சமயத்துக்கு மக்கள் தரும் முக்கியத்துவம். வெளிர் பச்சை நிறம் குறைந்த முக்கியத்துவத்தையும், கரும் பச்சை நிறம் அதிக முக்கியத்துவத்தையும் காட்டுகின்றது. (2009ஆம் ஆண்டு தரவு)[1]
சமயமின்மை (Irreligion) (சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு) என்பது சமய அமைப்புகள் எதையும் பின்பற்றாத, சமயம் பற்றி கவலை கொள்ளாத, சமயப் புறக்கணிப்பு அல்லது சமய அமைப்புகளை எதிர்க்கும் நிலைப்பாடு ஆகும்.[2]இறைமறுப்பு, சமய அமைப்புகளோடு ஒத்துழையாமை கொள்கை, சமயச்சார்பற்ற மனிதநேயம் ஆகியன சமய நம்பிக்கைப் புறக்கணிப்பு எனும் வகைக்குள் அடங்கும். எதிர்-இறையியல் (antitheism), சமயக் அதிகாரப்படிநிலை எதிர்ப்பு, சமய அமைப்புகள் எதிர்ப்பு ஆகியன சமய எதிர்ப்பு நிலைப்பாடு எனும் வகைக்குள் அடங்கும். சமய கவலை அற்ற நிலையில் (அக்கறையின்மை - முக்கியமின்மைவாதம்) சமயம் பற்றி அலட்டிக் கொள்ளாமை அல்லது சமயத்தில் ஆர்வமின்மை ஆகியன அடங்கும். அறியவியலாமைக் கொள்கை, மூட-இறையியல் வாதம் (Ignosticism), இறையியலற்ற வாதம் (Nontheism), சமய ஐயவாதம், கட்டற்ற சிந்தனைவாதம் ஆகியன சமயத்தில் நம்பிக்கையின்மை எனும் வகைக்குள் அடங்கும். சமயமின்மை சூழலுக்கு ஏற்ப சமய நம்பிக்கைகளின் வடிவங்களையும் கொண்டிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய இயற்கையினை மட்டுமே இறையாகவும் அதற்கு மீறிய ஒரு சக்தி இல்லை என்றும் கொண்டிருந்த நிலைப்பாடு (Deism) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.[3]
2012 ஆண்டு மதிப்பீடு உலக மக்கட்தொகையில் 36% சமயமற்றோர் எனவும் 2005 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 9 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.[4]
2010 ஆண்டு அறிக்கை சமயமற்றோரில் பலர் சில இறை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் எனவும், ஆசியாவிலும் பசபிக்கிலும் இருந்து அதிகளவான சமயமற்றோர் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.[5]
மற்றுமொரு மூலத்தின் அடிப்படையில், சமயமற்றோரில் 40–50% ஏதாவது ஒரு கடவுள் அல்லது உயர் சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.[6]
மக்கள் தொகையியல்
கீழேயுள்ள அட்டவணை நாடுகளின் சனத்தொகையின் சமயமின்மையினை கூடியதிலிருந்து குறைந்ததற்கு வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.
↑The Religiosity Index is a measure of the importance of religion for respondents and their self-reported attendance of religious services. For religions in which attendance at services is limited, care must be used in interpreting the data. (Gallup WorldView)
↑"Adherents.com". Adherents.com. Archived from the original on 2018-12-26. Retrieved 2011-02-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help) Some publications
↑"Adherents.com". Adherents.com. Archived from the original on 2018-12-26. Retrieved 2011-02-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help) Some publications