சம்பா, ஜம்மு காஷ்மீர்
சம்பா (Samba) வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பிரதேசத்தில் அமைந்த சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சம்பா நகரம் ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 384 மீட்டர் உயரத்தில் சிவாலிக் மலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) சம்பா நகரத்தின் வழியாகச் செல்கிற்து. மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் பை, 1.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13 வார்டுகளும், 2,566 வீடுகளும் கொண்ட சம்பா நகராட்சியின் மக்கள் தொகை 12,700 ஆகும். அதில் ஆண்கள் 6,979 மற்றும் பெண்கள் 5,721 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 820 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1365 (10.75%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.45% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.45%, இசுலாமியர் 0.47%, கிறித்தவர் 2.08%, சீக்கியர்கள் 1.76% ஆக உள்ளனர்.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia