குரோவாசியா
குரோவாசியா (Croatia, குரோவாசியம்: Hrvatska [xř̩ʋaːtskaː], குரோவாத்ஸ்க்கா, ஹரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு (Republika Hrvatska ⓘ), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும். 2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.[11] வரலாறு![]() குரோவாட்ஸ்க்கர்கள் பால்க்கன் பகுதியில் கிபி 7வது நூற்றாண்டில் குடியேறி டால்மேசியா, மற்றும் பன்னோனியா என்னும் இரு நகரங்கள் அமைத்தனர். நிலவமைப்புகுரோவாட்ஸ்க்கா தென் ஐரோப்பாவில் உள்ளது மாவட்டங்கள்குரோவாட்ஸ்க்கா நாடு 21 சுப்பானியா (županija) என்று அழைக்கப்படும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரோவாட்ஸ்க்காவின் பெரிய் நகரமும் தலைநகரமும் சாகிரேப் ஆகும். பொருளியல்குரோவாட்ஸ்க்கா சீரான பொருளியலுடன் இயங்கும் ஒரு நாடு. தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே கிரீசு தவிர்த்த நாடுகளில் மிகவும் முன்னேறிய பொருளியல் கொண்ட நாடு. 2007 ஆம் ஆண்டிற்கான மொத்த பொருள் உறபத்தியின் மதிப்பு (GDP) USD 68,208 பில்லியன், அல்லது தலா USD 15,355 க்கும் மேலானதாகும். மற்ற ஐரோப்பிய நாடுகளாகிய ருமானியா, பல்கேரியா, போலந்து, லாத்வியா போன்ற நாடுகளைக்காட்டிலும் உறபத்தி மிக்க நாடு. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia