சத்தமின்றி முத்தம் தா
சத்தமின்றி முத்தம் தா (Sathamindri Mutham Tha) என்பது 2024 இல் இந்தியத் தமிழில் வெளிவந்த காதல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜ்தேவ் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேசு ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செலிபிரைட் புரொடக்சன்சு பதாகையின் கீழ் எஸ். கார்த்திகேயன் தயாரித்தார்[1] இத்திரைப்படம் 2024 மார்ச்சு 1 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புஇத்திரைப்படம் இராஜ் தேவ், அவருடைய இயக்குநர் அறிமுகத் திரைப்படமாகும்.[3][4] வரவேற்புடைம்ஸ் நவ் இன் மணிகண்டன் கே. ஆர் ஐந்திற்கு 2.5 என்று மதிப்பிட்டு "நடிகர் ஸ்ரீகாந்த், விக்னேஷ் வேடத்தில் நேர்த்தியான நடிப்பால் பெரிய திரைக்கு மீண்டும் வந்துள்ளார். அதேபோன்று நாயகியாக நடித்துள்ள பிரியங்கா திம்மேசும் சிறப்பாக பங்களித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.[5] சினிமா எக்சுபிரசின் ஜெயபுவனேஸ்வரி பி, "இதன் முடிவில் ஒரு நல்ல திருப்பம் இருந்தபோதிலும், சத்தமின்றி முத்தம் தா அதன் திறனை வீணடிக்கிறது" என்று குறிப்பிட்டார் [6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia