சஞ்சீவ் துராந்தர்
சஞ்சீவ் துராந்தர் (Sanjeev Dhurandhar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள புனே நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது ஆராய்ச்சி ஆர்வம் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிதல் மற்றும் கவனித்தல் பிரிவுகளாகும்.[1] ஈர்ப்பு அலைகளை கண்டறிய பங்களித்த இந்திய அணியின் ஓர் அங்கத்தினராக துராந்தர் இருந்தார்.[2][3][4] இண்டிகோ கூட்டமைப்பு மன்றத்தின் அறிவியல் ஆலோசகராகவும் இவர் உள்ளார்.[5] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான எச் கே பிரோதியா விருது 2016 ஆம் ஆண்டு துராந்தருக்கு வழங்கப்பட்டது.[6] 2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் இவரது பங்களிப்புகளை சிறப்பிக்கும் விதமாக அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகத் துராந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு அரிதாக இத்தகைய சிறப்பு கிடைக்கிறது.[7] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia