சம்பா மாவட்டம், ஜம்மு காஷ்மீர்
சம்பா மாவட்டம் (Samba District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிதாக 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். ஜம்மு மண்டலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் சம்பா மாவட்டமும் ஒன்றாகும். இதன் தலைமையிடம் சம்பா ஆகும். மாவட்ட எல்லைகள்வடகிழக்கில் உதம்பூர் மாவட்டம், தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தான், தென்கிழக்கில் கதுவா மாவட்டம், வடமேற்கில் ஜம்மு மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது சம்பா மாவட்டம். நிர்வாகம்904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சம்பா மாவட்டம் சம்பா, விஜய்பூர், புர்மண்டல், காக்வால் என நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சிக்காக சம்பா, விஜய்பூர், புர்மண்டல், காக்வால் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது. [1]ஊராட்சி ஒன்றியங்கள் பல கிராமப் பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. சம்பா மாவட்டத்தின் பெரிய கிராமம் ராஜ்புரா கிராமம் ஆகும். அரசியல்இந்த மாவட்டத்தில் சம்பா, விஜய்பூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. அதில் சம்பா சட்டமன்ற தொகுதி பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]சம்பா மாவட்டத்தின் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் ஜம்மு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவை.[3] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சம்பா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 318,898 ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 169,124 ஆகவும் மற்றும் பெண்கள் 149,774 ஆகவும் உள்ளனர். ஆண் - பெண் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 353 நபர்கள் வீதம் உள்ளனர். எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 2,28,139 ஆக உள்ளனர். எழுத்தறிவு 81.41% ஆக உள்ளது. ஆண்கள் எழுத்தறிவு 88.41% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 73.64% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் 38,669 ஆக உள்ளனர். [4] சமயம்சம்பா மாவட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2,75,311 (86.33 %) ஆகவும், இசுலாமியர்களின் தொகை 22,950 ஆகவும், சீக்கியர்களின் தொகை 17,961 ஆகவும் உள்ளனர். [5] போக்குவரத்து வசதிகள்சாலைப் போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை 1எ சம்பா மாவட்டத்தை மாநிலத்தின் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. தொடருந்து சேவைஇந்திய இரயில்வேயின் தொடருந்துகள் ஜம்மு, உதம்பூர், சண்டிகர் மற்றும் புதுதில்லியுடன் இணைக்கிறது. [6] விமான சேவைகள்அருகில் உள்ள விமான நிலையம், சம்பாவிலிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில், ஜம்முவில் உள்ள சத்வாரி விமான நிலையம் ஆகும்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia