சமூக மானிடவியல்சமூக மானிடவியல் என்பது, மானிடவியலின் முக்கியமான ஒரு துணைத்துறை. சிறப்பாக, ஐக்கிய இராச்சியத்திலும், அது சார்ந்த பொதுநலவாய நாடுகளிலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியலில் இருந்து வேறுபட்ட தனித் துறையாகப் பார்க்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்காவில் இத்துறை பண்பாட்டு மானிடவியலின் அல்லது புதிதாக உருவான சமூகபண்பாட்டு மானிடவியலின் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. பண்பாட்டு மானிடவியலின் கருத்துக்கு முரணாக, பண்பாட்டையும் அதன் தொடர்ச்சியையும் பிற விடயங்களில் தங்கியிருக்கும் ஒரு மாறியாகவே சமூக மானிடவியல் பார்க்கிறது. சமூக மானிடவியலின் மேற்படி கருத்தின்படி, பண்பாடானது சமூக வாழ்க்கையின் பல்வேறுபட்ட அமைவிடங்கள், நோக்குகள், பிணக்குகள், முரண்பாடுகள் போன்றவை உள்ளிட்ட வரலாற்று, சமூகப் பின்னணிகளில் பொதிந்துள்ளது. வழமைகள், பொருளாதார மற்றும் சமூக அமைப்புகள், சட்டமும் பிணக்குத் தீர்த்தலும், நுகர்வு பரிமாற்றக் கோலங்கள், உறவுமுறையும் குடும்ப அமைப்பும், பாலினத் தொடர்புகள், குழந்தை பெறுதலும் சமூகமயமாக்கமும், சமயம் போன்ற விடயங்களில் சமூக மானிடவியலாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். அதேவேளை உலகவியம், இனவன்முறை, பால்சார்ந்த ஆய்வுகள், இணையவெளியில் உருவாகும் பண்பாடுகள் போன்றவற்றிலும் தற்கால சமூக மானிடவியலாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia