சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்
சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் (Chandra X-ray Observatory) என்பது, கொலம்பியா விண்ணோடத்தில் "எஸ்டிஎஸ்-93" இல், நாசாவால், 1999, ஜூலை 23 ஆம் நாள் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். வெண் குறு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக மாறுவதற்குரிய திணிவெல்லையைத் தீர்மானித்த இந்திய-அமெரிக்கரான சுப்பிரமணியன் சந்திரசேகர் என்னும் இயற்பியலாளரின் பெயரைத்தழுவி இந்த அவதான நிலையத்துக்குப் பெயரிடப்பட்டது.[1] நாசாவின் நான்கு பெரும் அவதான நிலையங்களில் இது மூன்றாவது ஆகும். ஏவுமுன் இது உயர்தர எக்ஸ்-கதிர் வானியற்பியல் வசதி எனப்படது. இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. சந்திரா, முன்னைய எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு வலுக்குறைந்த எக்ஸ் கதிர்களை உணரக்கூடியது. முக்கியமாக சந்திராவில் பொருத்தப்பட்ட ஆடிகளின் உயர்ந்த கோணப் பிரிதிறன் (angular resolution) காரணமாகவே இது சாத்தியம் ஆகிறது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia