். நோரிசின் தந்தை இரண்டாம் உலகப் போரில் இராணுவ சிப்பாயாகவும், இயந்திர வல்லுநராகவும், பேருந்து ஓட்டுநராகவும், பார வண்டி ஓட்டுநராகவும் இருந்துள்ளார்[2][3] அவரது தாயார் அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்; அவரது தந்தை செரோகீ வம்சாவளி சேர்ந்தவர்.[3] நோரிசு தனது தந்தையின் மத ஊழியரான கார்லோசு பெர்ரி பெயரால் அழைக்கப்பட்டார்.[3] மூன்று சகோதரர்களில் நோரிசு மூத்தவர், இளைய இருவர் வீலண்ட் மற்றும் ஆரோன் ஆகியோராவர். வீலண்ட் நோரிஸ் தனது 26 ஆவது வயதில் 1970 ஜூன் மாதம் வியட்நாம் போரில் தீயணைப்பு தளமான ரிப்கார்ட்டின் பாதுகாப்பில் ரோந்துப் பணியில் இருந்தபோது கொல்லப்பட்டார்.[4] நோரிஸுக்கு 16 வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர்.[5] பின்னர் அவர் கன்சாஸின் பிரெய்ரி கிராமத்திற்கும் பின்னர் கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகருக்கும் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் குடிபெயர்ந்தார்.[6] நோரிசு தனது குழந்தைப் பருவத்தை மனச்சோர்வு நிறைந்ததாக விவரித்துள்ளார். அவர் தடகளத்தில் ஈடுபடாதவர்; கூச்ச சுபாவம் நிறைந்தவர்; மேலும் கல்வியில் ஒரு சராசரி மாணவராவார்.[7] அவரது தந்தை ரே, இடைவிடாமல் ஒரு தானுந்து வல்லுநராகப் பணிபுரிந்தார், அவர் பல மாதங்கள் நீடித்த குடிப்பழக்கம் கொண்டவர். தனது தந்தையின் நடத்தை மற்றும் குடும்பத்தின் நிதி அவலநிலையால் வெட்கப்பட்ட நோரிஸ், தனது குழந்தை பருவம் முழுவதும் நீடித்த ஒரு பலவீனப்படுத்தும் அகமுகச் சிந்தனையை வளர்த்துக்கொண்டார்.[8] தொழில் வாழ்க்கை1958 to 1969: ஐக்கிய அமெரிக்க வான்படை மற்றும் தற்காப்புக் கலைகளின் முன்னேற்றம்நோரிசு 1958 இல் அமெரிக்க விமானப்படையில் விமானக் காவலராகச் சேர்ந்தார். அங்கிருந்து தென் கொரியாவின் ஓசான் விமானத் தளத்திற்கு அனுப்பப்பட்டார். அங்குதான் நோரிஸ் "சக்" என்ற புனைப்பெயரைப் பெற்று, டாங் சூ டோ (டாங்ஸுடோ) என்ற கொரியாவின் தற்காப்பு பயிற்சியைக் கற்றுத் தேர்ந்தார். இது அந்த கலையில் பல கருப்புப் பட்டைகளைப் பெற வழிவகுத்தது. மேலும் சுன் குக் டோ என்ற தனது தனிப்பட்ட பாணியை நிறுவவும் உதவியது.[9] அவர் அமெரிக்காவுக்குத் திரும்பியபோது, கலிபோர்னியாவில் உள்ள மார்ச் வான்படை தளத்தில் விமானக் காவலராகத் தொடர்ந்து பணியாற்றினார்.[10][11] நோரிஸ் ஆகஸ்ட் 1962 இல் வான்படையில் மூன்றாவது உயர்பதவியான முதல்வகுப்பு வான்படையினர் (A1C) என்ற பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தனது இராணுவ சேவையைத் தொடர்ந்து, கலிபோர்னியாவின் டொரன்சு நகரில் ஒரு காவல் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பித்தார். காத்திருப்பு பட்டியலில் இருந்தபோது, நோரிஸ் ஒரு தற்காப்புக் கலைக்கூடத்தைத் திறந்தார்.[12] இதன் பின்னர் நோரிசு தற்காப்புக் கலைப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். முதலிரண்டு போட்டிகளில் அவர் தோல்வியுற்றார். சர்வதேச தற்காப்புக்கலை வெற்றியாளர் போட்டியில் டோனி டுல்லனர்சிடம் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தார். 1967 இல், நோரிசு போதுமான அளவு முன்னேறி, விக் மூர் போன்றவர்களை எதிர்த்து வெற்றிகளைப் பெற்றார். 1967, ஜூன் 3 ஆம் தேதி, 1967 தற்காப்புக்கலைப் போட்டியில் ஸ்கிப்பர் முலின்சுடனான இறுதிப் போட்டி வரை ஏழு எதிராளிகளைத் தோற்கடித்தார்.[13] ஜூன் 24 ஆம் தேதி, மாடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த எஸ். ஹென்றி ச்சோவின் அனைத்து-அமெரிக்கக் கராத்தே வெற்றியாளருக்கான போட்டியில் நோரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், ஜோ லூயிசைத் தோற்கடித்து ஜூலியோ லாசல்லேயிடமிருந்து பட்டத்தை வென்றார்.[14][15][16] அதே நேரத்தில் நார்த்ரோப் கார்ப்பரேஷன் என்ற விமான நிறுவனத்திலும் நோரிசு பணிபுரிந்தார். மேலும் சங்கிலித் தொடர்களாக பல தற்காப்புக்கலைப் பள்ளிகளைத் திறந்தார். ஸ்டீவ் மெக்குயின், சாட் மெக்குயின், பாப் பார்கர், பிரிசிகில்லா பிரெசுலி, டோனி ஓசுமன்ட், மேரி ஓசுமன்ட் ஆகிய பிரபலங்கள் இவரது பள்ளியின் வாடிக்கையாளர்களில் அடங்குவர்.[17] 1968 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நோரிஸ் லூயிசு டெல்கடோவிடம் ஒரு அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இது அவரது தொழில்முறைப் போட்டியின் பத்தாவது மற்றும் இறுதித் தோல்வியாகும். இதன் பின்னர் மீன்டும் நவம்பர் 24,1968 அன்று, அவர் டெல்கடோவிடம் தோல்வியடைந்ததற்கு பழிவாங்கும்படியாக, தொழில்முறை மத்திய எடைப்பிரிவினருக்கான தற்காப்புக்கலை வெற்றியாளர் பட்டத்தை வென்றார். பின்னர் அவர் தொடர்ந்து அப்பட்டத்தை ஆறு ஆண்டுகள் தக்கவைத்திருந்தார்.[18] ஏப்ரல் 1 அன்று, நோரிஸ் தனது அனைத்து அமெரிக்கத் தற்காப்புக்கலை வெற்றியாளர் பட்டம் வென்றார்.[19] அதே ஆண்டு, நோரிஸ் இரண்டாவது முறையாக அனைத்து அமெரிக்க தற்காப்புக்கலை வெற்றியாளர் பட்டத்தை மீண்டும் வென்றார். நோரிஸ் பங்கேற்று தோல்வியடையாத கடைசிப் போட்டியாக இது அமைந்தது. இதன்பின் அவர் இப்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். [20][21] போட்டியின் போது, அப்போது தி கிரீன் ஹார்னெட் என்ற தொலைக்காட்சித் தொடரில் புகழ்பெற்றிருந்த புரூஸ் லீயைச் சந்தித்தார். அவர்கள் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டனர். அதே போல் பயிற்சி மற்றும் பணி உறவையும் வளர்த்துக் கொண்டார்கள். 1969 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் முதல் வார இறுதியில், நோரிஸ் சர்வதேச தற்கப்புக்கலை உலக வெற்றியாளராகத் தனது பட்டத்தைப் பாதுகாத்துக் கொண்டார். இந்த போட்டியில் அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து வெற்றியாளர் பட்டம் வென்றவர்களும், வெளிநாட்டிலிருந்து ஆறு பேரும் முதற்கட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.[22] இப்போட்டியில் நோரிசு தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார் மேலும் அந்த ஆண்டின் அதிக போட்டியில் பெற்ற வெற்றிகளுக்காக தற்காப்புக்கலையின் மூன்று கிரீடங்களை வென்றார், மேலும் பிளாக் பெல்ட் பத்திரிகையின் அந்த ஆன்டின் சண்டையாளர் விருதையும் பெற்றார்.[23] இந்த நேரத்தில், நோரிஸ் மாட் ஹெல்ம் என்ற வேடத்தில் உளவு நகைச்சுவைத் திரைப்படமான தி ரெக்கிங் க்ரூவில் அறிமுகமானார். 1970 முதல் 1978 வரை: தொடக்ககால பாத்திரங்கள் மற்றும் திருப்புமுனை![]() 1972 ஆம் ஆண்டில், பரவலாக பாராட்டப்பட்ட தற்காப்புக் கலை திரைப்படமான ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் என்ற படத்தின் அமெரிக்க விநியோகமான வே ஆஃப் தி டிராகன் படத்தில் புரூஸ் லீக்கு எதிரியாக நோரிசு நடித்தார். இந்த படம் ஹாங்காங் பாக்ஸ் ஆபிஸில் அதன் $5.3 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது புரூஸ்லீயின் சொந்த படங்களான தி பிக் பாஸ் மற்றும் பிஸ்ட் ஆப் ப்யூரி ஆகியவற்றின் முந்தைய சாதனைகளை இப்படம் முறியடித்து, 1972 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. தி வே ஆப் தி டிராகன் உலகம் முழுவதும் 130 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.[24] இந்த படம் நோரிசுக்கு ஒரு நட்சத்திர நடிகர் என்ற புகழைத் தந்த பெருமைக்குரியது. பின்னர் 1973 ஆம் ஆண்டில், ஜொனாதன் கப்லானின் தி ஸ்டூடன்ட் டீச்சர்ஸ் படத்தில் நோரிசு ஒரு பாத்திரத்தில் நடித்தார்.[25] 1974 ஆம் ஆண்டில், நோரிசின் தற்காப்புக் கலை மாணவரும், நண்பருமான நடிகர் ஸ்டீவ் மெக்குயின், அவரது திறனைக் கண்டு, எம். ஜி. எம். நிறுவனத்தில் நடிப்பு வகுப்புகளுக்குச் செல்ல அவரை ஊக்குவித்தார். அதே ஆண்டு, லோ வெய் என்பவரின் யெல்லோ பேஸ்டு டைகர் படத்தில் முக்கிய எதிரியாக துணை வேடத்தில் நடித்தார்.[26] சான் பிரான்சிஸ்கோ நகரில், காவல் துறை உட்பட குற்றவியல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் மன்னனாக, ஊழலுக்கு எதிராக நிற்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரியால் சவால் விடப்படும் பாத்திரத்தில் நோரிசு நடித்தார்.[27] இந்த படம் 1981 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஸ்லாடர் இன் சான் பிரான்சிஸ்கோ என்ற பெயரில் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.[28] இது நோரிஸ் கதாநாயகனாக நடிப்பதாக அறிவித்த ஒரு பழைய, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பது பின்னர் அறியப்பட்டது. இந்த படம் மற்ற அதிரடி மற்றும் சாதாரண வகைப் படங்களுடன் இரட்டைக்காட்சிகளாக திரையிடப்பட்டது. இது நோரிஸின் புகழைப் பயன்படுத்திக் கொண்ட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தற்காப்புக் கலை அதிரடிப்படம் என்று விவரிக்கப்பட்டது.[29][30][31] 1975 ஆம் ஆண்டில், நோரிசு, வின்னிங் டோர்னமென்ட் கராத்தே என்ற தனது முதல் நூலை எழுதினார். இது தற்காப்புக் கலையின் அனைத்து தரவரிசைப் போட்டிக்குமான பயிற்சி நூலாகும்.[32] நோரிசின் முதல் திரைப்படம் 1977 இல் வெளிவந்த பிரேக்கர்! பிரேக்கர்! என்பதாகும். [33] பல தற்காப்புக் கலைப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை நிராகரித்த பிறகு அவர் இந்தப் படத்தினைத் தேர்ந்தெடுத்தார். சரியான கதையமைப்பும், உணர்வு ரீதியாக சரியான நடிப்புக்கேற்ற இடமும் கொண்ட படங்களை தான் செய்ய விரும்புவதாக நோரிஸ் கூறினார். குறைந்த செலவில் படமான இது மிகவும் வெற்றிகரமாக ஓடியது. [34] 1978 ஆம் ஆண்டில், நோரிசு குட் கைஸ் வேர் பிளாக் என்ற படத்தில் நடித்தார்.[35] இது தனது முதல் குறிப்பிடத்தக்க முதன்மைப்பாத்திரம் என்று அவர் கருதினார். இப்படத்தை எந்த நிறுவனமும் வெளியிட விரும்பவில்லை. எனவே நோரிசும் அவரது தயாரிப்பாளர்களும் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, அதன்மூலம் வந்த வருவாயைப் எடுத்துக் கொண்டனர்.[36] இந்த படம் $1 மில்லியன் செலவில் படமாக்கப்பட்டது. ஆனால் இது $18 மில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டியது.[37] அமெரிக்காவில் 1970 வரை பல ஆண்டுகளாக ஹாங்காங் அதிரடி சினிமாக்களாக குங் ஃபூ திரைப்படங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. குறிப்பாக புரூஸ் லீ இறப்பிற்கு பின்னும் தொடர்ந்து புரூஸ்லீயைப் போன்ற தோற்றமுள்ளவர்கள் நடித்த தற்காப்புக்கலை அதிரடித் திரைப்படங்களும் வெளியிடப்பட்டன. இச்சமயத்தில் தான் குட் கைஸ் வேர் பிளாக் என்ற திரைப்படம் நோரிஸை முதல் வெற்றிகரமான உள்நாட்டு அமெரிக்க தற்காப்புக் கலை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது. இவர் முன்பு புருஸ்லீயின் வே ஆஃப் தி டிராகனில் வில்லனாக நன்கு அறியப்பட்டவர். குட் கைஸ் வேர் பிளாக் முந்தைய தற்காப்புக் கலைப் படங்களிலிருந்து அதன் தனித்துவமான அமெரிக்க அமைப்பு, கதாபாத்திரங்கள், கருப்பொருள்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றால் தன்னை வேறுபடுத்திக் காட்டியது. இந்த உத்தியை நோரிஸ் தனது பிற்காலப் படங்களுக்கு தொடர்ந்து பின்பற்றினார்.[38] 1979 to 1983: அதிரடி திரைப்பட நட்சத்திரம்1979 ஆம் ஆண்டில், நோரிஸ் ஏ போர்சு ஆப் ஒன் என்ற படத்தில் மாட் லோகன் என்ற உலக தற்காப்புக்கலை வெற்றியாளராக நடித்தார், அவர் காவல்துறையின் விசாரணைக்கு உதவுகிறார்.[39] குட் கைஸ் வேர் பிளாக் படத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த படம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தையும் எந்த நிறுவனமும் வெளியிடவிரும்பவில்லை.[36] ஆனால் இது பாக்ஸ் ஆபிஸில் 20 மில்லியன் டாலர்களை சம்பாதித்து முந்தைய படத்தை விஞ்சியது.[36] 1980 ஆம் ஆண்டில், அவர் தி ஆக்டாகனை வெளியிட்டார். இதில் அவரது கதாபாத்திரம் நிஞ்ஜா பாணியில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளின் குழுவை தடுத்து நிறுத்துவதாகும்.[40] அவரது முந்தைய படங்களைப் போலல்லாமல், இந்த முறை நிறுவனங்கள் இவரது படத்தை வெளியிட ஆர்வமாக இருந்தன. அமெரிக்கத் திரைப்பட வெளியீட்டு நிறுவனம் இதை விநியோகித்தது. மேலும் இது கிட்டத்தட்ட $19 மில்லியன் வருவாயை ஈட்டித் தந்தது.[36] 1981 ஆம் ஆண்டில், ஸ்டீவ் கார்வரின் ஏன் ஐ பார் எ ஐ படத்தில் நோரிசு நடித்தார்.[41] 1982 ஆம் ஆண்டில், அதிரடி திகில் திரைப்படமான சைலண்ட் ரேஜ் படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார்.[42] கொலம்பியா பிக்சர்ஸ் என்ற பெரிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அவரது முதல் படம் இதுவாகும்.[43] இதன் பிறகு எம். ஜி. எம் நிறுவனம் அவருக்கு மூன்று திரைப்பட ஒப்பந்தத்தை வழங்கியது. மேலும் அதே ஆண்டு அவர்கள் போர்சுடு வெஞ்சன்ஸ் (1982) என்ற இவர் நடித்த திரைப்படத்தையும் வெளியிட்டனர். நிறுவனத்தின் இயக்கும் முறைகளில் நோரிஸ் மகிழ்ச்சியடையவில்லை. எனவே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.[36] 1983 ஆம் ஆண்டில், ஓரியன் பிக்சர்ஸ் மற்றும் கார்வர் இயக்கத்தில் லோன் வுல்ப் மெக்குவாட் என்ற படத்தை நோரிசு தயாரித்தார்.[44] இதில் அவர் ஒரு பொறுப்பற்ற ஆனால் தைரியமான டெக்சாஸ் நகர ரோந்துக்காவலராக நடித்தார். அவர் டேவிட் காரடின் என்ற ஆயுத வியாபாரி ஒருவரை தோற்கடிக்கிறார். இந்த படம் உலகளவில் வெற்றி பெற்றது. மேலும் திரைப்பட விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.[45][46][47] அதே ஆண்டில் தனது தற்காப்புக்கலைப் பயிற்சி மற்றும் உடற் தகுதிக் கழகத்தின் டூகன் அப்! என்ற பயிற்சி முறையையும் வெளியிட்டார்.[48] மேலும் 1983 ஆம் ஆண்டில், சோனாக்ஸ் நிறுவனம் கொமடோர் 64, விஐசி-20, அடாரி 2600 மற்றும் கோலெகோவிஷன் ஆகியவற்றிற்காக சக் நோரிஸ் சூப்பர்கிக்ஸ் என்ற விளையாட்டுகளைத் தயாரித்தது. ஒரு வரைபடத்தின் வழியாக நகர்வது மற்றும் எதிரிகளுக்கு எதிராக போராடுவது என இந்த விளையாட்டு இரண்டு வகையான விளையாட்டுகளை ஒருங்கிணைக்கிறது. சக் நோரிஸ் என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமம் காலாவதியானபோது இது குங் ஃபூ சூப்பர்கிக்ஸ் என்ற பெயரில் விற்கப்பட்டது. 1984 to 1988: முதன்மையான வெற்றி1984 ஆம் ஆண்டில், நோரிஸ் ஜோசப் ஜிட்டோ என்பவரின் மிஸ்ஸிங் இன் ஆக்சனில் நடித்தார்.[49] இது போர்க்கைதிகளின் மீட்பு பற்றிய கற்பனைத்தொடரின் முதல் படமாகும். இதில் அவர் கர்னல் ஜேம்ஸ் பிராட் டாக்காக நடித்தார்.[50] இவை கேனார் நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்டன. நோரிசு இந்தப் படங்களை தனது இறந்துபோன இளைய சகோதரர் வீலண்ட் நோரிசுக்கு அர்ப்பணித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் 1980 களில் கேனன் பிலிம்சு நிறுவனத்தின் மிக முக்கியமான நட்சத்திரமாக நோரிஸ் ஆனார். அதே ஆண்டு, அக்டோபர் 2 அன்று, ஆண்ட்ரூ டேவிஸின் கோட் ஆப் சைலன்ஸ் படத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது.[51] அப்பொழுதே இப்படத்தின் சிக்கலான தன்மை மற்றும் வியத்தகு ஆழம் காரணமாக இந்த படம் நோரிஸுக்கு ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக இருக்கும் எனக் கருதப்பட்டது.[52] ஒரு முதலாளியின் மகளைப் பாதுகாக்கும் வேளையில், ஒரு அப்பாவி பார்வையாளரைக் கொன்ற ஒரு ஊழல் காவலரை காப்பாற்ற மறுத்ததற்காக ஒதுக்கி வைக்கப்படும் ஒருகாவலரைப் பற்றிய படம் இது.[51] டேவிஸ் நோரிஸ் "வேலை செய்ய எளிதானவர் மற்றும் மிகவும் ஒத்துழைக்கக்கூடியவர் என " என்று விவரிக்கப்பட்டார். ஓரியன் பிக்சர்ஸால் மே 3,1985 அன்று இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இது பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர்கள் அதன் மென்மையான இயக்கம், வலுவான நடிப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய செயலைப் பாராட்டினர்.[53][51] இது நோரிஸின் வாழ்க்கையில் ஒரு தனித்துவமான ஒன்றாக கருதப்பட்டது. பலர் இதை இன்றுவரை அவரது மிகச் சிறந்த படமாகக் கருதுகிறார்கள்.[54][55][56][57][58] இப்படத்தை விரும்பிய தி நியூயார்க் டைம்ஸின் வின்சென்ட் கேன்பி, நோரிஸின் நடிப்பைப் பற்றி கூறுகையில், "இது நோரிசுக்கு சாத்தியமான திருப்புமுனை தரக்கூடிய படம் " என்றார். அவர் படத்தின் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட சண்டை காட்சிகளில் பிரகாசிக்கும் ஒரு அமைதியான திறனை வெளிப்படுத்துகிறார். மேலும் அவரது கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பு புதியதாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது. அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து இது மாறுபட்டதாகும்.[59] இந்த படம் முதல் வார இறுதியில் 5 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடத்தில் அறிமுகமானது. இறுதியில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 20.3 மில்லியன் டாலர்களை ஈட்டியது.[60] மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் 2: தி பிகினிங் என்ற படம் மார்ச் 1,1985 அன்று திரையிடப்பட்டது.[61] இது பிராட் டாக் என்ற முகாமில் வட வியட்நாமிய போர்க்கைதிகள் நடத்தப்படுவதைப் பற்றியது.[62] [63] பின்னர் இன்வேசன் யு. எஸ். ஏ செப்டம்பர் 27 அன்று திரையிடப்பட்டது, இது ஜிட்டோ என்பவரால் இயக்கப்பட்டது.[64] ![]() பிப்ரவரி 14,1986 அன்று, மெனாஹேம் கோலனின் தி டெல்டா ஃபோர்ஸ் திரையிடப்பட்டது. இப்படத்தில் லீ மார்வினுடன் நோரிஸ் இணைந்து நடித்தார்.[65] அவர்கள் இருவரும் பயங்கரவாதிகளின் குழுவை எதிர்கொள்ளும் சிறப்புப் படை துருப்புக்களின் உயரடுக்கு அணியின் தலைவர்களாக நடித்தார்கள். டெல்டா ஃபோர்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் அதே ஆண்டு அக்டோபரில், ரூபி-ஸ்பியர்ஸின் கார்ட்டூன் கராத்தே கொமண்டோஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த அசைபட நிகழ்ச்சி ஆறு அத்தியாயங்களாக நீடித்தது. அதில், கராத்தே கொமண்டோஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசாங்க செயல்பாட்டுக் குழுவை வழிநடத்தும் தன்னைப் பற்றிய மார்வெல் என்ற ஒரு கார்ட்டூன் பதிப்பிற்கு நோரிஸ் குரல் கொடுத்தார். மார்வெல் ஒரு படக்கதைப் புத்தகத் தழுவலை உருவாக்கியது. நவம்பர் 21 அன்று, ஜே. லீ தாம்சனின் அதிரடி-சாகச நகைச்சுவை திரைப்படமான ஃபயர்வால்கர் திரையிடப்பட்டது, அங்கு நோரிஸ் லூயிஸ் கோசெட் ஜூனியருடன் இணைந்து நடித்தார். கோசெட் மற்றும் நோரிஸ் இருவரும் அனுபவமுள்ள புதையல் வேட்டைக்காரர்களாக நடித்தார்கள். அவர்களின் சாகசங்கள் எப்பொழுதாவது குறிப்பிடத்தக்க வெற்றியை அளிக்கும்.[66] தன்னைப் பற்றிய ஒரு எளிமையான பக்கத்தைக் காட்ட விரும்பியபோது இந்த திட்டம் வந்தது என்று நோரிஸ் இக்கதாப்பாத்திரத்தைப் பற்றி விளக்கினார்.[67] கோஸெட் நோரிசின் முயற்சிகளைப் பாராட்டினார். இப்படத்திற்கான விமர்சனம் பெரும்பாலும் எதிர்மறையாக இருந்தது. அதே நேரத்தில் சிலர் இது ஒரு லேசான அதிரடி படத்திற்கு ஏற்றது என்று நினைத்தனர்.[68][69][70][71][72][73][74] லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் கெவின் தாமஸ், நடிகர்களின் நடிப்பை ரசித்தார். அவர்கள் "உண்மையில் நிகழ்வின் லேசான மனதுடன் வருகிறார்கள்" என்று கூறினார். எதிராராத அளவில் படம் $11,834,302 வருவாய் ஈட்டியது.[75][76] 1987 ஆம் ஆண்டில், அவர் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை நூலான தி சீக்ரெட் ஆஃப் இன்னர் ஸ்ட்ரென்த்: மை ஸ்டோரி என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது அவரது சுய முன்னேற்ற தத்துவத்தைப் பற்றியது .[77] ஜனவரி 2,1988 அன்று, பிராட் டாக்ஃ மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III திரையிடப்பட்டது. நோரிசின் சகோதரர் ஆரோன் நோரிஸ் இயக்கிய இப்படத்தில் நோரிஸ் முதன்மை பாத்திரத்தில் நடித்தார்.[78] ஆகஸ்ட் 28 அன்று, வில்லியம் டானென் இயக்கிய ஹீரோ அண்ட் தி டெரர் படத்தில் நோரிஸ் நடித்தார். இதில் நோரிஸ் ஒரு தொடர் கொலையாளியை விசாரிக்கும் காவலராக நடித்தார். 1989 முதல் 1999 வரை: அடுத்தடுத்த வெற்றிகள்1990 வாக்கில், அவரது திரைப்படங்கள் ஒட்டுமொத்தமாக உலகளவில் 500 மில்லியன் டாலர்களை வசூலித்தன. இந்த நேரத்தில், அவர் புரூஸ் லீ மற்றும் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆகிய இருவரோடும் ஒப்பிடப்பட்டார். சில நேரங்களில் அவரது தற்காப்புக் கலை திரைப்பட பாத்திரங்களுக்காக "பொன்னிற புரூஸ் லீ" என்று அழைக்கப்படுகிறார். அதே நேரத்தில் அவரது "தனிமையான" ஆளுமை ஈஸ்ட்வுட் கதாபாத்திரமான டர்ட்டி ஹாரி உடன் ஒப்பிடப்பட்டது.[79] அதே ஆண்டு, கேனான் பிலிம்ஸ் நூலகத்தை எம்ஜிஎம் நிறுவனம் வாங்கியது. நோரிஸ் தொடர்ந்து தனது சகோதரர் ஆரோனுடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்கினார், அவர் டெல்டா ஃபோர்ஸ் 2, தி ஹிட்மேன், சைட்கிக்ஸ் (1993) ஹெல்பவுண்ட் (1994) டாப் டாக் (1995) மற்றும் ஃபாரஸ்ட் வாரியர் (1996) ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.[80][81][82][83][84] 1993 ஆம் ஆண்டில், அவர் வாக்கர்: டெக்சாஸ் ரேஞ்சர் என்ற அதிரடி தொடரின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இந்தத் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சி சார்ஜென்ட் கார்டெல் வாக்கரை மையமாகக் கொண்டது. இதில் ரோந்துக் காவலர் அமைப்பின் உறுப்பினரும் மாநில அளவிலான விசாரணை பணியகத்தின் உறுப்பினருமான நோரிஸ், அவரது கூட்டாளர் ஜேம்ஸ் ட்ரிவெட்டுடன் இணைந்து குற்றவாளிகளை எதிர்த்துப் போராடும் சாகசங்களைப் பற்றியது. இது கொலம்பியா ஒலிபரப்பு நிறுவனத்தில் எட்டு பருவங்கள் வரை நீடித்து ஒலிபரப்பப்பட்டது. மேலும் பிற அலைவரிசைகளில் குறிப்பாக ஹால்மார்க் அலைவரிசையில் தொடர்ந்து ஒலித்தது.[85] இந்த நிகழ்ச்சி அதன் ஓட்டம் முழுவதும் மதிப்பீடுகளில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. 1995 முதல் 1999 வரை நிகழ்ச்சிகளில் முதல் 30 இடங்களைப் பிடித்தது. மேலும் 1995-1996 மற்றும் 1998-1999 பருவங்களில் முதல் 20 இடங்களைப் பிடித்தது. 1999 ஆம் ஆண்டில், டெக்சாஸ் ரேஞ்சர் படத்தின் மறுதயாரிப்பான சன்ஸ் ஆஃப் தண்டர் என்ற திரைப்படத்தினை தயாரித்ததோடு வாக்கர் என்ற துணை கதாபாத்திரத்தில் நோரிஸ் நடித்தார். அதே ஆண்டு, சம்மோ ஹங் என்பவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மார்ஷியல் லாவின் ஒரு அத்தியாயத்தில் வாக்கர் என்ற கதாபாத்திரத்திலும் நோரிஸ் நடித்தார். அதே நேரம் மற்றொரு தொடரில் டெக்சாஸ் ரேஞ்சரின் வாக்கர் படத்தில் சம்மோ ஹங் தனது பெயரிலேயே ஒரு கதாபாத்திரமாகவும் தோன்றினார். வாக்கர்: டெக்சாஸ் ரேஞ்சர் தவிர தனியாக ஆகஸ்ட் 25,1993 அன்று, ராண்டி டிராவிஸ் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக விண்ட் இன் தி வயர் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் நோரிஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.[86] 1994 ஆம் ஆண்டு உலக மல்யுத்த கூட்டமைப்பின் (WWF) சர்வைவர் சீரிஸ் நிகழ்வில், தி அண்டர்டேக்கருக்கும் யோகோசுனாவிற்கும் இடையிலான போட்டியில் சிறப்பு வெளிப்புற நடுவராக நோரிஸ் இருந்தார்.[87] 1996 ஆம் ஆண்டில், நோரிஸ் தி சீக்ரெட் பவர் வித்தின் ஜென் சொல்யூஷன்ஸ் டு ரியல் பிராப்ளம்ஸ் என்ற புத்தகத்தை எழுதினார்.[88] டோட்டல் ஜிம் வீட்டு உடற்பயிற்சிக் கருவிகளை விளம்பரப்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களின் நீண்டகால தொடரில் நோரிஸ், கிறிஸ்டி பிரிங்க்லியுடன் தோன்றினார்.[89] நவம்பர் 1,1998 அன்று, சிபிஎஸ் மைக்கேல் ப்ரீஸின் தொலைக்காட்சி திரைப்படமான லோகனின் வார் பவுண்ட் பை ஹானர் என்ற திரைப்படத்தில், நோரிஸ் மற்றும் எடி சிப்ரியன் ஆகியோர் நடித்தனர்.[90] அந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பதின்மூன்று நிகழ்ச்சிகளில் இந்த தொலைக்காட்சி படம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[91] 2000 to 2005: தொடர் திரைப்படங்கள் மற்றும் இணைய புகழ்![]() 2000களின் முற்பகுதியில், நாரிஸ் சிபிஎஸ் தொலைக்காட்சி திரைப்படங்களான தி பிரசிடென்ட் 'ஸ் மேன் (2000) மற்றும் தி பிரசிட்டென்ட்' ஸ் மேன்: ஏ லைன் இன் தி சாண்ட் ஆகியவற்றில் ஒரு இரகசிய முகவராக நடித்தார்.(2002).[92] 2003 ஆம் ஆண்டில், பெல்ஸ் ஆஃப் இன்னோசென்ஸ் என்ற இயற்கைக்கு அப்பாற்பட்டசக்தி பற்றிய கிறிஸ்தவ திரைப்படமான பெல்ஸ் ஆஃப் இன்னொசன்ஸ் என்ற படத்தில் நோரிஸ் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.[93] அதே ஆண்டு, யெஸ் டியர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில் நடித்தார்.[94] 2004 ஆம் ஆண்டில், ராவ்சன் மார்ஷல் தர்பரின் நகைச்சுவைத் திரைப்படமான டாட்ஜ்பால்: எ ட்ரூ அண்டர்டக் ஸ்டோரி வெளியிடப்பட்டது.[95] பந்தடி விளையாட்டின் நடுவராக நடித்தார். இது விமர்சகர்களால் "ஒரு மோசமான நகைச்சுவை" என்று விமரிசிக்கப்பட்டது. எனினும் $167.7 மில்லியன் வசூலித்தது.[96] அதே ஆண்டு, அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக: என் கதை என்ற தனது சுய சரிதையை வெளியிட்டார். 2005 ஆம் ஆண்டில், நோரிஸ் உலக காம்பாட் லீக் (டபிள்யூ. சி. எல்) என்ற அமைப்பை நிறுவினார். இது ஒரு குழு அடிப்படையிலான தற்காப்புக் கலைப் போட்டியாகும், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி அவரது கிக்ஸ்டார்ட் கிட்ஸ் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.[97] அக்டோபர் 17,2005 அன்று, கொலம்பியா ஒலிபரப்பு நிறுவனம் ஞாயிறு இரவுத் திரைப்படமாக வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர்: ட்ரையல் பை ஃபயர் என்ற திரைப்படத்தை திரையிட்டது. ஒரு தொடர்ச்சியான திரைப்படத் தொடராக இது தயாரிக்கப்பட்டது. இதில் வாக்கர் என்ற தனது பாத்திரத்தில் நோரிஸ் மீண்டும் நடித்தார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமாக திரைப்படங்களை திரையிடத் திட்டமிட வேண்டாம் என்ற சிபிஎஸ்ஸின் 2006-2007 சீசன் முடிவால் இது கடுமையாக பாதிக்கப்பட்டது. ![]() சக் நோரிஸ் உண்மைகள் என்ற பெயரில் முதலில் 2005 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையத்தில் பல்வேறு ஒலி,ஒளிப்பதிவுகள் தோன்றத் தொடங்கின. இயன் ஸ்பெக்டரால் உருவாக்கப்பட்ட அவை நோரிஸைப் பற்றிய நையாண்டியான உண்மைகள். அப்போதிருந்து, அவை பிரபலமான கலாச்சாரத்தில் பரவலாகிவிட்டன. இந்த "உண்மைகள்" பொதுவாக நோரிஸின் கடினத்தன்மை, அணுகுமுறை, வீரியம், நுட்பமான தன்மை மற்றும் ஆண்மை பற்றிய அபத்தமான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளாகும்.[98][99] இந்த உண்மைகள் முதலில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களால் பரிமாறிக்கொள்ளப்பட்டது. பின்னர் அவை மிகவும் பரவலாக இருந்தன.[100] அப்போதிருந்து, முக்கியமான உரையாடல் நிகழ்ச்சிகளில், சக் நோரிஸ் உண்மைகளுடன் அவர் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார். ஈராக்கில் உள்ள துருப்புக்களை உற்சாகப்படுத்தி மன உறுதியை அதிகரிக்க அங்கு சென்று நோரிஸ் பார்வையிட்டார்.[101] 2006-தற்போது வரை: நடப்பு படைப்புகள்2006 ஆம் ஆண்டில் தி கட்டர் என்ற திரைப்படத்தில் நோரிஸ் நடித்தார், அங்கு அவர் ஒரு மீட்பு பணியில் துப்பறியும் நபராக நடித்தார்.[102] அந்த ஆண்டு அவர் கென் ஆபிரகாம், ஆரோன் நோரிஸ் மற்றும் டிம் கிரேயம் ஆகியோருடன் இணைந்து எழுதிய தி ஜஸ்டிஸ் ரைடர்ஸ் என்ற நாவலை வெளியிட்டார்.[103] பென்குயின் யு. எஸ். ஏ. வின் வயது வந்தோர் பிரிவான கோதம் புக்ஸ், இயன் ஸ்பெக்டர் எழுதிய தி ட்ரூத் அபவுட் சக் நோரிஸ்: உலகின் மிகச்சிறந்த மனிதர் பற்றிய 400 உண்மைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது.[104] நோரிஸ் பின்னர் டிசம்பரில் பெங்குயின் யு. எஸ். ஏ. க்கு எதிராக "வர்த்தக முத்திரை மீறல், நியாயமற்ற செறிவூட்டல் மற்றும் தனியுரிமை மீறல்கள்" என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.[105] பின்னர் 2008 இல் வழக்கை கைவிட்டார்.[106] இந்த புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனைப்பிரிவில் இருந்தது. அதன் பின்னர் இயன் ஸ்பெக்டர் சக் நோரிஸ் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[107] அதே குழுவுடன் நோரிஸ் தி ஜஸ்டிஸ் ரைடர்ஸின் தொடர்ச்சியை வெளியிட்டார்.[108] டின்டேல் ஹவுஸ் வெளியீட்டாளர்கள் நோரிஸை புகழ்ந்து அதிகாரப்பூர்வமான சக்நோரிஸ் உண்மைகள்: 101 சக்கின் விருப்பமான உண்மைகள் மற்றும் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டனர். இது அவரால் இணைந்து எழுதப்பட்டு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.[109] 2008 ஆம் ஆண்டில், அவர் பிளாக் பெல்ட் தேசபக்தி: அமெரிக்காவை எவ்வாறு எழுப்புவது என்ற புனைக்கதை அல்லாத அரசியல் புத்தகத்தை வெளியிட்டார். இது செப்டம்பர் 2008 இல் தி நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை பட்டியலில் 14 வது இடத்தைப் பிடித்தது.[110] அதே ஆண்டில், கேம்லாஃப்ட் நிறுவனம் சக் நோரிஸ் உண்மைகளுடன் இணையத்தில் உருவான புகழின் அடிப்படையில், அலைபேசிச் சாதனங்களுக்கான சக் நோரிஸ்ஃ பிரிங் ஆன் தி பேன் என்ற அலைபேசி விளையாட்டைத் தயாரித்தது.[111] இதில் ஒரு பக்கவாட்டு சுழற்சியில் நோரிஸை வீரர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார். இந்த விளையாட்டு விமர்சகர்களால் நன்கு மதிப்பிடப்பட்டது. .[112] 2010 முதல், நோரிஸ் கிரியேட்டர்ஸ் சிண்டிகேட் இதழில் தேசிய அளவில் ஒரு சிண்டிகேட் கட்டுரையாளராக இருந்து வருகிறார். தனிப்பட்ட சுகாதார பிரச்சினைகள் மற்றும் அமெரிக்காவில் சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய பரந்த பிரச்சினைகள் குறித்து எழுதுகிறார்.[113] 2010கள் டி-மொபைல், யுனைடெட் ஹெல்த்கேர், ஹெஸ்பர்கர், டொயோட்டா, மற்றும் 2020களில், குவிக்ட்ரிப் உட்பட பல விளம்பரங்களில் நோரிஸ் தோன்றினார்.[114][115][116][117][118][119][120][121][122][123] 2012 ஆம் ஆண்டில், நோரிஸ் தி எக்ஸ்பெண்டபிள்ஸ் 2 என்ற படத்தில் ஒரு கூலிப்படை ஆளாக நடித்தார்.[124] இத்திரைப்படம் வெற்றி பெற்று உலகளவில் 310 மில்லியன் டாலர்களை வசூலித்தது.[125] அதே ஆண்டில், நோரிஸ் மற்றும் அவரது மனைவி ஜெனாஓ கெல்லி ஆகியோர் அவரது பண்ணையில் பல நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சி ஃபோர்ஸ் என்ற நீர்புட்டி விற்பனை நிறுவனத்தை நிறுவினர்..[126] 2017 ஆம் ஆண்டில், நோரிஸ் பியாட் தானுந்து விளம்பரத் தூதராக ஆனார்.[127] ஃப்ளேர்கேம்ஸ் நிறுவனம் அலைபேசிச் சாதனங்களுக்கான அதிரடி- விளையாடான நான் ஸ்டாப் சக் நோரிஸை தயாரித்தது. சக் நோரிஸ் உண்மைகளால் உருவாக்கப்பட்ட அவரது புகழை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது விளையாட்டு இதுவாகும். இந்த விளையாட்டு நன்கு மதிப்பாய்வு செய்யப்பட்டது. . 2019 ஆம் ஆண்டில், ஹிஸ்டரி சேனலில் சக் நோரிஸ்: இராணுவ வாகனங்களுக்கான காவிய வழிகாட்டி என்ற ஆவணப்படத்தை நோரிஸ் தொகுத்து வழங்கினார். அதில், நோரிஸ் அமெரிக்க இராணுவத்தின் வாகன உருவாக்கங்களை ஆராய்கிறார்.[128] 2020 ஆம் ஆண்டில், ஹவாய் ஃபைவ்-0 தொடரின் இறுதிப் போட்டியில் நோரிஸ் நடித்தார்.[129][130] 2021 ஆம் ஆண்டில் ஒரு விடுமுறை நிகழ்வின்போது வெளியிடப்பட்ட இணைய விளையாட்டான வேர்ல்ட் ஆஃப் டாங்க்ஸில் நோரிஸ் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றார்.[131] தற்காப்புக் கலை அறிவுநோரிஸ், அமெரிக்கன் டாங் சூ டோ மற்றும் சக் நோரிஸ் சிஸ்டம் (முன்பு சுன் குக் டோ என்று அழைக்கப்பட்டது) என்ற இரண்டு முக்கிய தற்காப்புக் கலை அமைப்புகளை நிறுவியுள்ளார். அமெரிக்கன் டாங் சூ டோஅமெரிக்கன் டாங் சூ டோ 1966 ஆம் ஆண்டு நோரிஸால் உருவாக்கப்பட்டது, இது மூ டக் குவான் பாணியிலான டாங் சூ டோவாகும். இது ஜூடோ மற்றும் கராத்தே ஆகியவற்றின் கலவையாகும். பல ஆண்டுகளாக இது அவரது முன்னாள் கருப்புப் பட்டை வீரர்களாலும் அவர்களது மாணவர்களாலும் மேலும் வளப்படுத்தப்பட்டுள்ளது. சக் நோரிஸ் முறைநோரிஸின் தற்போதைய தற்காப்புக் கலை அமைப்பு சக் நோரிஸ் அமைப்பு ஆகும், இது முன்பு சுன் குக் டோ என்று அழைக்கப்பட்டது.[132][133] இந்த பாணி 1990 ஆம் ஆண்டில் நோரிஸால் முறையாக நிறுவப்பட்டது. இது முதலில் நோரிஸ் இராணுவத்தில் இருந்தபோது கொரியாவில் பெற்ற டாங் சூ டோ பயிற்சியை அடிப்படையாகக் கொண்டது. தனது போட்டிகளுக்கான பயணத்தின் போது, நோரிஸ் ஷோடோகன், ஜூடோ, டேக்வாண்டோ, டாங் சூ டோ, ஹாப்கிடோ மற்றும் அமெரிக்கன் கென்போ போன்ற பிற சண்டை முறைகளைப் படிப்பதன் மூலம் அதை மிகவும் பயனுள்ளதாக வளர்த்துக்கொள்ளவும், அதன் மாற்றும் பாணியை உருவாக்கவும் தொடங்கினார். சுன் குக் டோ இப்போது தற்காப்பு, போட்டி, ஆயுதங்கள், மல்யுத்தம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது.[134] ஒவ்வொரு கோடைகாலத்திலும் யுனைடெட் சண்டைக்கலை அமைப்பு (யு. எஃப். ஏ. எஃப்) நெவாடாவின் லாஸ் வேகாஸில் ஒரு பயிற்சி மாநாடு மற்றும் சுன் குக் டோ உலக வெற்றியாளர் போட்டியை நடத்துகிறது.[135] இந்த கலையில் ஒரு கெளரவக் குறியீடு மற்றும் வாழ்க்கை விதிகள் அடங்கும். இந்த விதிகள் நோரிஸின் தனிப்பட்ட குறியீட்டிலிருந்து வந்தவை.[136] அவை பின்வருமாறு:
பெரும்பாலான பாரம்பரிய தற்காப்புக் கலைகளைப் போலவே, சக் நோரிஸ் முறையும் பல வடிவமைப்பின் நடைமுறையை உள்ளடக்கியதும் பல பாணிகளிலிருந்து தழுவி எடுக்கப்பட்டதும் ஆகும். யுனைடெட் சண்டைக்கலைக் அமைப்பு அதன் வரலாற்றில் 3,000 க்கும் மேற்பட்ட பிளாக் பெல்ட் பட்டங்களைப் பெற்றுள்ளது, தற்போது உலகளவில் கிட்டத்தட்ட 4,000 செயலிலுள்ள உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[137] அமெரிக்கா, மெக்சிகோ, நோர்வே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் சுமார் 90 உறுப்பினர் பள்ளிகள் உள்ளன. தகுதிகள், விருதுகள் மற்றும் கௌரவங்கள்![]() ![]()
தனிப்பட்ட வாழ்க்கைகுடும்பம்.நோரிஸ் தனது 18 ஆவது வயதில் 17 வயதான வகுப்புத் தோழி டயான்னே ஹோலெசெக்கை (1941 இல் பிறந்தார்) டிசம்பர் 1958 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 1956 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சந்தித்தனர். 1962 ஆம் ஆண்டில், இவர்களுக்கு முதல் குழந்தை மைக் பிறந்தார். 1963 ஆம் ஆண்டில் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்து அவருக்கு ஒரு மகளும் இருந்தார்.[148][149] பின்னர், 1964 ஆம் ஆண்டில் தனது மனைவி ஹோலெக்குடன் எரிக் என்ற இரண்டாவது மகனைப் பெற்றார். 30 வருட திருமணத்திற்குப் பிறகு 1988 இல் தி டெல்டா ஃபோர்ஸ் 2 படப்பிடிப்பின் போது இருவரும் பிரிந்தனர். 1989 இல் நோரிஸ் மற்றும் ஹோலெசெக் இருவரும் விவாகரத்து செய்தனர், நவம்பர் 28,1998 அன்று, நோரிஸ் அவரை விட 23 வயது இளையவரான முன்னாள் மாடலிங் கலைஞரான ஜெனா ஓ 'கெல்லியை மணந்தார். ஓ 'கெல்லிக்கு முந்தைய திருமணத்திலிருந்து இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர் ஆகஸ்ட் 30,2001 அன்று இரட்டையர்களை பெற்றெடுத்தார்.[150] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி நோரிஸுக்கு 13 பேரக்குழந்தைகள் உள்ளனர் .[151] கிறிஸ்துவ மதம்நோரிஸ் ஒரு வெளிப்படையான கிறிஸ்தவர் ஆவார். இவர் பல கிறிஸ்தவ கருப்பொருள் புத்தகங்களின் ஆசிரியர். டவுன்ஹால் டாட் காமிலிருந்து பென் ஸ்டீண் நீக்கப்பட்டதை மதிப்பாய்வு செய்த நோரிஸ் ஏப்ரல் 22,2008 அன்று, இன்டலிஜன்ட் டிசைன் இயக்கத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.[152] அவர் பாப்தீஸ்ட் மற்றும் டல்லாஸில் உள்ள பிரஸ்டன்வுட் பாப்தீஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினர் ஆவார்.[153] அரசியல் கருத்துக்கள்![]() ![]() நோரிஸ் ஒரு குடியரசுக் கட்சி மற்றும் வெளிப்படையான பழமைவாதி ஆவார்.[154][155][156] நோரிஸ், வேர்ல்ட்நெட் டெய்லி இதழில் தீவிர வலதுசாரி கட்டுரையாளர் ஆவார். [157][158][159] 1984 ஆம் ஆண்டு வெளியான மிஸ்ஸிங் இன் ஆக்சன் திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒரு நேர்காணலில் நோரிசு, "நான் ஒரு பழமைவாதி; ரொனால்ட் ரீகனின் பெரிய ரசிகன்; நான் ஒரு குடியரசுக் கட்சிக்காரனோ அல்லது ஜனநாயகவாதியோ அல்ல. நான் அந்த மனிதனுக்காகவே அதிகம் செல்கிறேன். ரொனால்ட் ரீகன் அவர் நினைப்பதைச் சொல்கிறார். அவர் பிரபலமற்றவராக இருந்தாலும் கூட, தனது மனதைத்திறந்து பேச அவர் பயப்படவில்லை. எனக்கு ஒரு வலுவான தலைவர் வேண்டும். ரீகன் ஒரு வலுவான தலைவர். அவர் பதவியில் இருந்ததிலிருந்தே இந்த நாட்டில் மிகவும் நேர்மறையான, தேசபக்தி உணர்வு உள்ளது".[160]என்று குறிப்பிட்டார். 1986 ஆம் ஆண்டு வெளியான தி டெல்டா ஃபோர்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, டி. டபிள்யூ. ஏ விமானம் 847 கடத்தப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய கிழக்கில் அமெரிக்கா ஒரு "காகிதப் புலியாக" மாறி வருகிறது என்று நோரிஸ் கூறினார். "பயங்கரவாதத்திற்கு எதிரான நமது செயலற்ற அணுகுமுறை உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் தூண்டும் என்ற உண்மை இங்கே தெரிகிறது". "நான் உலகம் முழுவதும் பயணம் சென்று ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் பயங்கரவாதம் செய்த பேரழிவைப் பார்த்திருக்கிறேன். இறுதியில் அது இங்கும் வரப்போகிறது என்று எனக்குத் தெரியும்", என்று நோரிஸ் மேலும் கூறினார்.[161] 2007 ஆம் ஆண்டில், நோரிஸ் அமெரிக்க துருப்புக்களைப் பார்வையிட ஈராக் பயணம் மேற்கொண்டார்.[162][163] நவம்பர் 18,2008 அன்று, ஒரே பாலின திருமணத்திற்கு தடை போடும் கலிபோர்னியா முன்மொழிவு 8 க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.[164] 2009இல் நோரிஸ் பராக் ஒபாமா "பிறப்பு" சதிக்கான ஆதரவை வெளிப்படுத்தினார். வேர்ல்ட்நெட் டெய்லி வெளியிட்ட நோரிஸின் கடிதத்தில், அப்போதைய ஜனாதிபதி ஒபாமா தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட மறுத்தது சந்தேகத்திற்குரியது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சதி கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒபாமாவைக் கேட்டுக்கொண்டார்.[165][166] 2019 ஆம் ஆண்டில், நோரிஸ் துப்பாக்கி உற்பத்தியாளரான க்ளோக் உடன் ஒரு ஒப்புதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வேளையில் இந்த ஒப்பந்தம் பொதுமக்களில் சிலரிடமிருந்தும் அவரது ரசிகர்களிடமிருந்தும் விமர்சனங்களை சந்தித்தது.[167] சமூகப் பங்களிப்பு1990 ஆம் ஆண்டில், நோரிஸ் யுனைடெட் சன்டைக்கலை அமைப்பு, கிக்ஸ்டார்ட் கிட்ஸ் ஆகியவற்றை நிறுவினார். அவரது சமூகப் பங்களிப்புகளின் குறிப்பிடத்தக்க பகுதியாக, தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிப்பதன் மூலம் போதைப்பொருள் தொடர்பான அழுத்தத்திலிருந்து விலகி, சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளவும், ஆபத்தில் உள்ள குழந்தைகளில் கவனம் செலுத்தவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கவனத்தை நேர்மறையாக வலுப்படுத்தும் முயற்சிக்கு மாற்றுவதன் மூலம், இந்த குழந்தைகள் தங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நோரிஸ் நம்புகிறார்.[168][169] டெக்சாஸின் நவாசோட்டாவில் நோரிசுக்கு ஒரு பண்ணை உள்ளது, அங்கு அவர் குடும்பத்துக்குச் சொந்தமான தண்ணீர்புட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் வருவாயில் ஒரு பகுதியை சுற்றுச்சூழல் நிதி மற்றும் கிக்ஸ்டார்ட் கிட்ஸ் ஆகியவற்றுக்கு அளிக்கின்றனர்..[170] குழந்தைகளுக்கான நிதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த படைவீரர்களுக்கு நிர்வாகத்தின் தேசிய நிதி, யுனைடெட் வே மற்றும் மேக்-ஏ-விஷ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு நன்கொடைகள் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்காக அவர் அறியப்படுகிறார்.[171] கொரியாவில் அமெரிக்க வான்படைக்காக பணியாற்றிய அனுபவத்தால் ஈர்க்கப்பட்ட நோரிஸ், அமெரிக்க படைவீரர் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளராக சிறிது காலம் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கான ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை கவனப்படுத்துவதே அவரது நோக்கமாகும். அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு காரணமாக, அவர் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க மூத்தவர் விருதுகளில் ஆண்டின் மூத்த வீரர் விருதைப் பெற்றார்.[172] இந்தியாவில், நோய், துன்பம் மற்றும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட விஜய் அமிர்தராஜ் அறக்கட்டளையை நோரிஸ் ஆதரிக்கிறார். டெல்லியில் உள்ள குழந்தை எச். ஐ. வி/எய்ட்ஸ் இல்லங்கள், மற்றும் கொச்சினில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதித்த பெரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிக்கும் பணி[173]. கர்நாடகாவில் ஒரு பார்வையற்ற பள்ளி ஆகியவற்றுக்கு தனது நன்கொடைகளை அளிக்கிறார். திரைப்பட விவரங்கள்
குறிப்புதவிகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சக் நோரிஸ்
|
Portal di Ensiklopedia Dunia