சசாங்கன்
சசாங்கன் இன்றைய கிழக்கு வங்கப் பகுதியில் இருந்த கௌட நாட்டின் அரசன் ஆவான். "கௌடா" என்னும் ஒன்றுபட்ட வங்காள நாட்டை முதன் முதலில் உருவாக்கியவனும் இவனே. இதனால் சசாங்கன், வங்காளத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மன்னராகக் கருதப்படுகிறான்.[2] இவன் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சில வரலாற்றாளர்கள் இவன் ஏறத்தாழ கிபி 590க்கும் கிபி 625க்கும் இடையில் ஆட்சியில் இருந்ததாகக் கூறுகின்றனர். இவன் புகழ் பெற்ற அர்சவர்த்தன், பாசுக்கரவர்மன் ஆகிய அரசர்களுக்குச் சம காலத்தவன். இவன் ஹர்ஷவர்தனுக்கு எதிராக போரிட, அண்டை நாட்டு மன்னர்களைத் தூண்டி விட்டவனாகக் கருதப்படுகிறான். பௌத்தர்களை ஒடுக்குதல்![]() கிபி 12ம் நூற்றாண்டின் பௌத்த சாத்திரம் ஒன்றில், பௌத்தர்களுக்கு எதிரான சசாங்கன், கௌடப் பேரரசில் உள்ள பௌத்த தூபிகளை சிதைத்தும், பௌத்தர்களை ஒடுக்கியும் வைத்தான் என அறியப்படுகிறது.[3] கௌதம புத்தர் உருவேலாவில் உள்ள போதி மரத்தடியில் சம்போதி ஞானம் பெற்றதாக கருதப்படும் அரசமரத்தை வெட்டியதாகக் கருதப்படுகிறான்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia