ஸ்ரீகாந்த் (நடிகர்)
ஸ்ரீகாந்த் (ஆங்கிலம்: Srikanth, பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002-ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் தமிழில் பார்த்திபன் கனவு, தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.[1] தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார். திரைவாழ்வுஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் நடித்தார். முதற் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.[2] இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநிலத் திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.[3] பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007-ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குநர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடித்தார்.[4] திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia