சனத் நகர்
சனத் நகர் (Sanathnagar) இந்தியாவின் தெலங்காணாவில், ஐதராபாத்து நகரில் உள்ள ஒரு தொழில்துறை, குடியிருப்பு பகுதியாகவும், இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட புறநகர்ப்பகுதியாகவும் இருக்கிறது. [1] [2] கடந்த காலத்தில், இதன் ஒரு பகுதி அங்கு அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்குமான குடியிருப்புப் பகுதியாக இருந்தது. குடியிருப்பு பகுதி "ஒற்றை அறை குடியிருப்புகள்" என்று அழைக்கப்படுகிறது. இது அண்டைப் பகுதிகளான செக் குடியிருப்பு, பி. கே. குடா பகுதிகள், சுபாஷ் நகர் குடியிருப்பு, துளசி நகர், ஜெயபிரகாஷ் நகர் குடியிருப்பு, இ.எஸ்.ஐ பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது. பின்னணிசனத் நகரின் தொழில்துறை பகுதியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இரசாயன, மருந்து, மின் மற்றும் இயந்திர தொழில்கள் உள்ளன. பிரைட் ஸ்டார் ரப்பர், டிவிஸ், சிப்ரா, கிளாண்ட் பார்மா, மற்றும் லம்கோ போன்ற பெரிய தொழில்களும் பல பெரிய ஆட்டோமொபைல் சேவை மையங்களையும் கொண்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ், டாட்டா மோட்டார்ஸ், டொயோட்டா, செவ்ரோலெட், டேவூ, பஜாஜ் ஆட்டோ, வோல்வோ, ஸ்கோடா ஆட்டோ, மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. அஞ்சல் அலுவலகத்தின் பிரதான கிளையும் இந்த தொழில்துறை பகுதியில் அமைந்துள்ளது. பொறியியல் நிறுவனங்களான வோல்டாஸ் மற்றும் ஆல்வின் முன்பு இங்கு இருந்தன. வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட், கல்நார் தாள்கள் உற்பத்தியாளரான ஐதராபாத் தொழில் நிறுவனம் போன்வையும் இங்கு அமைந்துள்ளன . ![]() அரசியல்தலசனி சீனிவாச யாதவ் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியிலிருந்து சனத் நகர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராவார். [3] [4] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia