மேற்கத்திய நாகரிகம்![]() மேற்கத்தியப் பண்பாடுகள் (western culture) அல்லது மேற்கத்திய நாகரிகம் , சுருங்க மேற்கு ஐரோப்பா (மேற்கத்திய கிறித்தவ நாடுகள் மட்டும், கிரீசும் சைப்பிரசும்), அமெரிக்காக்கள், ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா (சில பகுதிகள்) மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் பயிலும் பண்பாடுகளையும் நாகரிகத்தையும் குறிக்கும். மேற்குமயமாக்கம் என்பது ஒரு நாட்டின் பண்பாடு மேற்கத்தியப் பண்பாட்டுக் கூறுகளைத் தழுவித் தன்னை மாற்றிக் கொள்வதாகும். வரலாற்றாளர் ஆர்னால்டு டோய்ன்பீ, கிறித்தவ சமயத்தை பெரும்பான்மையாகப் பின்பற்றும் உலகப் பகுதிகள், மேற்கத்திய பண்பாட்டைக் கடைப் பிடிப்பவை என வரையறுத்திருக்கிறார்.[1] இந்த வரையறுப்பின்படி தற்கால ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் மேற்கத்தியப் பண்பாட்டைச் சேர்ந்தவையாம். 1950களில் இருந்து பல ஆப்பிரிக்கர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியுள்ளனர். மேற்கத்தியப் பண்பாட்டின் மொழிகளாக ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேயம், பிரான்சியம், இடாய்ச்சு, டச்சு, இத்தாலியம், ஆபிரிகான்சு, டகலோக் ஆகியன உள்ளன. மேற்கத்தியப் பண்பாட்டின் அடையாளங்களாக மேற்கத்திய கிறித்தவம், ஐரோப்பியப் பண்பாடு (மிகக் குறிப்பாக கிரேக்க, உரோமை மரபுகள், ஐரோப்பிய மொழிகள், இடாய்ச்சு நிறுவனங்கள், மறுமலர்ச்சிக் காலம், பரோக் பாணி, அறிவொளிக் காலம், இருபதாம் நூற்றாண்டின் நவீனவிய இயக்கங்கள்) உள்ளன. இந்தப் பண்பாட்டை ஐரோப்பா (போர்த்துகல், எசுப்பானியா, பிரான்சு, இத்தாலி, மால்ட்டா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஐசுலாந்து, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, லிதுவேனியா, லாத்வியா, எசுத்தோனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, சுலோவீனியா, அங்கேரி, குரோவாசியா, கிரேக்கம் (நாடு), சைப்பிரசு ஆகியவை); அமெரிக்காக்கள் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ, சிலி, கோஸ்ட்டா ரிக்கா, அர்கெந்தீனா, உருகுவை, பிரேசில், வெனிசுவேலா, கொலொம்பியா, பெரு, எக்குவடோர், பொலிவியா, பெலீசு, குவாத்தமாலா, ஹொண்டுராஸ், பனாமா, எல் சால்வடோர், கியூபா, டொமினிக்கன் குடியரசு ஆகியவை) ; ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் காணலாம். இந்நாடுகள் அனைத்தும் சேர்ந்த சமூகத் தொகுப்பு, 'மேற்கத்திய சமூகம்' எனக் குறிப்பிடப்படுகிது. ஆசியாவில் மிகவும் மேற்குமயமாக்கப்பட்ட நாடாக இசுரேல் விளங்குகின்றது. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia