சமூக நீதி (Social justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. பொதுவாக வேறுபாடுகளைப் பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் இதனைக் கணிக்கலாம். மேற்கத்திய நாடுகள் மற்றும் பழமையான ஆசிய நாடுகளில் சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனிநபர்களின் சமூக செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து, பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துவதாகும்.[1][2][3] தற்காலத்தில் உலகளாவிய பல சமூக அமைப்புகள் சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து, சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கலைக்கிறது.[4][5][6][7][8]
சமூக நீதி மூலம் ஒரு சமூகத்தில் உள்ள அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களின் உரிமையையும் கடமையையும் உறுதிசெய்து, சமுதாயத்தின் ஆதாயங்களையும் சுமைகளையும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. வரி, சமூகக் காப்பீடு, பொது உடல்நலவியல், பொதுக்கல்வி, பொதுப்பணி, தொழிலாளர் சட்டம், சந்தை ஒழுங்காணையம் போன்ற நிறுவனங்களில் வளங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ளமுடிகிறது.[9]
↑John Rawls, A Theory of Justice (1971) 4, "the principles of social justice: they provide a way of assigning rights and duties in the basic institutions of society and they define the appropriate distribution of benefits and burdens of social co-operation."
↑"About us". socialjustice.nic.in. Retrieved 8 January 2019.