சந்தவார் போர்சந்தவார் போர் (Battle of Chandwar) 1193 அல்லது 1194 ஆம் ஆண்டில் முகமது கோரிக்கும் காகர்வால் வம்சத்தைச் சேர்ந்தவனும் கன்னோசியன் அரசனுமான செயச்சந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற போராகும்[1]. இப்போர் ஆக்ராவிற்கு அருகிலுள்ள யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சந்தவார் என்னுமிடத்தில் நடைபெற்றது. செயச்சந்திரனை தோற்கடித்த முகமது கோரி வட இந்தியா முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்[2] கன்னோசி அரசன் செயச்சந்திரன் படை வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த சம்னயத்தில் அவன் கண்ணில் ஒரு அம்பு தைத்தது. யானையில் இருந்து தவறிவிழுந்த அவன் கொல்லப்பட்டான். தங்கள் தலைவர் இறந்து விட்டதை அறிந்த இந்துப் படையினர் மனமுடைந்து பெரும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கத்தில் பின்வாங்கியதாக போர்க்கள செய்திகள் தெரிவிக்கின்றன[3]. முகமது கோரி அடுத்ததாக தலைநகரம் கன்னோசியின் மீது படையெடுப்பார் என கன்னோசிப் படைகள் எதிர்பார்த்தனர். ஆனால் கோரி இராணுவ பலமற்ற புனித நகரமான வாரணாசியிம் மீது படையெடுத்தார். அங்கிருந்த இந்துமதக் கோயில்கள் ஆயிரத்தை மசூதிகளாக மாற்றினார். யானைகள் உள்ளிட்ட மகத்தான செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன, இசுலாமிய இராணுவம் ஆசின் கோட்டையை கைப்பற்றி ஆட்சியமைத்தது. ஆனால் ராசபுத்திரர்கள் 1197 ஆம் ஆண்டு வரை செயச்சந்திரனின் மகன் அரிச்சந்திரனைத் தலைவராகக் கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர். இல்டுமிசு பதவியேற்கும் வரை கன்னோசி தன்னாட்சி புரிந்தது[4] மேற்கோள்கள்
. |
Portal di Ensiklopedia Dunia