சமாரியர்
சமாரியர் (Samaritans; எபிரேயம்: שומרונים) எனப்படுவோர் இசுரயேலர் அல்லது எபிரேயர் இனத்தை மூலமாகக் கொண்ட லெவண்ட் பகுதியில் உள்ள இனச்சமயக் குழு ஆகும். இவர்கள் சமாரிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். இச்சமாரிய சமயம் யூதக் குருசார் யூதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சமாரியர் சமாரிய திருமறையின் அடிப்படையில் தாங்கள் செய்யும் வழிபாடல் உண்மையானது என்றும், பாபிலோனுக்கு இசுரேலியரை சிறைபிடித்துச் செல்லு முன் இருந்த சமயம் அதுவே என்றும், அதனையே இசுரேல் தேசத்தில் எஞ்சியிருந்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டதென்றும் நம்புகின்றனர்.[4] இது யூதக் குருசார் யூதத்திற்கு நேர் எதிரானதும், யூதக் குருசார் யூதம் பாபிலோனிலிருந்து திரும்பிய யூதர்களினால் கொண்டு வரப்பட்டு, சமயத்தில் மாற்றம் செய்து புகுத்தப்பட்டதென்றும் சமாரியர் நம்புகின்றனர். உசாத்துணை
வெளி இணைப்புகள்சமாரியப் பார்வை
யூதப் பார்வை
சுயாதீனப் பார்வை
|
Portal di Ensiklopedia Dunia