சித்தூர் மாவட்டம்
சித்தூர் மாவட்டம் (தெலுங்கு: చిత్తూరు జిల్లా) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சித்தூர் நகரில் உள்ளது. 15,359 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,170,468 மக்கள் வாழ்கிறார்கள். இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் வடக்கில் கடப்பா மாவட்டமும் வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும் தெற்கில் தமிழ்நாடு மாநிலமும் மேற்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு தமிழ் பேசுவோரும் தெலுங்கு பேசுவாரும் சம அளவில் உள்ளனர் பெரும்பான்மையாக தமிழ் பேசுவோர் சித்தூர் மாவட்டத்தின் வேங்கட மலைக்கு தெற்கே வசிக்கின்றனர் சித்தூர் மாவட்டம் ஆந்திரோவோடு இணைக்கப்பட்டாலும் நகரி திருப்பதி திருமலை நாரயணவரம் போன்ற மண்டலங்களில் தமிழ் பேசுவோர் அதிக அளவில் உள்ளனர். மாவட்டம் பிரிப்பு4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய அன்னமய்யா மாவட்டம் மற்றும் திருப்பதி மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4] ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.[5] ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை தம்பள்ளபள்ளி,பீலேரு, மதனபள்ளி, புங்கனூர், சந்திரகிரி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு, நகரி, கங்காதர நெல்லூர், சித்தூர், பூதலபட்டு, பலமனேரு, குப்பம் ஆகியன.[5] இந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி, மதனபள்ளி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்கள் மாநகராட்சிகளாகும். மதனபள்ளி, காளஹஸ்தி, புங்கனூர், பலமனேரு, புத்தூர், நகரி ஆகிய ஊர்கள் நகராட்சிகளாகும். இந்த மாவட்டத்தை 66 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 1399 ஊர்கள் உள்ளன. [6].
குறிப்பிடத்தக்க நகரங்கள்நிகழ்வுதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மாவட்ட மேயர் கட்டாரி அனுராதா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.[7] இவற்றையும் பார்க்கவும்சான்றுகள்
வெளியிணைப்புக்கள் |
Portal di Ensiklopedia Dunia