சண்டிமுனி
சண்டிமுனி (Sandimuni) என்பது மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் நட்டி , மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] கதைச் சுருக்கம்மனைவி தாமரை ( மனிஷா யாதவ் ) இறந்த பிறகு, கணவர் சண்டிமுனி ( நட்டி ) மற்றொரு பெண்ணான இராதிகாவை (இதுவும் மனிஷா யாதவ்) காதலிக்கிறார். அவர் வேறொரு பெண்ணைக் காதலிப்பதைப் பார்த்ததும், இறந்த மனைவியின் ஆவி இதைத் தாங்க முடியாமல் அவரைத் தாக்கத் தொடங்குகிறது. நடிகர்கள்
தயாரிப்புராகவா லாரன்ஸிடம் உதவியாளராக இருந்த செல்வகுமார் இயக்குநராக அறிமுகமான படம் இது.[6] படத்தின் பெரும்பகுதி பழனிக்கு அருகில் உள்ள மெய்க்கரசபட்டியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கிறது. இரண்டாவது முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.[5][7] வெளியீடு"சண்டிமுனி" 7 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தை வழங்கியது. மேலும், "கதை, கதாபாத்திரம் , திரைக்கதையில் எந்த புதுமையான கூறுகளும் இல்லாமல், திரைப்படம் ஒரு பெரிய குழப்பம்" என்று எழுதியது. மாலை மலர் பாடல்கள், ஒளிப்பதிவு, நகைச்சுவைக் காட்சிகள் பின்னணி இசை ஆகியவற்றை பாராட்டியது.[8] ஒலிப்பதிவுஇப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.[9][10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia