சந்திரகிரி கோட்டை
![]() ![]() சந்திரகிரி கோட்டை (Chandragiri Fort, Andhra Pradesh) 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இக்கோட்டை தற்கால ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தின் உள்ள திருப்பதி நகரத்தின் அருகே சந்திரகிரி எனுமிடத்தில் உள்ளது. இக்கோட்டையை 13ம் நூற்றாண்டில் யாதவ நாயுடு மன்னர்கள் கட்டினாலும், விஜயநகரப் பேரரசர்கள் இதனை நன்கு பயன்படுத்தினர். வரலாறு1367ல் விஜயநகரப் பேரரசு ஆட்சிக்கு வருவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், சந்திரகிரி பகுதியை ஆண்ட யாதவ நாயுடு மன்னர்களால் சந்திரகிரி கோட்டை கட்டப்பட்டது. விஜயநகரப் பேரரசர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (1485-1491) காலம் முதல் இக்கோட்டை புகழ் பெற்று விளங்கியது. விஜயநகரப் பேரரசரசின் நான்காவது தலைநகரமாக சந்திரகிரி கோட்டை விளங்கியது. [1]கோல்கொண்டா சுல்தான், பெனுகொண்டாவை [2] தாக்கியபோது, விஜயநகர மன்னர்கள், சந்திரகிரி கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். 1646ல் சந்திரகிரி கோட்டை கோல்கொண்டாவுடன் இணைக்கப்பட்டு, மைசூர் இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் சென்றது. 1792 முதல் இக்கோட்டை பாழடைந்து, பயன்பாட்டில் இல்லாது போயிற்று.[3]தற்போது இக்கோட்டையில் உள்ள இராஜா மகால் அரண்மனை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. ஆகஸ்டு 1639ல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு சந்திரகிரி கோட்டையை பயன்படுத்திக் கொள்ள, காளஹஸ்தி நாயக்க மன்னர் தமர்லா சென்னப்ப நாயக்கர் அனுமதி வழங்கினார்.[1] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia