சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ்சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ் [1] என்னும் நூல் சிதம்பரநாத முனிவர் என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது பிழைகள் மலிந்த பதிப்பாக உள்ளது. மற்ற நூல்களைப் போல 100 பாடல்கள் கொண்டது. மேலும் இறுதியில் ஒரு வாழ்த்துப்பா சேர்க்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சிதம்பரநாதருக்கு ஞானபண்டாரம் சிதம்பரநாதர் என்னும் பெயர்களும் உண்டு. இந்த நூல் இவரது ஆசிரியர் சத்தியஞான பண்டாரத்தின்மீது பாடப்பட்டது. சத்தியஞான பண்டாரத்தின் பிறந்த ஊர் சிவபுரம். இந்தச் சிவபுரம் குடந்தை அருகே உள்ள பாடல் பெற்ற தலம். வாழ்ந்த ஊர் கமலை என்னும் திருவாரூர். இது போன்ற செய்திகளை இந்த நூலில் வரும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன. [2] மேலும் சில செய்திகள்சத்திய ஞான பண்டாரம் என்பவர் ௨மாபதி சிவத்திடம் ௨பதேசம் பெற்ற அ௫ள் நமச்சிவாயர். அ௫ள் நமச்சிவாயர் காழிகங்கைமெய்கண்டா௫க்கு ௨பதேசம் அ௫ளியவர். காழிகங்கைமெய்கண்டார் காழி சிற்றம்பல நாடிகளின் ஞானாசிரியர் ஆவார். காழி சிற்றம்பல நாடிகளிடம் ௨பதேசம் பெற்றவர் பழுதைக்கட்டி சம்பந்த முனிவர். அவரிடம் ௨பதேசம் பெற்றவர் காவை அம்பலநாத சுவாமிகளாவர். காவை அம்பலநாத சுவாமிகளிடம் ௨பதேசம் பெற்றவர் சத்திய ஞான பண்டாரம். இவர்களின் தீட்சா நாமம் சத்திய ஞானதேசிக தீர்க்கதரிசினிகள்.[3] கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia