ஆர்த்தி (நடிகை)
ஆர்த்தி கணேஷ்கர், ஒரு தென்னிந்தியத் திரைப்பட தொலைக்காட்சி நடிகை.[1] இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவையூட்டும் வேடத்தில் நடித்துள்ளார், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார்.[2]. கணேஷ்கர் என்ற நகைச்சுவை நடிகரைத் திருமணம் செய்துகொண்டார்.[3] இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை வென்றார். இந்திய ஆட்சிப் பணியாளராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வெளிவந்த வண்ணக் கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்பட சுமார் 65 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தைப்பருவத்தில் சககுழந்தை நட்சத்திரமும் தற்போது இவருடைய கணவருமான கணேஷ்கரின் சகோதரியாக, என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார். திரைப்படங்கள்
தொலைக்காட்சியில்
விருதுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia