சத்தீசு குசரால்சத்தீசு குசரால் (Satish Gujral பிறப்பு 25 திசம்பர் 1925) ஓவியர், சிற்பக்கலைஞர், எழுத்தாளர் என அறியப்படுகிறார். சுவரோவியம், கிராபிக்சு, கட்டடக்கலை கரிக்கட்டைச் சிற்பங்கள் பிளாஸ்டிக் கலை ஆகியவற்றிலும் வல்லுநர். இந்திய நடுவணரசின் பத்ம விபூசண் விருது பெற்றவர். வாழ்க்கைக் குறிப்புசத்தீசு குசரால் இன்றைய பாக்கித்தானில் அமைந்துள்ள சீலம் நகரில் பிறந்தார். 1939 ஆம் ஆண்டு இலாகூரில் மாயோ கலைக் கல்லூரியில் பயின்று தேர்ச்சிப் பெற்று 1944 இல் மும்பைக்குக் குடி பெயர்ந்தார். ஓவியக் கலையை மேலும் கற்று தம் திறமையை மேம்படுத்திக் கொள் வதற்காக மெக்சிகோ அரசின் உதவித் தொகையைப் பெற்று மெக்சிகோ அரசின் தேசியக் கல்லூரியில் படித்தார். அங்கு டியாகோ ரிவேரா டேவிட் செக்கிரோஸ் ஆகிய புகழ் பெற்ற ஓவியர்களிடம் பயிற்சிப் பெற்றார் ஆக்கங்கள்சீதையின் அக்கினிப் பிரவேசம், திரவ்பதையின் துகிலுரிப்பு, சத்ரஞ் கி கில்லாடி என்பன சத்திசு குசரால் படைத்த ஓவியங்களில் குறிப்பிடத்தக்கன. கட்டடக் கலையில் சிறந்த சத்தீசு குசரால் புது தில்லியீல் உள்ள பெல்ஜியம் தூதரகக் கட்டடத்தை வடிவமைத்தார். மேலும் கோவா பல்கலைக் கழகம், ஐதராபாத்தில் சி.எம்.சி. நிறுவனத்தின் ஆய்வு மையம் ஆகிய கட்டடங்கள் இவரால் வடிவமைக்கப் பட்டவை ஆகும். அவருடைய தன் வரலாறு மற்றும் சில நூல்களை எழுதியுள்ளார். 1952 முதல் 1974 வரை மெக்சிகோ நியூயார்க் புதுதில்லி மும்பை கல்கத்தா மாண்ட்ரியல் உரோம் பெர்லின் டோக்கியோ எனப் பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணம் செய்து ஆங்காங்கே கண்காட்சிகள் வைத்து தாம் படைத்த ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவற்றைப் பரப்பினார். விருதுகள்ஓவியத்துக்கான தேசிய விருது (இரண்டு முறை ) சிற்பத்துக்கான தேசிய விருது பஞ்சாப் அரசின் கௌரவ விருது பெல்ஜியம் அரசின் ஆர்டர் ஆப் தி கிரவுன் இந்திய அரசின் பத்ம விபூசண் லியோனர்டோ டா வின்சி விருது மெக்சிகோ அரசின் வாழ்நாள் சாதனை பன்னாட்டு விருது உசாத்துணைhttp://www.iloveindia.com/indian-heroes/satish-gujral.html http://www.culturalindia.net/indian-art/painters/satish-gujral.html |
Portal di Ensiklopedia Dunia