C. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்) [4]. லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் [5].
சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928இல் இவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது [6].
1928 இல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.[7] அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம்—19ஆவது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே -- மேலும் இரு கட்டுரைகளும்[8] பதிப்பாயின [9].
இவருக்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு 'அணுகுண்டு' போல வெடித்து பிரகாசமான 'சூப்பர் நோவா' என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.
பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.[11] இதனால் பல உயரிய விருதுகளை சந்திரசேகர் பெற்றார். நட்சத்திர ஆராய்ச்சிக்காக அறிவியலுக்காக 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். 1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.
சந்திரசேகர் எழுதிய நூல்கள்
நூல்கள்
Chandrasekhar, S. (1958) [1939]. An Introduction to the Study of Stellar Structure. New York: Dover. ISBN0-486-60413-6.
Chandrasekhar, S. (2005) [1942]. Principles of Stellar Dynamics. New York: Dover. ISBN0-486-44273-X.
Chandrasekhar, S. (1947). Heywood, Robert B. (ed.). The Works of the Mind:The Scientist. Chicago: University of Chicago Press. pp. 159–179. கணினி நூலகம்752682744. {{cite book}}: Invalid |ref=harv (help)
Chandrasekhar, S. (1995). Newton's Principia for the Common Reader. Oxford: Clarendon Press. ISBN0-19-851744-0.
குறிப்புகள்
Chandrasekhar, S. (1943). Stochastic Problems in Physics and Astronomy. Reviews of modern physics.
Spiegel, E.A. (2011) [1954]. The Theory of Turbulence : Subrahmanyan Chandrasekhar's 1954 Lectures. Netherlands: Springer. ISBN978-94-007-0117-5.
Chandrasekhar, S. (1983). On Stars, their evolution and their stability, Noble lecture. Stockholm: Noble Foundation.
இதழ்கள்
Chandrasekhar had published around 380 papers[12] in his life time. He wrote his first paper in 1928 when he was still an undergraduate student and last paper was in 1995. The University of Chicago Press published the papers of Chandrasekhar in six volumes.
Chandrasekhar, S. (1989). Selected Papers, Vol 2, Radiative transfer and negative ion of hydrogen. Chicago: University of Chicago Press. ISBN9780226100920.
Chandrasekhar, S. (1989). Selected Papers, Vol 3, Stochastic, statistical and hydromagnetic problems in Physics and Astronomy. Chicago: University of Chicago Press. ISBN9780226100944.
Chandrasekhar, S. (1990). Selected Papers, Vol 5, Relativistic Astrophysics. Chicago: University of Chicago Press. ISBN9780226100982.
Chandrasekhar, S. (1991). Selected Papers, Vol 6, The Mathematical Theory of Black Holes and of Colliding Plane Waves. Chicago: University of Chicago Press. ISBN9780226101019.
Srinivasan, G., ed. (1997). From White Dwarfs to Black Holes: The Legacy of S. Chandrasekhar. Chicago: The University of Chicago Press. ISBN0-226-76996-8.